திருச்சி சட்டக்கல்லூரி மாணவியை கடத்திய மாணவன் கைது

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

திருச்சி சட்டக்கல்லூரி மாணவியை கடத்திய மாணவன் கைது

இந்த வார அங்குசம் வார இதழில்…

பெரம்பலூர் மாவட்டம் வேப்பந்தட்டை பகுதியை சேர்ந்தவர் குணாநிதி உயர்நீதிமன்ற வழக்கறிஞராக உள்ளார். இவர் மகன் பாரத் குணா (வயது-28) திருச்சி சட்ட கல்லூரியில் படித்து வந்த நிலையில் கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டுள்ளார். என்கிற தகவல் திருச்சியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

திருச்சி சட்டக் கல்லூரியில் பயிலும் தனது மகளை கடத்தி சென்று விட்டதாக திருச்சி கே. கே ..நகர் காவல் நிலையத்தில் 26/ 12 /2019 அன்று நாகப்பட்டினத்தை சேர்ந்த பெண்ணின் தந்தை புகார் அளித்திருந்தார். அப்புகாரை ஏற்றுக்கொண்ட காவல்துறையினர் 27/12/ 2019 அன்று புகாரை பதிவு செய்தனர். அதன் அடிப்படையில் போலீசார் தேடி வந்த நிலையில் காணாமல் போன பெண் பெரம்பலூரில் இருப்பதாக தகவல் கிடைத்தது.

போலீசார் அப்பெண்ணினை மீட்டு விசாரணை நடத்தினர். இதில் பாரத் குணா தன்னை காதலிப்பதாக ஆசை காட்டி ஏமாற்றி அழைத்து சென்று விட்டதாக தெரிவித்துள்ளார். அதனடிப்படையில் போலீசார் கண்டோன்மென்ட் அனைத்து மகளிர் காவல் நிலையத்திற்கு வழக்கினை மாற்றி வழக்கு பதிந்து கைது செய்துள்ளனர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Leave A Reply

Your email address will not be published.