குக்கிராமத்திலிருந்து இலக்கிய ஊற்று ! – உமையவன்

சிறார் இலக்கியம் -12 - எழுத்தாளர் அறிமுகம்

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

சிறார் எழுத்தாளர் உமையவன் இயற்பெயர் ப. ராமசாமி ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்திற்கு அருகில் உள்ள கெம்பநாயக்கன்பாளையம் கிராமத்தில் வசித்து வருகிறார். பன்னாட்டு நிறுவனத்தில் பணிபுரியும் இவர் தனது கிராமத்தில் விவசாயமும் செய்துவருகிறார். கடந்த பதினைந்து ஆண்டுகளுக்கு மேலாக தொடர்ந்து தொய்வில்லாமல் கதை, கவிதை, கட்டுரை, ஆய்வு நூல்கள், சிறார் இலக்கியம், செவ்விலக்கியம், பதிப்பு நூல்கள், உரை நூல்கள், தொகுப்பு நூல்கள் என முப்பத்தைந்திற்கும் மேற்பட்ட நூல்களைப் படைத்துள்ளார்.

தமிழறிஞர்கள் திரு. சிலம்பொலி செல்லப்பன், திரு. ஈரோடு தமிழன்பன், திரு. மு மேத்தா, திரு. வைரமுத்து, திரு. மேலாண்மை பொன்னுசாமி உள்ளிட்ட பலரின் பாராட்டுகளைப் பெற்றவர். ஆனந்த விகடன்- தடம், கல்கி, தினமணி, இந்தியன் எக்ஸ்பிரஸ், நமது நம்பிக்கை, இனிய உதயம், நிறை, தமிழ்நெஞ்சம் போன்ற இதழ்களில் இவரது நேர்காணல்கள் மற்றும் இலக்கியப் பங்களிப்புகள் வந்துள்ளன. கலைஞர், பொதிகை, மக்கள், பெப்பெர்ஸ் போன்ற தொலைக்காட்சியிலும், அகில இந்திய வானொலியிலும் இவரது நேர்காணல்கள் வந்துள்ளன.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

தமிழக அரசின் தமிழ்ச் செம்மல் விருது, கம்போடியா அரசு விருது, திருப்பூர் இலக்கிய விருது, பெருமைமிகு தமிழர் விருது, உழவுக்கவிஞர், கவிமாமணி, குழந்தைக்கவிஞர் அழ. வள்ளியப்பா விருது, ஈரோடு புத்தகத்திருவிழா விருது,  சௌமா இலக்கிய விருது, உள்ளிட்ட முப்பதிற்கும் மேற்பட்ட விருதுகளையும், சிறந்த நூல்களுக்கான பல பரிசுகளையும் பெற்றுள்ளார். இவர் எழுதிய தமிழில் விவசாயம் சார்ந்த முதல் ஹைக்கூ நூலான வண்டிமாடு பரவலான கவனத்தையும், வரவேற்பையும் பெற்றது. இவரது கவிதைகள் கல்லூரி பாடத்திட்டத்தில் இடம்பெற்றுள்ளன.

இலக்கியச்சாரல் இதழின் ஆசிரியராக இதழ்ப் பணியாற்றியுள்ளார். இவரின் சிறார் நூல்கள் குறித்த கட்டுரைகளை எழுத்தாளர் பொன். குமார் அவர்கள் “உமையவனின் சிறார் படைப்பிலக்கியம் ” எனும் நூலாகவும், திரு, லட்சுமணன் அவர்கள் “உமையவனின் மெய்க்கீர்த்தி ” எனும் ஆய்வு நூலாகவும் கொண்டு வந்துள்ளனர்.

சாகித்ய அகாதெமி சார்பில் மணிப்பூரில் நடைபெற்ற அகில இந்திய இளம் எழுத்தாளர்கள் மாநாட்டில் தமிழ்நாட்டின் சார்பாக கலந்துகொண்டுள்ளார்.

உமையவன்
உமையவன்

இவரின் சிறார் நூல்கள் ஆங்கிலம், கன்னடம், தெலுங்கு போன்ற மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டு நூல்களாக வெளிவந்துள்ளன. ஆங்கிலத்தில் மொழி பெயர்க்கப்பட்ட இவரது “பறக்கும் யானையும், பேசும் பூக்களும்” நூல் சிறந்த மொழிபெயர்ப்பு நூலுக்கான நல்லி – திசை எட்டும் விருதினைப்பெற்றுள்ளது.

கவிஞர், எழுத்தாளர், பேச்சாளர், ஆய்வாளர், இதழாசிரியர், பதிப்பாசிரியர், உரையாசிரியர், தொகுப்பாசிரியர் என பன்முகப் படைப்பாளியாக விளங்கிவருகிறார்.

பள்ளிக் கல்வித்துறை வெளியிட்டுள்ள பாரதியாரின் வாழ்க்கை வரலாற்று நூல் குழுவில் இடம்பெற்றுள்ளார்.

மேலும் இலக்கியம் சார்ந்த எந்த அறிமுகமும் இல்லாத குக்கிராமத்திலிருந்து தன்னெழுச்சியாக இலக்கியம் படைத்து வரும் இளம் படைப்பாளி.

சிறார் இலக்கியத்தை தாங்கள் தேர்வு செய்ததற்கான காரணம்?

கவிதை, கட்டுரை, ஆய்வு நூல்கள், ஹைக்கூ இன்று பல தளங்களில் எழுதி வந்தாலும் குழந்தைகளுக்காக எழுதுவது மனதிற்கு மிக இலகுவாக உள்ளது.

நாம் குழந்தையாக இருக்கிற பொழுது அனுபவிக்க நினைத்த, கிடைக்காமல் போன எண்ணற்ற செய்திகளை மிக எளிமையாக கதைகளாகக் கூற முடிகிறது.

குழந்தைகளுக்காக எழுதுவது கடினம் என்றாலும் நாம் குழந்தையாக மாறி எழுதுகிற போது அவை மிக எளிமையாகின்றன.

ஒவ்வொரு முறை எழுதும் பொழுதும் அந்த கதாபாத்திரமாகவே மாறி எழுதுவது என் வழக்கம்.

தங்களின் கல்வி மற்றும் பணியைக் குறித்து கூறுங்கள்?

முதுகலை மேலாண்மையியல் முடித்து

தனியார் பன்னாட்டு நிறுவனத்தில் பணி செய்து வருகிறேன், எங்களது கிராமத்தில் விவசாயம், ஆடு, மாடு, கோழி வளர்த்தல் போன்ற ஒருங்கிணைந்த விவசாயம் செய்து வருகிறேன்.

தற்கால சிறார் இலக்கியம் குறித்து தங்களின் கருத்து?

தமிழில் தற்காலச் சிறார் இலக்கியம் மிக வேகமாக வளர்ந்து வருகிறது. மற்ற மொழிகளோடு ஒப்பிடுகையில் தமிழில் உள்ள வளர்ச்சி அபரிவிதமாக உள்ளது.

அதேசமயம் அவை வளர்ச்சியா இல்லை வீக்கமா என்பதையும் நாம் ஆராய வேண்டியது அவசியம்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

நிறைய நூல்கள் போல செய்தல், வலுக்கட்டாயமாக திணிக்கப்பட்ட செய்திகள், வெட்டி ஒட்டப்பட்ட தகவல்கள், வெற்று பிரச்சாரங்கள் என்று பொருத்தம் இல்லாத படைப்புகளும் வர தான் செய்கின்றன.

பயிர்களுக்குள் களைகள் வருவது இயல்பு. களைகள் களையப்பட வேண்டும்.

தங்களின் சிறார் இலக்கிய பங்களிப்பு குறித்தும், தங்கள் சிறார் இலக்கியப் படைப்புகளின் சிறப்புகள் குறித்தும் கூறுங்கள்?

கடந்த கால சிறார் இலக்கியத்திற்கும் தற்கால சிறார் இலக்கியத்திற்கும் உள்ள வேறுபாடாக தாங்கள் கருதுவது?

தற்கால பெற்றோர்களுக்கு நீங்கள் கூற விரும்புவது

தற்கால சிறுவர்களின் வளர்ச்சிக்கு நாம் முன்னெடுக்க வேண்டிய முன்னெடுப்பு குறித்து

தற்கால சிறார்கள் மட்டுமல்ல பெரியவர்களும் பெரும்பாலான நேரத்தை கைபேசியில் செலவிடுவதை பார்க்க முடிகிறது.

இதற்கெல்லாம் மாற்று ஒரே வழி என்றால் அது புத்தக வாசிப்பு மட்டும் தான். புத்தக வாசிப்பை அவ்வளவு எளிதாக நாம் குழந்தைகளுக்கு கடத்தி விட முடியாது.

வாசிப்பின் ருசியை குழந்தைகளுக்கு தெரியப்படுத்தி விட்ட இனிப்பை நோக்கி பயணிக்கும் எறும்புகளைப் போல வாசிப்பை நோக்கி குழந்தைகள் வருவர்.

இதில் பெற்றோர், ஆசிரியர், உறவினர்கள், சமுதாயம் என்று எல்லோருடைய கூட்டுப் பொறுப்பும் உள்ளது. இதில் எவர் ஒருவரின் பங்கு குறைந்தாலும் குழந்தைகளை வாசிப்பு நோக்கி நகர்த்துவது கடினம்.

முந்தைய தலைமுறை வாசிப்பில் திளைத்ததற்கு மிக முக்கியமான காரணம் போதிய அளவு வளர்ச்சி பெறாத தொழில்நுட்பம், குறைவான கைபேசி, தொலைக்காட்சி பயன்பாடு, சமூக ஊடகங்களின் வளர்ச்சி இல்லாத காலம். இப்படி நிறைய காரணங்களைச் சொல்லிக் கொண்டே போகலாம். தங்களது நேரத்தை ஆரோக்கியமாக பயன்படுத்திக் கொள்ள முந்தைய தலைமுறையினர் வாசிப்பை கையில் எடுத்தனர்.

ஆனால் இப்பொழுது நிலைமை தலைகீழாக உள்ளது. பள்ளி செல்லும் மாணவரிடம் உள்ள செல்போன் எப்படி அவரை வாசிப்பின்பால் ஈர்க்கும். ஒரு பக்கத்தை படித்து தெரிந்து கொள்வதை விட ஒரு ரீல்சை பார்த்து தெரிந்து கொள்ளலாம் என்கின்ற மோகம் அதிகரித்துள்ளது.

இந்த தலைமுறை சிறுவர்கள் முன் எண்ணற்ற வாய்ப்புகளை வைத்து விட்டு அவர்களின் மனதை ஒருமுகப்படுத்துவது கடினம். ஆனால் சின்ன சின்ன செயல்பாடுகளின் மூலமாக குழந்தைகளை ஓரளவு வாசிப்பின் பக்கம் கொண்டுவர முடியும்.

அதற்கு பெற்றோர்கள் நூல்களை வாசிப்பதும், குழந்தைகள் முன் பெற்றோர்கள் கைபேசி பயன்படுத்தாமல் இருப்பதும் அவசியமான ஒன்று.

சிறுவர்களுக்கு கற்பனைக் கதைகள் தேவையா? சில சிறார் படைப்பாளர்கள் அறிவியல் செய்திகள், உண்மை நிகழ்வுகள் போன்ற கதைகள் மட்டும் தேவை என்று கூறுகிறார்கள். அதைக் குறித்து தங்களின் கருத்து?

சிறார் கதைகளின் தனித்துவமே அதன் கற்பனை அழகு தான். பேசாதன பேசுவதும், நடக்காதவை நடப்பதும், யானை எறும்பாவதும், எறும்பு யானையாவதும் இங்கு வெகு இயல்பு.

புனைவின் வழியாக குழந்தைகளின் அகப்பார்வையை மாற்ற முடியும். அவர்களின் கற்பனை சக்தியை அதிகரிக்க முடியும்.

குழந்தைகளுக்கு கற்பனைக் கதைகள் தேவையில்லை என்றால் அவர்கள் கட்டுரையை வாசித்து விட்டு போகலாமே.. பிறகு கதைகள் எதற்கு.

தற்கால சிறார் இலக்கியத்தில் நாம் சுட்டிக் காட்ட வேண்டிய விஷயங்களும் நிறைய உள்ளன. கதைகளின் மீதான விமர்சனப்பார்வை மிகவும் குறைவாக உள்ளது. தமிழில் ஒப்பிலக்கணம் எனும் துறையே தேய்முகமாக இருக்க சிறார் இலக்கியத்தில் அவை இன்னும் பூக்கவே இல்லை என்பேன்.

சரியான விமர்சனத்தோடு எழுதக்கூடிய விமர்சகர்கள் இங்கு குறைவு அதைவிட விமர்சனத்தை நேர்மறையாக எடுத்துக் கொள்ளக்கூடிய எழுத்தாளர்களும் மிகக் குறைவு.

இப்படிப்பட்ட சூழலில் ஆரோக்கியமான ஓர் இலக்கியத்தை வளர்த்தெடுப்பது கடினம்.

விமர்சகரும், வாசகரும், எழுத்தாளரும் ஒரே நேர்கோட்டில் பயணிக்கிற பொழுது ஆகச் சிறந்த படைப்புகளை நம்மால் வழங்க முடியும்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.