அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

அங்குசம் பார்வையில் ‘ராம் & லீலா’

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

மொத்தமாகவும் சில்லரையாகவும் கதை விற்கும் கடையின் கள்ளச்சாவி போட்டு, ஒரு கதையை மொத்தமாகத் திருடி, இரண்டரை மாசத்துக்கு முன்னால, அதாவது கடந்த ஜூன் மாதம், ‘டபுள் ஆக்குபன்ஸி’ங்கிற படத்தை எடுத்தார் டைரக்டர் அஸ்வின் கந்தசாமி. இப்ப அதே கடைக்குப் போய், யாருக்கும் தெரியாதுன்னு நினைச்சுக்கிட்டு, அதே கதையை திருடி வந்து ‘ராம் & லீலா’ங்கிற படத்தை எடுத்து இந்த ஆகஸ்ட்.21-ஆம் தேதி ரிலீஸ் பண்ணியிருக்கார் டைரக்டர் ராமச்சந்திரன் கண்ணன்.

அஸ்வின் ஆட்டையப் போட்ட கதையில காலை 6 மணியிலிருந்து மாலை 6 மணி வரை பெண்ணாகவும் அதன் பின் ஆணாகவும் ஹீரோ மாறுவார். அதுக்கு மரபணு கோளாறுன்னு ஒரு தினுசா திரைக்கதையைக் கொண்டு போயி கதறவச்சார். ஆனா இந்த ராமச்சந்திரன் கண்ணனோ, அதே காலை 6—மாலை 6-ல் ஹீரோயினைக் கொண்டு வந்து, பத்தும் பத்தாததுக்கு ஆயிரத்தைந்து ஐநூறு ஆண்டுகளுக்கு முன்பு, ஏலியன்களாக பிறந்த வம்சக் கோளாறுன்னு வேற தினுசா திரைக்கதையைக் கொண்டு போய் நம்மை கதிகலங்க வச்சிருக்காரு.

இந்த வார அங்குசம் வார இதழில்…

’டபுள் ஆக்குபன்ஸி’யில ஹீரோவும் ஹீரோயினும் ஒரே ஆள். பகல் 12 மணி நேரம் ஹீரோயினா இருப்பவரை இன்னொரு ஹீரோ லவ் பண்ணுவாரு. இதுல பகல் 12 மணி நேரம் பெண்ணாக இருக்கும் ஹீரோயினை ஹீரோ லவ் பண்றாரு. ராத்திரி 12 மணி நேரம் ஹீரோவின் நண்பனாக வருகிறார் ஹீரோயின். என்னை தலை சுத்துதா உங்களுக்கு?

ராம் & லீலா
ராம் & லீலா

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

இதுல ஹீரோ ரியோ பேரு ராம். ஹீரோயின் வர்த்திகா பேரு லீலா. டைட்டிலுக்கு மேட்ச் ஆகிருச்சா? அது போதும். மத்தது கிடக்கட்டும்னு நினைப்புல திரைக்கதையை ஜவ்வாக்கிவிட்டார் டைரக்டர் ராமச்சந்திரன் கண்ணன்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

என்ன ஒரு ஆறுதல்னா காமெடி ஜானரில் களம் இறங்கி, அதுல ஓரளவு பாஸாகியிருக்கார் ரியோ. வெள்ளை வெளேர்னு இருக்கார் ஹீரோயின். “சாயங்காலம் ஆறு மணிக்கு விளக்கு வச்ச பிறகு எங்க அம்மா வெளியில அனுப்பமாட்டாங்க” இந்த டயலாக்கை இடைவேளை வரை பேசுகிறார். அவ்வளவு தான்.

ரியோவின் அம்மா-அப்பாவாக மாளவிகா அவினாஷ், சேத்தன் வருகிறார்கள். ரியோவின் தங்கையாக வரும் [தாஃபியா அபுன்னு நினைக்கிறோம்] சின்னப் பொண்ணு துருதுருன்னு இருக்கிறார். சாயங்காலம் 6 மணிக்கு மேல் ரியோவின் நண்பனாக வருபவரை காதலிக்கிறார்.

ஹீரோயினின் அம்மாவாக தீபா வெங்கட், தாத்தாவாக காத்தாடி ராமமூர்த்தி, ரியோவின் மாமாவாக முனீஸ்காந்த், ஹீரோயினின் தாய்மாமா சின்ன வண்டுவாகவும் சாயங்காலம் 6 மணிக்கு மேல் சின்னப் பொண்ணாகவும் மா.கா.பா.ஆனந்த்[ஸ்ஸ்ஸ்….ஸப்பா முடியலடா சாமீ] வருகிறார்கள். ஹீரோனைப் பத்தி எல்லா ரகசியங்களும் தெரிஞ்ச பிறகு நடக்கும் கல்யாணக் கூத்துகள் பெருங்கூத்து.

ரசிகர்களை கிறுகிறுக்க வைக்கும் வினோத லீலைகள் தான் இந்த ‘ராம் & லீலா.

அங்குசம் பார்வையில் ‘ராம் & லீலா’ 38/100

–ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.