அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘ பியார் பிரேமா கல்யாணம்’ ( நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி)

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தயாரிப்பு: ‘ரைஸ் ஈஸ்ட் எண்டெர்டெய்ன்மெண்ட் ‘ ஸ்ரீநிதி சாகர், டைரக்டர்: இளன், ஆர்டிஸ்ட்: இளன், சான்வீ மேக்னா, ராதிகா சரத்குமார், இளங்கோ குமரவேல், எம்.எஸ்.பாஸ்கர், கீதா கைலாசம், செந்தில் யோகி பாபு, மாறன், ஒளிப்பதிவு: தினேஷ், இசை: யுவன் சங்கர் ராஜா, எடிட்டிங்: பிரதீப் ராகவ், பிஆர்ஓ: யுவராஜ்

நெட் ஃபிளிக்ஸ் ஓடிடிக்காக தயாரான முழுநீளத் திரைப்படமான இந்த ‘பியார் பிரேமா கல்யாணம்’ ஆக.21 முதல் ஸ்ட்ரீமிங் ஆகிறது. துபாயில் சிவில் இன்ஜினியராக இருக்கும் ஹீரோ இளன், சென்னை வந்ததும் அவருக்கு பெண் பார்த்து முடிவு செய்கிறார் ஸ்டிரிக்ட் ஆபீசரான அப்பா எம்.எஸ்.பாஸ்கர். ஆனால் காபி ஷாப்பில் வேறொரு பெண்ணை (சான்வீ மேக்னா)பார்த்து லவ்வில் விழுகிறார் இளன். அவரையே கல்யாணமும் செய்து கொள்கிறார்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

இளன் தாலி கட்டியதும் மணமேடையில் கண் கலங்கி நிற்கும் தனது அம்மா ( ராதிகா சரத்குமார்) அப்பா ( இளங்கோ குமரவேல்) ஆகிய இருவரையும் பிரிய முடியாமல், இளனை வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கச் சொல்கிறார் சான்வீ மேக்னா. இளனின் அம்மா கீதா கைலாசத்திற்கு இதில் துளியும் விருப்பமில்லை. ஆனால் இளனோ…. சான்வீ மேக்னா மேல உள்ள ‘டீப் லவ்வால்’  வீட்டோடு மாப்பிள்ளையாக இருக்கச் சம்மதிக்கிறார். அங்கே போன பிறகு அவருக்கு ஏற்படும் அவமானங்கள், அவர் படும் கஷ்டங்கள்…. க்ளைமாக்ஸில் வழக்கம் போல சந்தோஷங்கள்… இதான் இந்த ‘பியார் பிரேமா கல்யாணம்’.

பியார் பிரேமா காதல் படம் மூலம் டைரக்டரான இளன் இந்த கல்யாணம் மூலம் ஹீரோவாகவும் டைரக்டராகவும் டபுள் சார்ஜ் எடுத்துள்ளார்.   இன்ஸ்டா ரீலீஸ் பிரபலம் சான்வீ மேக்னா, இளனுடனான ஃபர்ஸ்ட் மீட்டையே வீடியோ எடுத்து இன்ஸ்டாவில் போட்டு கிழிப்பது, அப்புறம் இளனிடமே வழிவது, ‘ஃபால் இன் லவ்’ வாகி தாலி கட்டியதும் தெறித்து ஓடுவது என படம் ஆரம்பித்து இருபது நிமிடம் கலர்ஃபுல் & ஜாய்ஃபுல்லாகத்தான் போகிறது. அப்புறம் அரை மணி நேரம் ஜவ்வு மிட்டாய்ல ஜவ்வரிசி கஞ்சிய ஊத்துன கதையாகிருச்சு. அதுக்கப்புறம் இருபது நிமிடம் இதே கஞ்சி தான். அப்புறம் க்ளைமாக்ஸ் வரை அரை மணி நேரம் ஜிவ்வுன்னு போகுது.  ஹீரோவாக இளன் பார்டர் மார்க்கில் பாஸாகியிருக்கார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

மாமியார் ராதிகா சரத்குமாரை அம்மான்னு கூப்பிடுவதும்…”மாப்ளே..‌” என அவர் பாசத்தை பொழிவதும்….வேலை இல்லாத வெட்டிப் பயலுக, வீட்டோடு மாப்பிள்ளையா போனா அஞ்சு நாளைக்குத் தான் மவுசு என்பதை டெஸ்ட் கிரிக்கெட்டை கம்பேர் பண்ணுவது, மாமியார் மற்றும் மனைவியின் அவமானத்தை சகித்துக் கொண்டு வாழ்வது எப்படி என்பதற்கு டிஜிட்டல் தலைமுறைக்கு நல்ல டியூசன் எடுத்துருக்கார் இளன். சான்வீ மேக்னா சும்மா ஜில்லுனு இருக்கார். முக்கால்வாசி சீன்களில் ஜிலீர் காஸ்ட்யூமில் கலக்குகிறார். இளனுடன் பெட்ரூம் சீனில் கிளுகிளுக்க வைக்கிறார்.நாலஞ்சு சீன்களில் நடிக்கவும் செய்திருக்கிறார்.

'Pyaar Prema Kalyanam'
‘Pyaar Prema Kalyanam’

கண்டிப்பா இதை சொல்லணும் இல்லையா…ஓடிடில ரிலீஸ் ஆகுறதாலோ என்னவோ…. அதுக்கேற்றபடி நடிச்சுருக்கார் ராதிகா சரத்குமார். கீதா கைலாசம் வழக்கம் போல குமுறி அழுகிறார், குபீர்னு சீறுகிறார். சிரிக்க வைக்க முயற்சி செய்து பார்த்து ஃபெயிலாகிவிட்டார் யோகி பாபு.  எம்.எஸ்.பாஸ்கர், இளங்கோ குமரவேல், இளனின் அண்ணியாக வரும் மோகன ப்ரியா ஆகியோர் ஓகே. சின்னச் சின்ன பிட்ஸ் சாங், பேக் ரவுண்ட் ஸ்கோரில் முடிந்த வரை சமாளித்திருக்கிறார் யுவன் சங்கர் ராஜா. க்ளைமாக்ஸில் எல்லோரும் எல்லோரிடமும் மன்னிப்புக் கேட்கிறார்கள். நாம யார்கிட்ட மன்னிப்பு கேட்க…?

அங்குசம் பார்வையில் ‘ பியார் பிரேமா கல்யாணம்’ ( நெட்ஃப்ளிக்ஸ் ஓடிடி) 45/100

–ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.