செவன் ஸ்டார் ஓட்டலை கதிகலக்கிய ‘லெஜெண்ட்’ ரசிகர்கள்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தமிழ்நாட்டின் பிரபலமான ஜவுளிக்கடை லெஜெண்ட் சரவணா ஸ்டோர்ஸ். இதன் அதிபரான சரவணன் தயாரித்து ஆக்‌ஷன் ஹீரோவாக அவதாரம் எடுத்திருக்கும் படம் ‘லீடர்’. ஆர்.எஸ்.துரை செந்தில்குமார் டைரக்ட் பண்ணியுள்ளார். ஹீரோயினாக பாலிவுட் புகழ் பாயல் ராஜ்புத், மற்ற கேரக்டர்களில் சந்தோஷ் பிரதாப், ஷாம், விடிவி கணேஷ், ஐஸ்வர்யா உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.

இன்னும் மூன்று நாட்களில் [ஏப்ரல்.03] ‘லீடர்’ ரிலீஸாவதால், படத்தின் ப்ரீ ரிலீஸ் நிகழ்ச்சி, சென்னை பட்டினப்பாக்கத்தில் உள்ள லீலா பேலஸ் செவன் ஸ்டார் ஓட்டலில் மார்ச்.29-ஆம் தேதி இரவு நடந்தது. விழாவிற்கு சிறப்பு விருந்தினர்களாக ஃபெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி, டைரக்டர் கே.பாக்யராஜ், தயாரிப்பாளர்கள் கலைப்புலி தாணு, சத்யஜோதி தியாகராஜன், தனஞ்செயன் உட்பட ஏராளமான விஐபிக்கள் கலந்து கொண்டனர்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

‘Leader’ movieதங்களது ஹீரோ லெஜெண்ட் சரவணனைக் காண நான்கு பஸ்களில் வந்திறங்கினார்கள் அவரது ரசிகர்கள். இரவு 7 மணிக்கு ஓட்டல் இருக்கும் சாலையில் சரவணனின் கார் எண்ட்ரியானதுமே தொடர்ந்து பத்து நிமிடங்கள் பட்டாசு வெடித்து பட்டையைக் கிளம்பினார்கள் ரசிக சிகாமணிகள்.

நிகழ்ச்சி அரங்கத்திற்குள் சரவணன் நுழைந்ததுமே…ரசிகர்களின் வாழ்க கோஷமும் விசில் சத்தமும் காதைப் பிளந்து, செவன் ஸ்டார் ஓட்டலையே கதிகலக்கியது. மேடையில் யார் பேசினாலும் “லீடர்…..லீடர்…” என கூச்சல் போட்டுக் கொண்டே இருந்ததால், “எப்பா எதுக்கெடுத்தாலும் சத்தம் போட்டு பேசுபவர்களை டிஸ்டர்ப் பண்ணக்கூடாது. தேவையான இடத்தில் மட்டும் விசில் அடிங்க” என வேண்டுகோள் வைத்தார் சரவணன். இதனால் கொஞ்ச நேரம் அடங்கியிருந்த ரசிகர்கள் கூட்டம், மீண்டும் கூச்சல் போட்டுவிட்டு ஒருவழியாக அடங்கியது.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சரவணன்
சரவணன்

விழாவில் பேசிய சிறப்பு விருந்தினர்கள் அனைவருமே வியாபாரத்தில் கொடிகட்டிப் பறக்கும் சரவணனின் திறமை குறித்து வெகுவாக புகழ்ந்து பேசினார்கள்.

படத்தில் நடித்த கலைஞர்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் அனைவருமே ஷூட்டிங் ஸ்பாட்டிலும் சம்பள விஷயத்திலும் சரவணனின் வள்ளல் தன்மையை வானளாவப் பேசி பெருமைப்படுத்தினார்கள்.

கடைசியில் மைக் பிடித்த ‘லெஜெண்ட்’ சரவணன், “ரஜினி சாரின் ‘ஜெயிலர்’, கமல் சாரின் ‘விக்ரம்’ படம் போல இந்த ‘லீடரும்’ சூப்பர்ஹிட்டாகும்” என நம்பிக்கையுடன் பேசினார்.

—   ஆண்டவர்

 

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.