இந்த தேர்தலில் மிகப்பெரிய வெற்றிகள் இரண்டு ! அரசியல் சுவையானது!
ஒன்று பலமுறை வெற்றி கண்ட செங்கோட்டையன் அரசியல் வாழ்க்கை முடிந்தது என்று நினைக்கும்பொழுது அடித்து ஆடத் தொடங்கிய அடுத்த இன்னிங்ஸ்!
இரண்டு முதல் முறை வெற்றி பெற்ற விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர்களில் ஒருவரான தோழர் வன்னியரசு முதல் இன்னிங்ஸ்!
செங்கோட்டையன் அதிமுகவை விட்டு விலகியது அதிர்ச்சி என்றால் விஜயை ஆட்சிக்குக் கொண்டு வந்த காரணங்களில் ஒருவராக மாறிவிட்டார்!
நான்காக இருந்த விடுதலை சிறுத்தைகள் கட்சி சட்டமன்ற உறுப்பினர்களின் எண்ணிக்கைப் பாதியாகக் குறைந்துவிட்ட நேரத்தில் சட்டமன்ற உறுப்பினராக ஆகியிருக்கும் தோழர் வன்னியரசு தவெக அரசு அமைப்பதற்கான பெரும்பான்மை எண்ணிக்கையே அவர் இல்லாமல் இல்லை என்று அதி முக்கியத்துவம் பெற்றுவிட்டார்!
— தென்னவன்
Comments are closed, but trackbacks and pingbacks are open.