அத்துமீறும் ரயில்வே அதிகாரிகள் கண்டு கொள்ளுமா நிர்வாகம் ! வீடியோ

0

அத்துமீறும் ரயில்வே அதிகாரிகள் கண்டு கொள்ளுமா நிர்வாகம்.

இந்தியாவிலேயே அரசு சார்ந்த முக்கிய துறையாக கருதப்படுவது ரயில்வே துறை. பல்வேறு கட்டமைப்புகளை கொண்டுள்ள துறையானது.

ரயிலில் பயணிக்கின்ற ஒவ்வொரு மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதில் தலையாயக் கடமையாக வைத்துள்ளனர்.

அந்த வகையில் ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் ரயில்வே பாதுகாப்பு படை, ரயில்வே போலீசார் ஆகியோர் முன்னெச்சரிக்கை பாதுகாப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவர்கள் மட்டும்தான் மக்களின் நலனில் அக்கறை உள்ளவர்களா என்றால் இல்லை

ஒவ்வொரு ரயில் நிலையத்திலும் உள்ள ஸ்டேஷன் மாஸ்டர் முதல் கடைகோடி உள்ள அனைத்து ரயில்வே ஊழியர்களும் அதற்கு பொறுப்பானவர்கள் தான்.


இந்நிலையில் தான் திருவாரூர் ரயில் நிலையத்தில் பாதுகாப்பை நிலைநிறுத்தி காக்க வேண்டிய அதிகாரிகளே, பயணிகளின் உயிருக்கு ஆபத்தாக இருந்து வருகின்றனர்.

இந்திய தண்டனைச் சட்டம்-279, இந்திய ரயில்வே பாதுகாப்பு சட்டம் -161, இந்த சட்டத்தின் படி அதிகாரிகளே விதிகளை மீறி நடந்து வருகின்றனர்.

ரயில் நிலையத்திற்குள் இருசக்கர வாகனத்தை ஓட்டிச் செல்வது என்பது மிகப்பெரிய குற்றமாகும்.

வாகனத்தை ஓட்டிச் செல்பவர்களால் பயணிகளுக்கோ, ரயிலுக்கு சேதம் ஏற்பட்டால் ரயில்வே பாதுகாப்பு சட்டத்தின்படி ரயில்வே பாதுகாப்பு படை அதிகாரிகள், ரயில்வே போலீசார் நடவடிக்கை மேற்கொள்வார்கள்.

 

ஆனால் தற்போது திருவாரூர் ரயில் நிலையத்தில் ஸ்டேஷன் மாஸ்டர் முதல் ஆர்.பி.எஃப் அதிகாரிகள் வரை ரயில் நிலையத்திற்குள் பிளாட்பார்மில் வாகனம் ஓட்டி பழகிச் வருகின்றனர்.

இது எவ்வளவு பெரிய ஆபத்து என்று அவர்களுக்கே நன்றாக தெரியும் இருந்தாலும், அதிகாரிகளின் அலட்சியப் போக்கினாள் அசம்பாவிதம் நடக்கவும் வாய்ப்பு உள்ளது.

மக்களுக்கு எடுத்துக்காட்டாக இருக்க வேண்டிய அதிகாரிகளே இதுபோன்ற சட்ட விரோத செயல்களுக்கு உட்படுகின்றனர்.

இன்னும் சில அதிகாரிகள் வாகனத்தை ஒட்டியபடி பிளாட்பார்மில் செல்போனும் பேசிக் கொண்டு வருவது வழக்கமாக இருந்து வருகிறது.

அத்துமீறும் ரயில்வே அதிகாரிகள் கண்டு கொள்ளுமா நிர்வாகம்.

 

கடந்த 2 வருடத்திற்கு முன்பு திருச்சி மாநகரில் உள்ள ஒரு முக்கிய ரயில் நிலையத்திற்குள் ரயில்வே ஊழியர் ஒருவர் தனது ஸ்கூட்டியை ஓட்டி சென்ற போது,

அங்குள்ள பயணி ஒருவர் அதை வீடியோ எடுத்து சமூக வலைத்தளங்களில் வெளியிட்டிருந்தார். அதன்மூலம் ரயில்வே நிர்வாகம் சம்பந்தப்பட்ட ஊழியர் மீது நடவடிக்கை மேற்கொண்டது.

இந்நிலையில் இதுபோன்ற சம்பவம் அரங்கேறி இருப்பது பெரும் பூகம்பத்தை ஏற்படுத்தி வருகிறது.

கண்டுகொள்ளுமா ரயில்வே நிர்வாகம்.

– இந்திரஜித்

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடிவர..

Leave A Reply

Your email address will not be published.