மதுரை மகபூப்பாளையத்தில் உள்ள காங்கிரஸ் நிர்வாகியின் இல்லத்திற்கு வருகை தந்த சிவகங்கை நாடாளுமன்ற உறுப்பினர் கார்த்திக் சிதம்பரம் செய்தியாளர்களை சந்தித்து பேசுகையில் ..
நாடாளுமன்ற கூட்டத் தொடர் ஒத்திவைத்தும் கூட்டத்தொடர் முடித்து வைக்காமல் இருப்பது குறித்த கேள்விக்கு …
அதைப்பற்றி எனக்கு தெரியாது கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் சிறப்புக்கூட்டத்தொடர் கூட்டியது போல இந்த ஆண்டும் கூட்டுவார்கள் என்று நினைக்கிறேன்.
TVK அமைச்சர்கள் முதல்வர் விஜய் அடுத்த PM என்று சொல்வது குறித்த கேள்விக்கு …
எல்லா கட்சிகளுக்கும் ஆசை, கனவு, லட்சியம் உண்டு. அதை தடுக்க சட்டம் ஒன்றும் போட முடியாது. அவரவரின் விருப்பங்களை சொல்லிக்கொள்கிறார்கள் தங்கள் கட்சித்தலைவரின் அபிமானியைப் பற்றி பேசுகிறார்கள் Political reality என்ன என்பதைப்பற்றி எங்களுக்குத் தெரியும். 543தொகுதிகளில் 272 தொகுதிகளில் எந்த கூட்டணியின் கட்சி வெற்றி பெறுகிறதோ, அந்த கட்சியின் தலைவர்தான் இந்தியாவின் பிரதமர்.
MLA க்களுக்கு கார் வழங்குவது குறித்த கேள்விக்கு …….
நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு கார் வழங்கப்படவில்லை என்றாலும் கார் pool உள்ளது. எனவே வசதி இருப்பவர்கள் கார் வாங்குவதை தவிர்க்கலாம்.
தமிழர்கள் சுட்டுக்கொல்லப்பட்டது, மேகதாது அணை விவகாரம் குறித்த கேள்விக்கு …
கர்நாடகாவில் 3 தமிழகர்கள் கொல்லப்பட்ட விவகாரத்தில் முழுமையான விசாரணை நடைபெற்றபின் தான் தெரியும் காவிரி நீர் மேலாண்மை வாரியத்தின் உத்தரவின் அடிப்படையில் இருமாநிலங்களிலும் செயல்பட வேண்டும் என விரும்புகிறேன்.
திமுக கட்டமைப்பை மாற்றி அமைப்பது குறித்த கேள்விக்கு ..
இன்றைய காலகட்டத்திற்கு ஏற்ப திமுகவின் கட்டமைப்பை மாற்றி அமைக்கிறார்கள். திமுக 75 வருட கட்சி எனவே திமுகவையும், தமிழக வெற்றிக்கழகத்தையும் ஒப்பிட முடியாது.
தொகுதி மறுவரையறை குறித்து அமித்ஷா நிகழ்ச்சியில் மாற்றி பேசியது குறித்த கேள்விக்கு …
சட்டமன்றத்தில் பேசியதுதான் அரசின் நிலைப்பாடு. தமிழக வெற்றிக் கழக அரசு முன் அனுபவம் இல்லாத அரசு அதிகாரிகள் கொடுப்பதை வாசித்து விடுகிறார்கள். பிரதமர் பேசுவதாக இருந்தால்கூட அதிகாரிகள் தயார் செய்து மூத்த அமைச்சர்கள் திருத்தம் செய்த பிறகுதான் பிரதமர் பேசுவார். ஆனால் தமிழக வெற்றிக்கழகத்திற்கு கட்டமைப்பு இல்லாத காரணத்தால் இதுபோல் நடக்கிறது. அதை மாற்றிக்கொள்ள வேண்டும்.
MLAக்கள் ராஜினாமா செய்வது குறித்த கேள்விக்கு …….
இந்த அரசாங்கம் 5வருடங்கள் நீடிக்கும், TVK அரசு Insecure ஆக இருக்கக் கூடாது. ராஜினாமா செய்து கட்சியில் இணைப்பதை நான் வன்மையாக கண்டிக்கிறேன். அதுதொகுதி மக்களுக்கு நடக்கும் அநீதி அதை நான் ஏற்றுக்கொள்ளவில்லை. ராஜினாமா செய்வார்களுக்கு இடைத்தேர்தலில் சீட்டும் வழங்கக்கூடாது.
தாய்மாமன் தங்க மோதிரம் திட்டம் குறித்த கேள்விக்கு …
பிறந்த குழந்தைகளுக்கு ஒரு கிராம் தங்க மோதிரம் வழங்குவதற்கு பதில் மகளிர்உரிமைத்தொகையை 2000 ரூபாயாக உயர்த்தி வழங்கலாம்.
TVK – பிஜேபி இடையே இணக்கமான சூழல் உள்ளதாக சிபிஐஎம் தெரிவித்துள்ள கருத்துக்கு …
மத்திய அரசுடன் மாநில அரசு பரஸ்பர உறவோடு இருப்பது நல்லதுதான்.
திமுக – பாஜக கூட்டணி வைக்க வாய்ப்பு உள்ளது. De-limitataion என்ற வலையில் சிக்க வாய்ப்பு உண்டு. De – limitation கொண்டு வந்தால் தமிழ்நாட்டுக்கு நடக்கும் அநீதி.
விஜய் அரசியலுக்கு வந்தது போல தனுஷ், சிம்பு அரசியலுக்கு வரப்போவதாக வெளியாகும் தகவல் குறித்த கேள்விக்கு ….
நான் மூன்று பேரின் படத்தையும் பார்ப்பதில்லை என்றார்.
— ஷாகுல், படங்கள் : ஆனந்தன்






Comments are closed, but trackbacks and pingbacks are open.