அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சி தொகுதி மக்களுக்கு நேரில் நன்றி தெரிவித்த அன்பில் மகேஸ்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி தெற்கு மாவட்டம், மணப்பாறை சட்டமன்றத் தொகுதியில் மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணியின் சார்பில் போட்டியிட்ட மனிதநேய மக்கள் கட்சி (மா.ம.க.) வேட்பாளர் ப. அப்துல் சமது மற்றும் திமுக திருச்சி தெற்கு மாவட்டக் கழகச் செயலாளரும், முனைவர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் தொகுதி மக்களுக்கு நேரில் சென்று நன்றி தெரிவித்தனர்.
மணப்பாறை தொகுதிக்கு உட்பட்ட பல்வேறு பகுதிகளில் தங்களுக்கு வாக்களித்த மற்றும் வாக்களிக்காத வாக்காளப் பெருமக்கள் அனைவரையும் நேரில் சந்தித்து அவர்கள் தங்களது நன்றியினை தெரிவித்து கொண்டனர்.

நன்றி அறிவிப்புப் பயணம் நடைபெற்ற முக்கிய இடங்கள்:

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

வையம்பட்டி ஒன்றியம்: வையம்பட்டி தெற்கு ஒன்றியம் மற்றும் வையம்பட்டி வடக்கு ஒன்றியம். மணப்பாறை நகர்ப் பகுதி: என். பூலாம்பட்டி, மணப்பாறை நகரம் பெரியார் சிலை பேருந்து நிலையம் மற்றும் மணப்பாறை ஒன்றியம் புத்தாநத்தம்.
மருங்காபுரி ஒன்றியம்: மருங்காபுரி தெற்கு ஒன்றியம் செவல்பட்டி, பொன்னம்பட்டி பேரூர் துவரங்குறிச்சி பேருந்து நிலையம், மருங்காபுரி மத்திய ஒன்றியம் மருங்காபுரி, மற்றும் மருங்காபுரி வடக்கு ஒன்றியம் வளநாடு கைகாட்டி.

இந்நிகழ்வில் பங்குபெற்ற முக்கிய நிர்வாகிகள் திமுக தலைமைச் செயற்குழு உறுப்பினர் சபியுல்லா, மாவட்ட அவைத்தலைவர் கோவிந்தராஜ், ஒன்றியக் கழகச் செயலாளர்கள் செல்வராஜ், ராஜேந்திரன், ஸ்ரீரங்கன், ராமசாமி, சின்னஅடைக்கன், பழனியாண்டி, மணப்பாறை நகரக் கழகச் செயலாளர்
மூ.மா. செல்வம், பேரூர் கழகச் செயலாளர் நாகராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

யாவரும் கேளீர்

இவர்களுடன் கழக நிர்வாகிகள், பல்வேறு அணிகளின் அமைப்பாளர்கள் மற்றும் துணை அமைப்பாளர்கள் உள்ளிட்ட கூட்டணிக் கட்சித் தோழர்கள் பெருந்திரளாகக் கலந்து கொண்டனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.