அதிமுக அலுவலகத்தில் ஜெயக்குமார் – செல்லூர் ராஜு இடையே கடுமையான வாக்குவாதம் !
சில தினங்களுக்கு முன்பு முன்னால் அமைச்சர் ஜெயக்குமாரின் தந்தை குறித்து செல்லூர் ராஜு அவதூறு கருத்துக்களை கூறுவதுபோல வாட்ஸ் அப்பில் ஆடியோ ஒன்று வெளியானது. இதையடுத்து செல்லூர் ராஜு மீது ஜெயக்குமார் தலைமையிடம் புகார் அளித்திருந்தார்.
இந்த நிலையில் அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் தேர்தலுக்கான விருப்ப மனுவை அளிப்பதற்காக ஓபிஎஸ், இபிஎஸ் இணைந்து இன்று தலைமை அலுவலகத்திற்கு வந்திருந்தனர். இதனால் கட்சி அலுவலகம் முழுக்க தொண்டர்கள் பலரும் பெருமளவில் கூடியிருந்தனர்.
இந்த நிகழ்ச்சியில் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமாரும், செல்லூர் ராஜூவும் ஒருவரை ஒருவர் சந்தித்தபோது, ஜெயக்குமார் சொல்லு ராஜுவிடம், “என் தந்தையை குறித்து பேசுவதற்கு நீன் யார்” என்று கேள்வியை எழுப்ப. “அது என்னுடைய குரல் அல்ல” என்று செல்லூர் ராஜூ மறுத்தார். இதையடுத்து இருவருக்கும் இடையே கடுமையான வாக்குவாதம் ஏற்பட்டது. இந்த நிலையில் மூத்த நிர்வாகிகள் இருவரையும் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். இதனால் இன்று அதிமுக அலுவலகம் சிறிது நேரம் பரபரப்போடு காட்சியளித்தது.