அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இந்த தேர்தலில் வென்றது என்னவோ பாஜக தான்!

திருச்சியில் அடகு நகையை விற்க

டெல்லிக்கும் தி.மு.க.விற்கும் நடந்த நேரடி யுத்தத்தில் இப்போதைய வெற்றி டெல்லிக்குத் தான். இரண்டு திராவிடக் கட்சிகளையும் ஒழிக்க வேண்டும் என்கிற பா.ஜ.க.வின் கனவு நனவாகத் தொடங்கியிருப்பது மாநில வளர்ச்சிக்கு நல்லதல்ல.

இன்றைய தேதியில் திராவிடக் கட்சிகள் பின்னடைவைச் சந்தித்தாலும் இந்தத் தேர்தலில் வென்றது என்னவோ பா.ஜ.க.தான் என்பதை நாம் ஏன் திரும்பத் திரும்பச் சொல்கிறோம் என்றால் நாளை ஆட்சியில் அமரப் போகும் அரசு பா.ஜ.க.வின் கைப் பாவையாகத் தான் மாறப் போகுது. டெல்லியின் கட்டுப்பாட்டில் தான் நாளைய தமிழக அரசு இருக்கப் போகிறது. பா.ஜ.க.வை வீரியமாக எதிர்க்கும் தி.மு.க.வை பின்னுக்குத் தள்ளியதில் தங்களது தலையிலேயே மண்ணள்ளிப் போட்ட  இளைய தலைமுறைக்கு இதனால் எந்தக் கவலையுமில்லை.அவர்கள் பாட்டுக்கு அடுத்த வேலையை பார்க்கப் போய்விடுவார்கள்.

இந்த வார MAY 6 அங்குசம் இதழில்…

அதிகாரத்தை இழப்பதும் மீட்டெடுப்பதும் தி.மு.க.வுக்கு பழகிப் போன ஒன்று. ஆனால் வரப் போகும் ஐந்தாண்டுகள் நமக்குப் புது வித அனுபவம். அனுபவமில்லாத தொகுதி எம்.எல்.ஏ.க்கள். அவர்களது பின்புலம் அதிர்ச்சியைத் தருகிறது, அச்சத்தைத் தருகிறது. அவர்களை கட்டி‌மேய்ப்பவனுக்கும் எந்தவித அனுபவமும் இல்லை. கொடுத்துத் தான் பார்ப்போமே என்கிற  இளைய தலைமுறையின் ஆசையின் வெளிப்பாடு எந்த லட்சனத்தில் இருக்கப் போகிறது என்பது போகப் போகத் தான் தெரியும்.

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

ஒன்று மட்டும் உறுதி. சத்தியமாக அது  கடந்து போன ஸ்டாலின் ஆட்சி அளவுக்கு இருக்கப் போவதில்லை. அதை விட மோசமாக இருப்பதற்கான சாத்தியக் கூறுகள் இப்போதே தெரிகிறது.

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

வாழ்க ஜனநாயகம்

—   ராபர்ட்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.