உதயநிதி என்ன, இன்பநிதி வந்தாலும் ஏற்றுக்கொள்வார்கள் – கடம்பூர் செ.ராஜூ பேச்சு!
தூத்துக்குடி மாவட்டம் பசுவந்தனையில் அதிமுக நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் முன்னாள் அமைச்சர்கள் கடம்பூர் செ.ராஜூ, வைகைச் செல்வன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர்.
கூட்டத்தில் முன்னாள் அமைச்சரும் கோவில்பட்டி சட்டமன்ற உறுப்பினருமான கடம்பூர் செ.ராஜூ “உதயநிதி மட்டுமல்ல இன்ப நிதி வந்தாலும் ஏற்றுக் கொள்ள கூடிய நிலையில் இருப்பதாக திமுக மூத்த அமைச்சர்கள் புலம்பும் நிலை உள்ளது. கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டிய ஆட்சி தான் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி.” என்பதாக குறிப்பிட்டார்.
மேலும், அவர் பேசுகையில், “நிழலின் அருமை வெயிலில் தெரியும், திமுக ஆட்சியில் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை, விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு சரியில்லை ,கொரோனா காலத்தில் சிறப்பாக செயல்பட்டதாக பிரதமர் நரேந்திர மோடி பாராட்டிய ஆட்சி தான் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி , 2026 தேர்தல் அதிமுகவிற்கு சாதகம், திமுகவிற்கு பாதகம்.
2026 சட்டமன்ற தேர்தலில் திமுகவை திருப்பி தாக்கும் ஏவுகணை தான் அவர்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகள் தான் என்றும் உதயநிதி மட்டுமல்ல இன்ப நிதி வந்தாலும் ஏற்றுக் கொள்ள கூடிய நிலையில் இருப்பதாக திமுக மூத்த அமைச்சர்கள் புலம்பும் நிலை உள்ளது என்றார்.
– பாரதிதாசன்.