இரண்டு பேரால் இம்சைக்குள்ளான சுபாஸ்கரன்

0

திருச்சியில் அடகு நகையை விற்க மறு அடகு வைக்க

கிட்டத்தட்ட இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு மகிழ்திருமேனி டைரக்‌ஷனில் அஜீத் நடிக்கும் ‘விடாமுயற்சி’ படத்தை ஆரம்பித்தார் லைக்கா சுபாஸ்கரன். படத்தின் 90% படப்படிப்பு, அஜர்பைஜானில் நடந்ததால், 250 கோடி பட்ஜெட் கொஞ்சம் கொஞ்சமாக ஏறி, இப்ப 400 கோடி வரை எகிறியடித்து நிற்கிறது. இதனால் கதிகலங்கி நிற்கிறார் சுபாஸ்கரன். இருந்தாலும் அதை வெளியில் காட்டிக் கொள்ளாமல் சிரித்தபடியே சமாளித்து, இந்த பொங்கலுக்கு ‘விடாமுயற்சி’யை ரிலீஸ் பண்ணும் முடிவுடன் தேதியையும் கடந்த இருவாரங்களுக்கு முன்பு அறிவித்தது லைக்கா.

‘விடாமுயற்சி’ பாதி ஷூட்டிங் முடிந்த நிலையில், அதாவது ஏழெட்டு மாதங்களுக்கு முன்பு ஆதிக் ரவிச்சந்திரன் டைரக்‌ஷனில் ‘குட் பேட் அக்லி’ படத்தில் கமிட்டானார் அஜீத். இந்தப் படத்தின் தயாரிப்பாளரும் தெலுங்கு தேசத்தைச் சேர்ந்தவர் தான். பூஜையுடன் படம் ஆரம்பிக்கப்பட்ட அன்றே 2025 பொங்கல் ரிலீஸ் என அறிவித்தது தயாரிப்புத் தரப்பு.

Dhanalakshmi Srinivasan University | Samayapuram ...

அஜித், மகிழ்திருமேனி
அஜித், மகிழ்திருமேனி

இப்போது  பொங்கலுக்கு ‘விடாமுயற்சி’ ரிலீஸ் என லைக்கா குபீரென குறுக்கே புகுந்ததால், ‘குட் பேட் அக்லி’ தயாரிப்பாளருக்கு வேர்த்துக் கொட்டியது. “டோண்ட் ஒர்ரி, பீ ஹேப்பி” என களத்தில் குதித்த அஜீத், சுபாஸ்கரனிடம் முறைப்புக் காட்ட, ‘விடாமுயற்சி’ பொங்கல் ரிலீஸ் பிளானைக் கைவிட்டது லைக்கா.

அங்குசம் தற்போதைய இதழ்.. படிக்க..

இதனால் செம ஹேப்பியான தெலுங்கு தயாரிப்பாளர், ‘குட் பேட் அக்லி’ 2025 ஏப்ரல் 10-ஆம் தேதி ரிலீஸ் என அறிவித்துவிட்டார். அதனால் ‘விடாமுயற்சி’யை மே மாதம் ரிலீஸ் பண்ணலாமா? இல்ல அதுக்குப் பிறகு ரிலீஸ் பண்ணலாமா? என மண்டையைப் பிய்த்துக் கொண்டிருக்கிறார் சுபாஸ்கரன்.

🛑வெறும் 2500 முதல் LED TV |50%Opening Offer |BISMI ELECTRONICS

தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.

மல்டி மில்லினரான சுபாஸ்கரனையே மண்டை காய வைத்து, பெரிய இம்சைக்குள்ளாக்கியதில் லைக்காவின் சி.இ.ஓ. தமிழ்க்குமரனும் ஃபைனான்ஸ் கண்ட்ரோலர் ஒருவரும் தான் முக்கியக் காரணம் என்கிறார்கள் கோலிவுட்டில்.

 தமிழ்க்குமரன்
தமிழ்க்குமரன்

‘விடாமுயற்சி’யைப் பொறுத்துவரை சுபாஸ்கரனை இம்சைப்படுத்துவது அஜீத்தும் டைரக்டர் மகிழ் திருமேனியும் தான் என்பதையும் கோலிவுட்டில் கூடிக்கூடிப் பேசுகிறார்கள்.

ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்….ஸ்ஸப்பா….. ஓவரா கண்ணக்கட்டுதே…

 

— மதுரை மாறன்.

 

அங்குசம் இதழ் உங்கள் இல்லம் தேடி வர... 🤔🤔 #angusam #trichy

Leave A Reply

Your email address will not be published.