அழுகையை நிறுத்தி செயல்பாட்டில் கவனம் செலுத்துங்கள்! தினமலர் ஆசிரியர் சொன்ன அட்வைஸ் !

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

ஜனநாயகன் படத்தை பார்க்கச் சென்றபோது தியேட்டரில் சில அமைச்சர்களும், சட்டமன்ற உறுப்பினர்களும் கண்ணீர் விட்டு அழுததாக செய்திகள் வருகின்றன.

அமைச்சர்கள் மட்டுமல்ல… தமிழகத்தில் மேலும் பலர்  அழுதுகொண்டுதான் இருக்கிறார்கள்.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

பயிருக்கு தண்ணீர் பாய்ச்ச தேவையான தண்ணீர் கிடைக்காததால் விவசாயிகள் அழுகிறார்கள்.

அரிசியின் விலை நாளுக்கு நாள் உயர்ந்துகொண்டே போவதால், குழந்தைகளின் பசியாற்ற என்ன செய்வது என்று நினைத்து ஏழை குடும்பத் தலைவர்கள் அழுகிறார்கள்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

கோயில் சொத்துகள் தொடர்ந்து கொள்ளை போவதைப் பார்த்து ஹிந்துக்கள் கண்ணீர் வடிக்கிறார்கள்.

லாக்கப் கொடுமைகளுக்கு பலியான கைதிகளின் உறவினர்கள், இழந்த உறவை நினைத்து கண்ணீர் விடுகிறார்கள்.

திரைப்படத்தை பார்த்து அழும் அமைச்சர்கள், தங்களுக்கு ஓட்டுப் போட்டு ஆட்சியில் அமரவைத்த மக்களின் கண்ணீரைத் துடைக்க என்ன வழி என்று யோசித்து, அதற்கான செயல்பாடுகளில் இறங்கினால்  நன்றாக இருக்கும்.

—  கோபால்ஜீ – தினமலர் ஆசிரியர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.