அங்குசம் பார்வையில் ‘மகாராஜா’ !

0

அங்குசம் பார்வையில் ‘மகாராஜா’. தயாரிப்பு: ‘பேஸன் ஸ்டுடியோஸ்’ சுதன் சுந்தரம் & ஜகதீஷ் பழனிச்சாமி. டைரக்டர்: நித்திலன் சாமிநாதன். ஆர்ட்டிஸ்ட்ஸ்: விஜய் சேதுபதி, அனுராக் காஷ்யப்,அபிராமி, மம்தா மோகன்தாஸ், சச்சனா நெமிதாஸ்,நட்டி, திவ்யா பாரதி, பி.எல்.தேனப்பன், பாரதிராஜா சிங்கம்புலி, அருள்தாஸ், முனீஸ்காந்த், வினோத் சாகர், சரவண சுப்பையா , ஸ்டான்லி, கல்கி. இணைத் தயாரிப்பு: கமல் நயன், ரிலீஸ்: ஃபைவ் ஸ்டார் செந்தில்.டெக்னீஷியன்கள் — பாடல்கள்: கவிப்பேரரசு வைரமுத்து, இசை: அஜனீஷ் லோக்நாத், ஒளிப்பதிவு: தினேஷ் புருஷோத்தமன், எடிட்டிங்: பிலோமின்ராஜ், ஸ்டண்ட்: அனல் அரசு, பிஆர்ஓ: சுரேஷ் சந்திரா & அப்துல் நாசர்.

மகாராஜா
மகாராஜா

https://businesstrichy.com/the-royal-mahal/

மகளை சீரழித்த கொடூரன்களை பழிவாங்கும் தந்தை. இதுதான் இந்த ‘மகாராஜா’ வின் சிம்பிளான ஒன்லைன். ஆனால் அதை தனது வித்தியாசமான கதை சொல்லல் என்ற பெயரில் சிக்கலான, இன்னும் சொல்லப் போனால், சாதாரண சினிமா ரசிகர்கள் எளிதாக புரிந்து கொள்ள முடியாத நிலையில் திரைக்கதையை எழுதிவிட்டார் டைரக்டர் நித்திலன் சாமிநாதன்.

அதே சமயம் இந்த திரைக்கதைக்குள் தன்னைப் புகுத்திக் கொண்ட விஜய் சேதுபதி, அதற்கேற்ற உடல்மொழி, எளிய உடுப்பு, நடிப்பு, வசன உச்சரிப்புத் தன்மை இவற்றை நிறைவாகவே தந்து நமது மனதை ஆக்கிரமித்து விட்டார் என்று தான் சொல்ல வேண்டும். தமக்கு இது 50–ஆவது படம், தலைப்பு வேறு மகாராஜா என்று வைத்தாயிற்று.

பல் கட்டும் சிகிச்சையில் நவீனம் காட்டும் KM DENTAL CLINIC

அதனால் அதற்குத் தகுந்த மாதிரி மாஸான எண்ட்ரி சீன், “எங்கள் தலைவனும் நீயே… தமிழ்நாட்டின் தலைமகனும் நீயே…” ன்னு இண்ட்ரோ சாங் கொடுமையெல்லாம் வைக்க நினைக்காத அந்த மனசு தாங்க விஜய் சேதுபதி. ஆனால் இந்த மனசு சராசரி சினிமா ரசிகனுக்கு தெரியாதுல்லண்ணே. உங்களை எல்லோருக்கும் பிடிக்கும் தான்.

அதுக்காக இடைவேளை முடிந்து அரைமணி நேரம் ஆனபின்பும் கதைக்குள் போகவில்லை என்றால், இது எந்த வகை சினிமா என்பதை டைரக்டர் நித்திலனிடம் நீங்கள் தான் கேட்டிருக்க வேண்டும்ணே. இருபது நிமிட க்ளைமாக்ஸ் ட்விஸ்டுக்கு இரண்டு மணி நேரம் வரை இழுத்து விடுவதால் என்ன பலன் கிடைத்துவிடும்.

உங்கள் மகளாக நடித்திருக்கும் சச்சனா க்ளைமாக்ஸில் பேசும் வசனம் கூட உயிர்ப்பு இல்லாமல் போனதற்கு கூட இந்த இழுவை யான திரைக்கதை தான் முக்கியக் காரணம். ஒரு குப்பைத்தொட்டியை கதாபாத்திரமாக்கியிருக்கிறார் டைரக்டர்.

3000 ரூபாய்க்கு LED டிவி Cheapest LED in Tamilnadu || Free Gifts Bismi Electronics Trichy

மகாராஜா
மகாராஜா

ஆனால் அந்த குப்பைத்தொட்டி ஒரு சீனில் வில்லன் அனுராக் காஷ்யப் வீட்டில் இருக்கு. ஒரு சீனில் விஜய் சேதுபதி வீட்டில் இருக்கு. போலீஸ் ஸ்டேஷனில் எனது குப்பைத்தொட்டி திருடு போய்விட்டதாக வி.சே.வும் கம்ப்ளெய்ண்ட் கொடுக்குறார்.

ஆனால் இடைவேளைக்குப் பிறகு வரும் ஃப்ளாஷ் பேக்கிலோ, லாரி விபத்து ஏற்படுட்டு இடியும் வீடு அனுராக் காஷ்யப் -அபிராமி வீடு. அந்த வீட்டில் தான் இந்த குப்பைத்தொட்டி இருக்கு. அதுவும் பரண் மேல் இருக்கு. எந்த வீட்ல டைரக்டரே குப்பைத்தொட்டிய பரண் மேல் வைப்பார்கள்? அதுவும் நீங்கள் இரும்புத் தகட்டில் டிசைன் பண்ணியது குப்பைத்தொட்டி மாதிரியே தெரியலயே.

ஏதோ அரிசி, பருப்பு போட்டு வைக்கிற சின்ன ட்ரம் மாதிரில்ல இருக்கு. க்ளைமாக்ஸ் ட்விஸ்டுக்காக இப்படியெல்லாமா? இந்த மாதிரியான பெரும் குழப்பத்திற்கு காரணம் எடிட்டர் பிலோமின்ராஜா? இல்ல உங்க ஸ்கிரிப்டான்னு நமக்கு சொல்லத் தெரியவில்லை.

ஒரு முடி திருத்தும் தொழிலாளி, ஒரு குப்பைத்தொட்டிக்காக அஞ்சு லட்சம் தர்றேன், ஏழு லட்சம் தர்றேன்னு சொல்ல முடியுமா? இப்படியெல்லாம் எவனும் சிந்தனை பண்ணக்கூடாதுங்கிறதுக்காக, அவனோட பேங்க் பாஸ்புக்கை காட்டி, அக்கவுண்ட்ல பதினஞ்சு லட்சம் இருப்பதா சொல்லி சோலிய முடிச்சுட்டீக. அனுராக் காஷ்யப், வினோத் சாகர் கும்பல், கொள்ளையடிக்கப் போகும் வீட்டில் கறி சமச்சு சாப்பிட்டு, அந்த வீட்டுப் பெண்களை சீரழிப்பதெல்லாம் ஜெய்சங்கர் காலத்து பிளாக் & ஒயிட் சினிமாவுலேயே வந்துருச்சு நித்திலன்.

கொடூரக் கொலை, பாலியல் வன்புணர்வு இதையெல்லாம் தனது அக்மார்க் பிராண்டாக வைத்திருக்கும் லோகேஷ் கனகராஜ் ஒருத்தர் பத்தாதா? நீங்களுமா? மம்தா மோகன்தாஸுக்கும் அபிராமிக்கும் சம வாய்ப்பு கொடுத்திருக்கிறார் இயக்குனர், ஓகே. ஆமா, இந்த பாரதிராஜா, தேனப்பன் கேரக்டர்கள் எதுக்கு சகோதரா? மகாராஜான்னா ராஜ கம்பீரமாக சிம்மாசனத்தில் இருக்க வேண்டும். ஆனால் இந்த ‘மகாராஜாவோ…..? —

-மதுரை மாறன்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen

Leave A Reply

Your email address will not be published.