அங்குசம் பார்வையில் ‘இம்மார்ட்டல்’

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தயாரிப்பு:  ‘ஏகே பிலிம் ஃபேக்டரி’ அருண்குமார் தனசேகரன், தமிழ்நாடு ரிலீஸ்: சக்தி ஃபிலிம் பேக்டரி சக்திவேலன், டைரக்டர்: மாரியப்பன் சின்னா, ஆர்டிஸ்ட்: ஜி.வி.பிரகாஷ் குமார், கயாது லோஹர், டி.எம்.கார்த்திக், குமார் நடராஜன், மாறன், ஆதித்யா கதிர், ஒளிப்பதிவு: அருண் ராதாகிருஷ்ணன், இசை: சாம் சி.எஸ்., எடிட்டிங்: எம்.ராஜேஷ், ஸ்டண்ட்: சக்தி சரவணன், பிஆர்ஓ: சதீஷ் ( எய்ம்)

தனது தாய் மாமா ( மாறன்) பிரிண்டிங் பிரஸ்ஸில் வேலை செய்கிறார் ஜி.வி.பிரகாஷ். தங்கியிருக்கும் வாடகை வீட்டைக் காலி செய்ய வேண்டிய கட்டாயத்தில் வாடகைக்கு வேறு வீடு தேடும் போது போனில் இனிமையான பெண் குரல். ஹைடெக் ஃப்ளாட்டில்தான் தனியாக இருப்பதாகவும் வாடகையை ஷேர் செய்து கொள்ளலாம் என அழைக்கிறது அந்தக் குரல்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

'இம்மார்ட்டல்'ஜிவி பிரகாஷ் போய் கதவைத் தட்டுகிறார். அங்கே அழகு தேவதை கயாது லோஹர். அவரது வனப்பு, மினுனுப்பு இதையெல்லாம் பார்த்து ஜொள் விடுகிறார் ஜிவிபி. கயாதுவும் தாராள மனதுடன் பழகுகிறார். இருவரும் நெருக்கமாக இருக்கும் போது திடீரென ஒரு உருவம் சோபாவுக்கு பின்னால் இருந்து எந்திருக்குது.  முகமெல்லாம் சுருங்கிய அவரை தனது தாத்தா என்கிறார் கயாது. அடுத்தடுத்து நடக்கும் திகில் சம்பவங்களால் கயாதுவே மர்மமான பார்ட்டி தான் என தெரிந்து அதிர்ச்சியான ஜிவி பிரகாஷ் அங்கிருந்து தப்பிச் செல்ல முயற்சிக்கிறார். கயாது லோஹர் யார்? ஜிவிபி தப்பிச்சாரா? இதான் இந்த ‘இம்மார்ட்டல்’.

கயாது லோஹர்
கயாது லோஹர்

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

படம் ஆரம்பித்து கால் மணி நேரத்தில் கயாது லோஹரின் ‘அளவான’ கிளு கிளு தரிசனம் ஆரம்பிக்குது. நம்மள மாதிரியே ஜிவிபியும் என்ஜாய் பண்றாரு. ஆனால் கயாது பெண் அல்ல ஆண் என்ற ரகசியத்தை டி.எம்.கார்த்திக் ஃப்ளாஷ் பேக் சொல்லி முடித்ததும் கதை கொஞ்சம் ஸ்பீடு எடுக்குது. இடைவேளைக்கு பிறகு குமார் நடராஜன் சொல்லும் ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஃப்ளாஷ் பேக் இன்னும் கொஞ்சம் ஸ்பீடு எடுக்குது.

படத்தில் ஜிவிபியின் பெர்ஃபாமென்ஸ் ஓகே என்றாலும் டபுள், ட்ரிபிள் ஓகே கயாது லோஹருக்குத் தான். சாதாரண இளம் குயினாக உடை, நடை, கிளு கிளு பார்வையால் கிறங்கடிக்கிறார். தனது ஃப்ளாஷ் பேக் ஓப்பன் ஆன பிறகு திகில் பார்வை, திமிர் நடை என வெளுத்துக் கட்டுகிறார். அதிலும் அந்த பெரிய சோஃபாவில் மல்லாக்கப் படுத்துக் கொண்டு ஜிவிபியை மிரட்டும் சீனில் லோஹர் செம மிரட்டல். கயாது லோஹரின் கிளாமர் இமேஜை உடைக்கிறது இந்த ‘இம்மார்ட்டல்’.

கயாது லோஹர்ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஒரு கதையை படம் ஆரம்பித்தவுடனேயே தெளிவாக சொல்லி… இப்போதைய சம்பவங்களுடன் கரெக்டா மேட்ச் பண்ணி அசத்தியிருக்கிறார் டைரக்டர் மாரியப்பன் சின்னா. அவரது கற்பனையில் அந்த கொடூர மிருகம் செம மிரட்டல். அந்த மிருகத்திற்கும் ஜிவி பிரகாஷுக்கும் இடையிலான ஃபைட் சீன் உட்பட பல சீன்களில் சிஜி ஒர்க்+ ஆர்ட் டைரக்டரின் ஒர்க் அபாரம். 30 மாடிகள் கொண்ட ஃப்ளாட்டை பகலிலும் இரவிலும் பல்வேறு ஆங்கிளில் காட்டி பயமுறுத்துகிறார் கேமரா மேன் அருண் ராதாகிருஷ்ணன். சாம் சி எஸ்.சின் பின்னணி இசையும் ரொம்பவே பயமுறுத்துகிறது, ஓவர் வால்யூமால். இம்மார்ட்டல்னா சாகாவரம்னு அர்த்தம். தலைப்பு கனகச்சிதமாக மேட்ச் ஆகியிருக்கு.

அங்குசம் பார்வையில் ‘இம்மார்ட்டல்’ 42/100

—  ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.