“முதல்வர் விஜய்யை சந்திக்காதது ஏன்?”- நடிகர் அர்ஜுன் தாஸ் விளக்கம்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

வரும் வெள்ளிக்கிழமை [ ஜூன்.26] ‘கான்சிட்டி’ படம் ரிலீசாவதையொட்டி, படத்தின் ஹீரோ அர்ஜுன் தாஸ், நேற்று [ஜூன்.22] மதியம் பத்திரிகையாளர்களைச் சந்தித்தார். பத்திரிகையாளர்களின் அனைத்துக் கேள்விகளுக்கும் டென்ஷனானாகாமல் சிரித்த முகத்துடனேயே டக்டக்கென பதில் கொடுத்து ஆச்சர்யப்படுத்தினார் அர்ஜுன் தாஸ்.

“இந்த ‘கான்சிட்டி’ படம் எந்தமாதியான கதை? படத்தின் போஸ்டரில் நீங்கள் உட்பட எல்லோருமே முகத்தை உம்முன்னு வச்சிருக்கீங்களே ஏன்?”

இந்த வார அங்குசம் வார இதழில்…

“போட்டோ செஷனின் போது எல்லாரும் சிரிச்ச மாதிரி தான் போஸ் கொடுத்தோம். ஆனா டைரக்டர் ஹரிஷ் தான் இந்த சப்ஜெக்ட் கொஞ்சம் சீரியஸானது. தயவு செய்து யாரும் சிரிக்காதீங்கன்னு ஸ்ட்ரிக்டா சொல்லிட்டாரு. இது ஃபேமியுடன் பார்க்கக்கூடிய படம். முதன்முதலா காமெடிய ட்ரை பண்ணிருக்கேன். இது ஒர்க்-அவுட்டாகும்னு நம்புறேன்”

“பெரும்பான படங்களில் நீங்க சீரியஸான கேரக்டராவே ப்ண்றீங்களே?”

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

 “எனக்கு வாழ்க்கை கொடுத்த லோகேஷ் கனகராஜின் ‘கைதி’, ‘மாஸ்டர்’ படங்களில் நெகடிவ் ரோல் பண்ணியதால உங்களுக்கு அப்படித் தோணிருக்கலாம். ஆனால் விஷால் வெங்கட்டின் ‘பாம்’, சாந்தகுமாரின் ‘ரசவாதம்’ படங்களில் வேற மாதிரி பண்ணிருந்தேன். இந்த கான்சிட்டியில காமெடி பண்ணிருக்கேன். கையில இருக்கும் நான்கைந்து படங்கள் எல்லாமே ஃபேமிலி ஆடியன்ஸ் பார்க்குற மாதிரி தான் இருக்கும். ‘பாம்’ படம் பார்த்துட்டு, நிறைய குடும்பங்கள் என்கிட்ட பேசுனப்ப, இனிமே வெட்டுக்குத்து, ரத்தம் தெறிக்கிற மாதிரி படங்களில் நடிக்காதீர்கள்னு அன்பான வேண்டுகோள் வைத்தன. எனக்கும் அது சரின்னு தான் தோணுச்சு. அதனால இப்ப வேற வேற ஜானர்களில் கதை செலக்ட் பண்ணி நடிச்சுக்கிட்டிருக்கேன்.

அதே சமயம் என்னுடைய குரு லோகேஷ் கனகராஜ் சார் கேட்டார்னா நெகடிவ் ரோலில் நடிப்பேன். அதில் வெட்டுக்குத்து ரத்தத்தை கொஞ்சம் கம்மியா காண்பிக்கச் சொல்லி அவரிடம் கேட்பேன்”

“மாஸ்டர் படத்தில் விஜய்க்கு வில்லனாக நடித்திருந்தீர்கள். இப்ப அவரு முதல்வராகிட்டார். அவரோட பிறந்த நாளுக்கு வாழ்த்துச் சொல்ல நேரில் போகலையே ஏன்?”

“வாழ்த்துச் சொல்லணும்னு எனக்கும் ஆசை தான். ஆனா இப்ப அசெம்ப்ளி கூட்டம் நடந்துக்கிட்டிருக்கு. அவரும் பிஸி ஷெட்யூலில் இருப்பதால் அவரை தொந்தரவு பண்ண விரும்பலை. இதான் காரணமே தவிர வேறு எதுவும் இல்லை” என தெளிவாக விளக்கம் சொன்ன அர்ஜுன் தாஸ், கான்சிட்டி படம் பார்த்துட்டு நிறை-குறைகளை மனம் திறந்து சொல்லுங்க. நிறைகளை மகிழ்ச்சியுடன் ஏத்துக் கொள்கிறேன். குறைகளைத் திருத்திக் கொள்கிறேன். ஏன்னா கைதியிலிருந்து இப்ப வரை  உங்களின் கருத்துகளும் ஆலோசனைகளும் தான் எனக்கு நல்ல ‘கைட்லைன்” என்பதையும் மறக்காமல் குறிப்பிட்டார்.

—   ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.