ரொனால்டோவுக்கு விரைவில் திருமணம்! நிச்சயதார்த்த புகைப்படத்தைப் பகிர்ந்த காதலி!
சமூக வலைதளம் மற்றும் சர்வதேச கால்பந்து விளையாட்டில் முன்னணி வீரராக வலம் வருபவர் கிறிஸ்டியானோ ரொனால்டோ. இவர் தனது கால்பந்து பயணத்தை இங்கிலாந்தின் புகழ்பெற்ற மான்செஸ்டர் யுனைடெட் கிளப் அணியை அடித்தளமாகக் கொண்டு தொடங்கினார்.
இவர் தற்போது அல் நஸர் அணிக்காக விளையாடி வருகிறார். இதனிடையே கிறிஸ்டியானோ ரொனால்டோவும், மாடல் ஜார்ஜியானாவும் நட்பாக பழகி வந்தனர். பின்னர் அது காதலாக மாறியது. இவர்கள் இருவரும் நீண்ட காலமாக லிவிங் டு கெதரில் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு 5 குழந்தைகள் இருக்கின்றன.
இந்நிலையில் திருமண நிச்சயதார்த்த மோதிரம் அணிந்திருக்கும் புகைப்படத்தை ஜார்ஜியானா தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்து விரைவில் திருமணம் செய்ய இருப்பதாக அறிவித்திருக்கிறார். இதனால் கிறிஸ்டியானோ ரொனால்டோ தனது நீண்ட நாள் காதலியை விரைவில் திருமணம் செய்துகொள்ள இருக்கிறார். மேலும் இவர்களுக்கு பலர் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.
— மு. குபேரன்