அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சி பிணவறையில் இதயத்தை தேடிய இன்ஜினியர் – திகிலில் மருத்துவர்கள்

0

திருச்சியில் அடகு நகையை விற்க

திருச்சி பிணவறையில் இதயத்தை தேடிய இன்ஜினியர் – திகிலில் மருத்துவர்கள்

திருச்சி மகாத்மா காந்தி அரசு மருத்துவமனையில் நேற்று 06/12/2021 இரவு மர்ம நபர் ஒருவர் பிணவறைக்குள் இருந்து பிடிபட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.

Angusam Cinema - அங்குசம் சினிமா சேனல்

நேற்று நள்ளிரவு 12 மணி அளவில் பிணவறையில் உள்ளே 28 வயது மதிக்கத்தக்க நபரொருவர், உள்ளே இருந்த பிரேதங்களை எடுத்துப் பார்த்து கொண்டிருந்ததுடன், அங்கு பிரேத பரிசோதனை செய்யப்பட்டு தனியாக வைக்கப்பட்டிருந்த இதயத்தை கையில் எடுத்து பார்த்துக் கொண்டிருந்துள்ளார்.

அப்போது தற்செயலாக உள்ளே வந்த மருத்துவமனை ஊழியர்கள் ஒரு நபரை பார்த்து அதிர்ச்சி அடைந்து கையும் களவுமாக பிடித்தனர்.

https://www.livyashree.com/

பின்னர் மருத்துவமனை காவல் நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.

போலீசார் வரவழைக்கப்பட்டு விசாரித்ததில், கிருஷ்ணராயபுரத்தை சேர்ந்த விவேக் என தெரியவந்தது.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

இன்ஜினியரிங் படித்து முடித்த இவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது நண்பர் விபத்தில் இறந்ததை அடுத்து பெரும் மன உளைச்சலுக்கு தள்ளப்பட்டார்.

பெற்றோர்கள் இல்லாத நிலையில் உறவினரின் அரவணைப்பில் வளர்ந்துள்ளார்.

இந்நிலையில் நேற்று இரவு பிணவறையில் பின்கதவு வழியாக ஏறி குதித்து உள்ளே வந்ததாக கூறப்படுகிறது.

மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் விவேக் அளித்த பதில், தெளிவானதாக இல்லாததால் உறவினர்களை அழைத்து விசாரித்துள்ளனர் அப்போது விவேக் மனநோயால் பாதிக்கப்பட்டு இருப்பது தெரிய வந்தது.

மேலும் விவேக் உறவினர்களுக்கு அழைத்துச் செல்ல போலீசார் அழைப்பு விடுத்துள்ளனர்.

நள்ளிரவில் பிணவறையில் புகுந்த நபரால் பெரும் பரபரப்பு மருத்துவமனை வளாகத்தில் நேர்ந்தது.

– இந்திரஜித்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

அங்குசம் சினிமா கார்னர் 2025” குறும்பட போட்டி ! ரூ.1,00,000/- பரிசுத் தொகை !

Leave A Reply

Your email address will not be published.