அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தமிழக சட்டமன்றத்தில் தடம் பதித்த பெண் எம்.எல்.ஏ.க்கள் !

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தமிழக சட்டமன்ற வரலாற்றிலேயே முதல்முறையாக 22 பெண்கள் சட்டமன்ற வேட்பாளர்களாக களம் காண இருக்கிறார்கள். கடந்த 2021 சட்டமன்றத் தேர்தலில் 12 பேர் பெண்கள் வென்றிருந்த நிலையில், இந்த முறை 10 கூடுதலாக 22 பேர் (தவெக-13; அதிமுக-6;  பாமக-1; மார்க்சிக் கம்யூனிஸ்ட் கட்சி -1; காங்கிரஸ்-1)  வெற்றி பெற்றிருக்கிறார்கள். திமுக சார்பில் ஒரு பெண் எம்.எல்.ஏ. கூட வெற்றி வாய்ப்பை பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இவர்களில், ஆரணி – எல்.ஜெயசுதா மற்றும் மதுராந்தகம் (தனி) மரகதம் குமரவேல்  ஆகிய இருவரும் முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்கள். மற்ற 20 பேரும் சட்டசபைக்கு முற்றிலும் புதியவர்கள்.

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

மேலும், 22 பெண்களில் பறையர் – 5; தேவேந்திர குல வேளாளர் – 3; வெள்ளாளக் கவுண்டர் – 3; வன்னியர் – 2; மீனவர் – 1; கம்மாவார் – 1; இஸ்லாமியர் – 1; கவுரா – 1; பழங்குடியினர் – 1; உடையார் – 1; மறவர் – 1; அகமுடைய முதலியார் – 1; நாடார் – 1 ஆகிய சாதிகளை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

தவெக சார்பில் வெற்றி பெற்ற  பெண் எம்.எல்.ஏ.க்கள்  13 பேர் :

யாவரும் கேளீர்

1) குமாரபாளையம் – விஜயலட்சுமி சின்னசாமி (கொங்கு வேளாளக் கவுண்டர்)

2) திரு.வி.க. (தனி) – எம்.ஆர். பல்லவி (பறையர்)

3) பவானிசாகர் (தனி) –  வி.பி. தமிழ்ச்செல்வி  (தேவேந்திர குல வேளாளர்)

4) திருப்பூர் வடக்கு –  வி சத்தியபாமா (கொங்கு வேளாளக் கவுண்டர்)

5) அவிநாசி (தனி) –  கமலி செந்தில்நாதன் (பறையர்)

6) கவுண்டபாளையம்  – கனிமொழி சந்தோஷ் (கௌரா நாயுடு)

7) கிருஷ்ணராயபுரம் (தனி) – எம்.சத்யா (தேவேந்திர குல வேளாளர் சமூகம்)

8) குடியாத்தம் (தனி) –  கே.சிந்து (பறையர்)

9) பல்லாவரம் – ஜே காமாட்சி (வன்னியர்)

10) ராஜபாளையம் –  கே ஜெகதீஸ்வரி (நாடார்)

11) ராணிப்பேட்டை – தாஹிரா (இஸ்லாமியர்)

MLA கதிரவன் நன்றி தொிவிக்கும் சுற்றுப்பயணம்

12) சிவகங்கை – குழந்தை ராணி (மறவர்)

13) சிவகாசி – எஸ் கீர்த்தனா (கம்மவார் நாயுடு)

மார்க்சிக் கம்யூனிஸ்ட் கட்சி -1

1) கீழ்வேளூர் (தனி) –  டி லதா (பறையர்)

அதிமுக சார்பாக வெற்றி பெற்றவர்கள்  6 பேர் :

1) பாப்பிரெட்டிப்பட்டி – மரகதம் வெற்றிவேல் (வெள்ளாளக் கவுண்டர்)

2) மதுராந்தகம் (தனி) – மரகதம் குமரவேல் (பறையர்)

3) ஏற்காடு (எஸ்.டி.) – பி. உஷாராணி (பழங்குடியினர்)

4) லால்குடி – லீமா ரோஸ் மார்டின் (உடையார்)

5) தாராபுரம் (தனி) –  பி சத்தியபாமா பொன்னுசாமி (தேவேந்திர குல வேளாளர்)

6) ஆரணி – எல்.ஜெ.ஜெயசுதா (அகமுடைய முதலியார்)

பாமக – 1

1) தர்மபுரி  – சௌமியா அன்புமணி

காங்கிரஸ் -1

1) குளச்சல் –  தாரகை கட்பட் (மீனவர்)

 

—   அங்குசம் தேர்தல் செய்திக்குழு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.