‘ஹாய்’ சக்சஸ் மீட்! நயன் தாரா ஆப்செண்ட்!

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

‘செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோஸ்’ லலித்குமார் & ரெளடி பிக்சர்ஸ் நயன் தாரா, விக்னேஷ் சிவன் இணைந்து தயாரித்து கடந்த வாரம் ரிலீசான படம் ‘ஹாய்’, விஷ்ணு எடவன் டைரக்‌ஷனில் நயன் தாரா, கவின், பிரபு, ராதிகா சரத்குமார், கே.பாக்யராஜ் உட்பட பலர் நடித்திருந்த இந்த ‘ஹாய்’ படத்தின் சக்சஸ் மீட் சென்னையில் செப்டம்பர் 02-ஆம் தேதி இரவு நடந்தது. இதில் பேசியவர்கள்…

எஸ்.எஸ்.லலித்குமார், “நல்ல கதையுள்ள படத்தை ரசிகர்களுக்குக் கொடுக்க வேண்டும் என்பதற்காகத் தான் இப்படத்தைத் தயாரித்தோம். ரசிகர்களின் பேராதரவால் இப்படம் பெரிய ஹிட்டாகியுள்ளது. இதற்குக் காரணம் மீடியாக்கள் தான்”.

இந்த வார அங்குசம் வார இதழில்…

ராதிகா சரத்குமார், “இந்தப் படத்தை எடுத்து முடிக்கும் வரை டைரக்டர் விஷ்ணு எடவன் அழுதுகொண்டே சிரிப்பார், சிரித்துக் கொண்டே அழுவார். இப்போது இந்த ‘ஹாய்’ சக்சஸால் சிரிக்கமட்டும் தான் செய்கிறார். எது நடந்தாலும் என்ன விமர்சனம் வந்தாலும் எதற்கும் பதிலளிக்காமல் அமைதியாக இருக்கும் நயன் தாராவின் பாலிஸி எனக்கு ரொம்ப பிடிச்சிருக்கு”.

விஷ்ணு எடவன், “எனக்கு வாய்ப்பளித்த லலித்குமார் சார், நயன் தாரா மேடம், விக்னேஷ் சிவன் சார், இதில் நடிக்க ஒத்துக் கொண்ட சீனியர் ஆர்ட்டிஸ்ட்டுகள் பிரபு சார், ராதிகா மேடம், கே.பாக்யராஜ் சார், நான் டைரக்டராகும் வரை உறுதுணையாக இருந்த எனது பெற்றோர், மனைவி, நண்பர்கள் அனைவருக்கும் நன்றி. இந்த வெற்றி இவர்களால் தான் கிடைத்தது”.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

பிரபு, “கவினுக்கும் விஷ்ணு எடவனுக்கும் நல்ல எதிர்காலம் இருக்கிறது”.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

கவின்
கவின்

கவின், “போன மாசக் கடைசியில் இந்தப் படம் வந்தாலும் படத்திற்கு மக்கள் அளித்த ஆதரவும் அதற்கு காரணமான மீடியாக்களின் சப்போர்ட்டும் எனக்கு ரொம்பவும் உற்சாகத்தைத் தருகிறது. பொதுவாக ஒரு மனுசனுக்கு கஷ்டம் வரும் போது துணை நிற்பவர்கள் தான், வாழ்க்கை முழுவதும் நம்முடன் வருவார்கள்”.

நடிகைகள் அம்ருதா சீனிவாசன், காவ்யா, சுகாசினி, கேமராமேன் ராஜீவ் சுக்லா, நடிகர் குரேஷி ஆகியோர் அனைவருக்கும் நன்றி சொல்லி சுருக்கமாகப் பேசினார்கள்.

‘ஹாய்’-ன் தயாரிப்பாளர்களில் ஒருவரும் படத்தின் ஹீரோயினுமான நயன் தாராவும் அவரது கணவர் விக்னேஷ் சிவனும் விழாவிற்கு வராமல் ஆப்செண்டாகிவிட்டனர்.

—  ஆண்டவர்

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.