உங்களின் திமுக எதிர்ப்பு ஒரு பிழைப்புவாத வெறுப்பு !
மதிமாறன் திமுக அரசின் மூலமாகத் தனிப்பட்ட முறையில் லாபம் அடைந்தவன் அடைந்தவர் அதனால் ஆதரிக்கிறான் ஆதரிக்கிறார்- எனச் சங்கிகள் மட்டுமல்ல, திமுக எதிர்ப்பு மனோபாவம் கொண்ட எனதருமைத் தோழர்கள்கூடப் பேசுகிறார்கள்.
இந்த 5 ஆண்டுகளில் தனிப்பட்ட முறையில் நேரடியாகவோ மறைமுகமாகவே நானோ என் குடும்பத்தாரோ என் தோழர்களோ எவ்வளவோ நெருக்கடியான சூழல்கள் ஏற்பட்டபோதும் யார் முன்பும் உதவிக்கேட்டு நின்றதுமில்லை. பெற்றதுமில்லை.
இத்தனைக்கும் எனக்கு நன்கு அறிமுகமான அமைச்சர்கள், தெரிந்த MPகள், நண்பர்களாக இருக்கிற MLAகள், குடும்ப நண்பர்களான அதிகாரிகள் இவர்களிடம் ஒரு train ticket eq formகூடக் கேட்டதில்லை.
அரசு நடத்திகிற கருத்தரங்குகளில் ஒரே ஒரு புத்தகக் காட்சியில் மட்டும் பேசினேன். (அதிமுக ஆட்சியில்கூட நிறையப் பேசியிருக்கிறேன்)
மக்கள், ‘அரசு எங்களுக்கு என்ன நலத்திட்டங்கள் செய்திருக்கிறது?’ என்ற அடிப்படையில்தான் ஒரு கட்சியை ஆதரிப்பார்கள். அதுதான் நியாயமும்கூட.
ஒரு முற்போக்காளரும் ‘அரசு எனக்கு என்ன செய்திருக்கிறது?’ என்ற அடிப்படிடையில் ஒரு கட்சியை ஆதரிப்பது எதிர்ப்பது என்று முடிவு செய்ய முடியாது. கூடாது.
அவர்களும் ‘மக்களுக்கு அரசு என்ன செய்திருக்கிறது?’ என்ற அடிப்படையில்தான் செயல்பட முடியும்.
அந்தவகையில் திமுகவின் நலத்திட்டங்கள் இதுவரை எந்த அரசும் செய்யாத அளவிற்குச் சிறப்பாக நடைமுறைபடுத்தியிருக்கிறது.
ஆனால், முற்போக்காளருக்கு ஒரு அரசை ஒரு கட்சியை ஆதரிப்பதற்கு நலத்திட்டங்கள் மட்டும் போதாது. சிலநேரங்களில் பிற்போக்கான அரசுகூடச் சில நலத்திட்டங்களைச் செய்துவிட முடியும்.
தமிழ் விரோத நடவடிக்கைகளோடு, மக்களை ஜாதி, மத ரீதியாகப் பிளவுபடுத்தி ஆதாயம் தேடும் வன்முறையான அரசை எப்படி ஆதரிக்க முடியும்? அந்த அரசை எப்படியாவது ஒழிப்பதுதான் முற்போக்காளரின் கடமை.
பாஜக என்கிற மக்கள் விரோத கட்சியை அரசியல் கட்சி என்கிற அடிப்படையில் மட்டுமல்ல, அதன் ideology வரை போர்குணத்தோடு இந்திய அளவில் எதிர்க்கிற ஒரே தேர்தல் கட்சி, திமுகவும் அதன் தலைவர் தளபதி M. K. Stalin அவர்களும். எதிர்க்கட்சி காலத்திலிருந்து இன்றைய நாள் வரை அசராமல் அடித்து ஆடுகிறார்.
இந்த நீண்ட விளக்கம் எதனால்?
தனக்கு லாப நஷ்ட கணக்குப் பார்த்து திமுகவை எதிர்க்கும் சில பாஜக எதிர்ப்புப் முற்போக்காளர்கள் பதிலுக்குப் பரிந்துரைப்பது திமுகவைவிடத் தீவிரமான கட்சியாக இருக்க வேண்டும்.
ஆனால் அவர்கள் பாவம் விஜய் ரசிகர் மன்றத்தில் இணைந்து விடுகிறார்கள்.
விஜய்க்கு செல்வாக்கு இருக்கிறது என்ற ரசிக பிம்பத்தைக் கட்டமைத்து அதன் பின் ஒளிந்து கொள்கிறார்கள். ஆனால், விஜய் அரசியலுக்கு வருவதற்கு முன் யோக்யதை எனன்ன? அவர் சினிமா சமூகச் சீரழிவை ஏற்படுத்தவில்லையா? ரசிகர்களைக் கட்டணக் கொள்ளையடிக்கவில்லையா? என்பதைப் பேச மறுக்கிறார்கள்.
அரசியலுக்கு வந்தபின் அவரின் ஊதாரித்தனமான அணுகுமுறை குறித்து உங்கள் கருத்தென்ன?
பாஜக எதிர்ப்பு முற்போக்காளரான உங்களால் அதிமுகக் கூட்டணியை ஆதரிக்க முடியாது. அதற்காக நீங்கள் விஜயை பரிந்துரைக்கிறீர்கள்.
உங்களைப் பற்றிய உண்மையைச் சொல்லவா?
நீங்கள் பாஜக எதிர்ப்பாளர் அல்ல, விஜய் ஆதரவாளரும் இல்லை.
தனிப்பட்ட முறையில் திமுக அரசின் மூலமாக உங்களுக்குக் காரியம் நடக்கவில்லை. உங்களுக்குத் தெரிந்தவர்கள் பயன்பெறுகிறார்கள் நமக்கில்லையே என்கிற காழ்ப்புணர்ச்சி.
உங்களின் திமுக எதிர்ப்பு ஒரு பிழைப்புவாத வெறுப்பு-வே. மதிமாறன்.
பின் குறிப்பு: நான், திமுக ஆளுங்கட்சியாக ஆனதற்குப் பிறகு ஆதரித்தவன் இல்லை. அது ஆளுங்கட்சியாக ஆகவேண்டும் என 10 ஆண்டுகளுக்கு முன்பிருந்தே திமுக அல்லாத எனது மேடைகளில் பேசியவன்.
பல திமுக எதிர்ப்பு முற்போக்காளர்களை இயக்கங்களின் அவதூறுகளை தகர்த்து அவர்களையும் திமுக பக்கம் திருப்பியவன். –
— வே.மதிமாறன்








Comments are closed, but trackbacks and pingbacks are open.