அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

சாராவின் வண்ணத்துப்பூச்சி

சிறார் இலக்கியம் - சிறார் நூல் அறிமுகம்-3

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

சாராவின் வண்ணத்துப்பூச்சி

மொழியாக்கம்:– சுகுமாரன்

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

வெளியீடு:- புக்ஸ்ஃபார்சில்ரன், பாரதிபுத்தகாலயம், சென்னை-18

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

விலை ரூ90/-.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

மூத்தசிறார் எழுத்தாளர் சுகுமாரன், ஆங்கிலத்திலிருந்து தமிழுக்கு மொழியாக்கம் செய்துள்ள இந்தத்  தொகுப்பில் 10 கதைகள் இடம்பெற்றுள்ளன. இனவெறிக்கு ஆளான கருப்பர்களின் துன்பமிகு வாழ்வியலைப் பேசும் இக்கதைகளம் களம் தமிழ்ச் சூழலுக்கு முற்றிலும் புதிது.

குடியுரிமையை வலியுறுத்தி எட்மண்ட் பீட்டர்ஸ் பாலத்தைக் கடந்து சென்ற கருப்பின மக்களின் பேரணி மீது நடத்தப்பட்ட போலீஸ் தாக்குதல் குறித்த குடியுரிமைப்பயணம்; கருப்பின இளைஞர்களுக்கு எதிரான அடக்குமுறை, நிறவெறி வன்முறை குறித்த ‘ஜெரேமியாவின்நம்பிக்கை’; காவல்காரர் கையை வீசி அடித்துத் தள்ளுவதால் கீழே விழுந்து துடிக்கும் வண்ணத்துப்பூச்சியை  காப்பாற்றத்துடிக்கும், ‘சாராவின் வண்ணத்துப் பூச்சி’ ; அடிமைத் தளையிலிருந்து  தப்பிக்கக் கனடாநாடு நோக்கி ஓடும் கருப்பர்களுக்கு நல்ல உள்ளம் படைத்த 15 வயது வெள்ளையினச் சிறுவன் உதவுவது பற்றி உரையாடும், ‘சுதந்திர நதியின் நண்பன்’; சுற்றுச்சூழலை காக்க வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தும் ‘கருப்புக்கடற்கரை’ மற்றும் ‘ஒருபிளாஸ்டிக்பை’; மூன்றாம் பாலினத்தவர்களின் உரிமைகள் – உணர்வுகள் குறித்தும் பேசும் . ‘சில்வியாவும் மார்ஷாவும் தொடங்கிய புரட்சி’ என  கருப்பர்களின் அவலநிலையையும், இரத்தம் தோய்ந்த அவர்களது குடியுரிமைப் போராட்ட வரலாற்றையும் இந்தக் கதைகள் பேசுகின்றன.

ஒவ்வொரு கதையின் கீழும் கதையாசிரியர் பற்றிய குறிப்பும், கதைஎழுதப்பட்டதன் வரலாற்றுப் பின்னணியையும் கொடுத்திருப்பது சிறப்பு. வாசிக்கச் சரளமான நடையில் அமைந்த மொழியாக்கம். சிறார் மட்டுமின்றிப் பெரியவர்களும் அவசியம் வாசிக்க வேண்டிய புத்தகம்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.