அக்ஷய் குமாரின் 3–வது படம் ஆரம்பம்!
‘சிறை’ படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் எண்ட்ரியானவர் தயாரிப்பாளர் எஸ்.எஸ்.லலித்குமாரின் மகன் எல்.கே.அக்ஷய் குமார். இவரின் இரண்டாவது படமான ‘ராவடி’ ஷூட்டிங் முடிந்து போஸ்ட் புரொடக்ஷன் வேலைகள் நடந்து கொண்டிருக்கும் போது, இன்னும் பெயரிடப்படாத மூன்றாவது படத்தின் ஷூட்டிங் பூஜையுடன் ஆரம்பமாகியுள்ளது.
எஸ்.எஸ்.லலித்குமாரின் செவன் ஸ்கிரீஷ் ஸ்டுடியோஸ் தயாரிக்கும் இப்படத்தை விஷ்ணு அமரன் என்ற புதுமுக இயக்குனர் டைரக்ட் பண்ணுகிறார். ‘தீரன் அதிகாரம் ஒன்று’, ‘நேர்கொண்ட பார்வை’, ‘வலிமை’, ‘ஜனநாயகன்’ படங்களில் டைரக்டர் எச்.வினோத்திடம் அசோசியேட் டைரக்டராக இருந்தவர் விஷ்ணு அமரன்.
இப்படத்தின் பூஜையில் ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, தயாரிப்பாளர்கள் தனஞ்செயன், டி.சிவா, ஃபைவ் ஸ்டார் செந்தில், அருண் விஷ்வா, சபரி, டைரக்டர்கள் எச்.வினோத், சிவா, ஆர்.எஸ்.துரைசெந்தில்குமார், சுரேஷ் ராஜகுமாரி, விக்னேஷ் வடிவேல் ஆகியோர் கலந்து கொண்டனர். சென்னை, கொல்கத்தா, கொடைக்கானல் பகுதிகளில் ஷூட்டிங் நடக்கவுள்ளது.
ஒளிப்பதிவு : சரவணன் ராமசாமி, இசை : ஹேஷம் அப்துல் வஹாப், எடிட்டிங் : ஆர்.கலைவாணன், ஸ்டண்ட் : ஆக்ஷன் சந்தோஷ், பி.ஆர்.ஓ : யுவராஜ்.
— மோனிஷா






Comments are closed, but trackbacks and pingbacks are open.