இது ஒரு பொய்யான கருத்துருவாக்கம் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தமிழ்நாடு அரசின் பள்ளிக் கல்வித்துறை அமைச்சராக திரு.ராஜ்மோகன் அவர்கள் நியமிக்கப்பட்டிருக்கிறார். அவருக்கு என்னுடைய வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

நேற்றிலிருந்து பொதுவாகவும் மற்றும் ‘குறிப்பாகவும்’, தற்போது தான் முதன் முதலில் ஒடுக்கப்பட்ட மக்கள் பிரிவைச் சேர்ந்த ஒருவர் ஆதி திராவிடர் நலத்துறை தவிர்த்த வேறொரு துறை அமைச்சராக முதன் முதலில் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்ற செய்திகள் உலவத் தொடங்கி இருக்கின்றன. தலித் சார்பு சமூக ஊடகங்கள் வாயிலாக இந்திய அளவில் ஆங்கிலத்திலும் இது பரப்பப்படுகிறது. இது ஒரு பொய்யான கருத்துருவாக்கம்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அழகிய பெரியவன்
அழகிய பெரியவன்

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

ஏற்கனவே திமுக அரசில் அம்மையார் சத்தியவாணி முத்து, திரு.கே. சுந்தரம், திரு.பரிதி இளம் வழுதி, திரு.மதிவேந்தன், திரு.கோவி செழியன், திரு.சி.வி.கணேசன், திரு.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் வேறு துறை அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள். குறிப்பாக கடந்த ஆட்சியில் திரு கோவி.செழியன் அவர்கள் உயர் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்திருக்கிறார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அதேபோன்று அம்மையார் ஜெயலலிதா அவர்களின் ஆட்சியில் திரு.பி.பெஞ்சமின், திரு.பி.தனபால் ஆகியோரும் ஆதிதிராவிடர் நலத்துறை தவிர்த்து வேறு துறைகளில் அமைச்சர்களாக இருந்திருக்கிறார்கள்.

காலம் தனியானது அல்ல அதற்கு வரலாற்றுத் தொடர்ச்சி உண்டு. உச்சியில் ஏறி நின்று அண்ணாந்து பார்க்கும் போது எதுவுமே தெரியாது.

—  அழகிய பெரியவன்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.