டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் தீவிரம்! கலெக்டர் நேரில் ஆய்வு!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

பருவ மழை காலம் தொடங்கியுள்ள நிலையில் டெங்கு கொசு ஒழிப்பு பணி மற்றும் காய்ச்சல் கண்காணிப்பு பணிகளை தீவிரப்படுத்த மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள், இ.ஆ.ப.,  உத்தரவு.

டெங்கு கொசு ஒழிப்பு பணிகளை மாவட்ட ஆட்சித்தலைவர் பிரத்திக் தாயள், இ.ஆ.ப.,  மற்றும் மாநகராட்சி ஆணையர் திருமதி என்.பொன்மணி இ.ஆ.ப.,  ஆகியோர்  (22.09.2026) மண்டலம் 1 வார்டு எண் 13 வென்னிஸ் தெரு பகுதிகளில் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட 65 வார்டு பகுதிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. டெங்கு கொசு புழுக்கள் உற்பத்தியை தடுக்கும் பொருட்டு டெங்கு புழு உருவாக ஏதுவான நீர் ஆதாரங்களை கண்டறிந்து அழிக்கவும் வீடுகள் தோறும் காய்ச்சல் கணக்கெடுப்பு பணிகளை மேற்கொள்ளவும் மாநகராட்சியில் மொத்தம் 350 டெங்கு கொசு புழு ஒழிப்பு பணியாளர்கள் வீடு வீடாக சென்று பணிகளை மேற்கொள்வதுடன் புகை மருந்து அடிப்பான் மூலம் முதிர் கொசுகளை கட்டுப்படுத்தும் பணியும் மேற்கொண்டு வருகின்றனர்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

தொடர்ந்து, தினந்தோறும் உள்நோயாளிகள் குறித்த தகவல் அரசு மற்றும் தனியார் மருத்துவமனைகளில் இருந்து பெறப்பட்டு அதன் அடிப்படையில் பணியாளர்களை கொசு ஒழிப்பு பணியில் ஈடுபட்டுத்தப்படுகின்றனர்.

டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் மேலும் மாவட்ட ஆட்சித்தலைவர் அவர்கள் மற்றும் மாநகராட்சி ஆணையர் அவர்கள் ஆகியோர் டெங்கு கொசு ஒழிப்பு பணிகள் குறித்தும் காய்ச்சல் கணக்கெடுப்பு பணிகள் குறித்தும் பணியாளர்களிடம் கேட்டறிந்து அப்பணிகளை தீவிரப்படுத்த நகர் நல அலுவலருக்கு உத்தரவிட்டனர். பருவ மழை காலம் தொடங்கியுள்ள நிலையில் பணிகளை துரிதமாக மேற்கொள்ள டெங்கு கொசு ஒழிப்பு கூடுதல் பணியார்களை பணியில் ஈடுப்படுத்த அறிவுறுத்தினர்.

இவ்வாய்வின் போது, நகர் நல அலுவலர் மரு.கார்த்திக்கேயன், வருவாய் வட்டாட்சியர் கா.சேக் முஜிப் (திருச்சி கிழக்கு), துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.