இங்கிலாந்து பயணம் இதுதான் காரணம்!

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

இங்கிலாந்தைச் சுற்றி பல சிறு தீவுகள், தனி நாடாய் இருக்கின்றன. அவற்றின் விசேஷம் என்னவென்றால் :

அவைகள், உலகின் பெரும் பணக்காரர்கள்/கார்ப்பரேட்கள்/Money launderers/   போதை வியாபாரிகளுக்கு  ‘Tax havens’  தருகின்றன..! அதாவது…

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

கறுப்புப்பணத்தை  பாதுகாப்பாய், ரகசியமாய் சேமித்து வைக்கும் வசதிகள் தருகின்றன..!

அங்கிருக்கும் பாங்க்குகளை  உலகின் எந்த நாடாலும் கேள்வி கேட்க முடியாது..! ரகசிய பாஸ்வேர்ட் அல்லது Account holder கண்கள் கொண்டு மட்டுமே ஆபரேட் செய்ய முடியும்..! ஒருவர் தன் கறுப்புப் பணத்தை 100% பாதுகாப்பாய்  வைத்துக் கொண்டு,  தேவைப்படும் போது எடுக்க முடியும்..!

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

இந்தியாவிலிருந்து தப்பி  ஓடிப்போன பண முதலைகள், விஜய் மல்லையா, லலித் மோடி போன்ற பலர்,  பிரிட்டனில் சென்று வாழ, முக்கிய காரணம் இதுதான்..!  நம்ம அரசியல்வாதிகள், அடிக்கடி  பிரிட்டன் பயணம் போவதற்கும் காரணம் இதுவே..!

“விஜய் இங்கிலாந்து போயிருக்கார்..! அங்கே ஏற்கனவே திரிஷா இருக்கார்..! கீர்த்தி சுரேஷ் போறார்..!”  என்றெல்லாம் பேசிக் கொண்டு  வீணாய்  கிளுகிளுப்படைபவர்களே, புரிஞ்சிக்கோங்க,  அதெல்லாம் சப்பை மேட்டர்..!

விஜய் கூட ஆதவ் போயிருக்கார் என்பதுதான் முக்கிய மேட்டர்..! ஆதவ்வின் மாமனார்  அந்தத் தீவுகளில் ஒன்றில் சொந்த பேங்க் வைத்திருக்கலாம், அதைப்  பார்த்துட்டு வரலாம் என்று  இருவரும் போயிருக்கலாம், இல்லையா..?

2+2 = 4 என்று புரிந்து கொள்ளக் கூடியவர்கள் புரிந்து கொள்ளலாம்..! இல்லையென்றால்,  “ஓம்சக்தி, பராசக்தி, திமுக மட்டுமே தீயசக்தி..!” என்று நரம்பு  புடைக்க  கத்திக்கொண்டு,  வேறு திசை பார்க்கலாம்..!

—  சங்கர் ராஜரத்தினம்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.