கலைமகள் சபா மேலாளர் ஜான் – நல்லவரா, கெட்டவரா ?
நன்றாக இயங்கிக்கொண்டிருந்த கலைமகள் சபாவின் வளர்ச்சியை கண்டு பொறாமை கொண்டவர்கள்தான், மேலாளர் ஜான் மீது வீண் பழி சுமத்தி வழக்கில் சிக்க வைத்துவிட்டதாகவும்; அரசு வேண்டுமென்றே கலைமகள் சபாவை முடக்கிவிட்டதாகவும் கருதுகிறார்கள்.
கலைமகள் சபாவுக்காக, தமிழகம் எங்கும் பயணித்த மேலாளர் ஜான் என்பவரின் பங்களிப்பையும் அவரது கடும் உழைப்பையும் குறைத்து மதிப்பிட்டு விட முடியாது என்பது ஒருபுறமிருக்க; அதை ஒன்றை மட்டும் வைத்து அவருக்கு எதிராக முன்வைக்கப்பட்டிருக்கும் குற்றச்சாட்டுகளை புறந்தள்ளிவிடவும் முடியாது.
நாமக்கல் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு எண்: 21/2006 இல், 1999 – 2000 இல் நாமக்கல் பரமத்தி வேலூர் இன்ஸ்பெக்டராக பணியாற்றி பின்பு காவல் துணைக் கண்காணிப்பாளராக 2012 இல் ஓய்வு பெற்ற வழக்கின் விசாரணை அதிகாரியான சுவாமிநாதன் அளித்த வாக்குமூலத்திலிருந்து ஒரு பகுதி.
”என்னுடைய விசாரணையில் எ 1 ஜான் நிலம் வாங்குவதற்காக நேரடியாக உரிமையாளர்களை அணுகாமல் நில புரோக்கர்கள் மற்றும் இடைத்தரகர்கள் மூலமாக சொத்துக்களை வாங்கி கலைமகள் சபாவிற்கு சம்மந்தப்பட்ட தொகையை கையாடல் செய்துள்ளார். இதற்கு மற்ற எதிரிகள் எ 2 கோயா, எ 3 ஆர்.சுப்பரமணியன், எ 4 கே.சரவணன் ஆகியோர்கள் உடந்தையாக இருந்துள்ளார்கள் என தெரிய வந்தது.
கலைமகள் சபாவிற்காக நிலம் வாங்கப்பட்டதில் செங்கல்பட்டு மாவட்டம் குண்டுர் உட்கடை மேலாண்மையூர் நில உரிமையாளர் இராமலிங்கம் தன்னுடைய 1430 சதுரடி இடத்தை விற்பனை செய்வதற்காக 10.03.1997-ம் தேதி தன் நண்பர்கள் கணபதி, பக்தவத்சலு, மற்றம் தணிகை வேல் ஆகியோர்களுக்கு செங்கல்பட்டு இணை 1 சார்பதிவாளர் அலுவலகம் மூலமாக ஒரு பவர் பத்திரம் எழுதி கொடுத்துள்ளார். அந்த பவர் பத்திரத்தை எழுதி வாங்கிய கணபதி, பக்தவத்சலு, மற்றம் தணிகை வேல் ஆகியோர்கள் 2ம் எதிரி கோயா மூலமாக 1ம் எதிரி ஜானுக்கு கிரையம் வாய்மொழியாக பேசப்பட்டதில் ரூ.10 லட்சத்திற்கு கிரையம் முடிவு செய்யப்பட்டு 05.04.1997-ம் தேதியன்று கணபதி, பக்தவத்சலு, மற்றம் தணிகை வேல் ஆகியோர்கள் பெயருக்கு தலா 1,65,000- ற்கு 6 டி.டிக்கள் எடுத்து மொத்தம் ரூ.9,90,000/-ற்கு அந்த டி.டி கொடுக்கப்பட்டுள்ளது.
05.04.1997-ம் தேதி 1ம் எதிரி வாய்மொழி உத்தரவின்பரில் கே.சுப்பரமணியம் என்பவர் பேருக்கு ரு.2,10,000/-ற்கு ஒரு டி.டி எடுக்கப்பட்டுள்ளது. அப்போது 2 ம் எதிரி கோயா மொத்தம் 7 டி.டிகளையும் பெற்று சம்மந்தப்பட்ட பவர் பெற்ற நபர்களுக்கு ரூ.9,90,000/–ற்கான 6 டி.டிக்கள் கொடுத்தும் கே.சுப்பரமணி என்பவர் பெயரில் பெறப்பட்ட ரு.2,10,000/–ற்கான டி.டி யை 2ம் எதிரி தானே வைத்துக் கொண்டு 16.04.1997-ம் தேதி மேற்படி கே.சுப்பரமணியம் என்பவரை அழைத்துக் கொண்டு செங்கல்பட்டு மேலாண்மையூர் இந்தியன் வங்கி கிளையில் மேற்படி கே.சுப்பரமணியம் என்பவர் பெயருக்கு ஒரு சேமிப்பு கணக்கை ஆரம்பித்துள்ளார். அந்த கணக்கை 2ம் எதிரி கோயாதான் முன்மொழிந்துள்ளார்.
19.04.1997ம் தேதி 2ம் எதிரி கோயா கே.சுப்பரமணியத்தினை அழைத்து சென்று அந்த டி.டிக்குரிய தொகை ரூ.2,10,000/-ஐ கே.சுப்பரமணியம் எடுத்து கொடுக்க 2ம் எதிரி கோயா பெற்றுக்கொண்டுள்ளார் என தெரியவந்தது.
இந்த நிலத்தை கிரையம் செய்வதற்காக ரூ.10 லட்சம் தான் கிரையம் பேசப்பட்டது. ஆனால், கலைமகள் சபா அலுவலகத்தில் இருந்து மேற்படி ஆவண எண்.671/1997 மற்றும் 672/197-ன் படியான கிரையப்பத்திரங்களுக்காக கலைமகள் சபாவிலிருந்து 1 ம் எதிரி ஜான் வாய்மொழி உத்தரவின்படி ரூ.12 லட்சத்திற்கு கலைமகள் சபா மேலாளர் டி.டி. எடுத்து பவர் பெற்ற கணபதி, பக்தவத்சலு, மற்றம் தணிகை வேல் ஆகியோர்களுக்கு கொடுத்த ரூ.9,90,000/- போக மீதி ரு-2,10,000/-ஐ 1 ம் எதிரி 2ம் எதிரி ஆகியோர்கள் கூட்டு சதி செய்து கையாடல் செய்துள்ளார்கள்.” என்பதாக விவரிக்கிறது, விசாரணை அதிகாரியின் வாக்குமூலம்.
தொடரும் …
கலைமகள் சபா | உறுப்பினர்கள் எண்ணிக்கையில் குழப்பம்! அடுத்த நடவடிக்கை?
— அங்குசம் புலனாய்வுக்குழு.






Comments are closed, but trackbacks and pingbacks are open.