உடன்பிறப்புகள் முதல் அதிகாரிகள் வரை திக்குமுக்காட வைக்கும் அதிகாரப் போட்டி! வீடியோ

0

மத்திய மண்டலத்திற்கு உட்பட்ட பகுதியில் இருக்கக்கூடிய மீசை காரா அமைச்சரும், வாரிசு அமைச்சரும் எலியும் பூனையும் என்பது மாவட்ட மக்கள் அனைவரும் அறிந்ததே.

 

இதனாலேயே மீசை காரா அமைச்சர் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் வாரிசு அமைச்சரின் மாவட்டத்தைச் சேர்ந்த நிர்வாகிகளும் உறவினர்களாக இருந்தாலும் கூட, பொதுவெளியில் பேசுவதை தவிர்த்து வருகின்றார்கள். வாரிசு அமைச்சர் பொறுப்பு வழங்கப்பட்ட பிறகு பத்துக்கும் மேற்பட்ட நிர்வாகிகளை அதிரடியாக பொறுப்புகளிலிருந்து தூக்கிவிட்டார், இதனால் பதவியைக் காப்பாற்ற வேண்டும் என்ற அச்சத்தில் மாவட்ட நிர்வாகிகளின் அரசியல் நகர்ந்துகொண்டிருக்கிறது.
இப்படி அமைச்சர்களுக்கு இடையே இருக்கக்கூடிய போட்டி கட்சியினரை மட்டுமின்றி அதிகாரிகளையும் விட்டு வைக்கவில்லையாம்.

அமைச்சர் நிகழ்ச்சிகளில் பங்கேற்கும் அதிகாரிகள் அச்ச உணர்வோடு நிகழ்ச்சியில் பங்கேற்கிறார்களாம். இந்த அமைச்சர் நிகழ்ச்சி பங்கேற்பதால், அந்த அமைச்சருக்கு ஒருவேளை பிடிக்காமல் போய்விடுமோ என்ற அச்சத்துடனே அதிகாரிகள் இருக்கின்றார்களாம்.

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் வர இருப்பதால் இரண்டு அமைச்சரையும் சமாளிக்கக்கூடிய ஆய்வாளர்களையே காவல்நிலையத்தில் அமர்த்த வேண்டும் என்பதால் சில தினங்களுக்கு முன்பு காவல் ஆய்வாளர்கள் திடீர் மாற்றம் செய்யப்பட்டிருக்கின்றார்கள்.

அமைச்சர்களுக்கு இடையே இருக்கும் போட்டி உடன் பிறப்புகள் முதல் அதிகாரிகள் வரை அனைவரையும் திக்குமுக்காட வைத்தது வருகிறது.

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.