அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருப்பரங்குன்றம் மலையைச் சுற்றி போலீஸ் பாதுகாப்புடன் நில அளவீட்டுப் பணி தொடக்கம்…!

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

மத்திய தொல்லியல்துறை பொறியாளர் உமேஷ் தலைமையில் 7 நாட்கள் திருப்பரங்குன்றம் மலை மற்றும் அதன் சுற்றியுள்ள பகுதியில் அளவிடும் பணி நடைபெறும் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் தீபம் ஏற்றும் விவகாரம் தொடர்பாக சர்ச்சை ஏற்பட்டது.

இந்த சர்ச்சையான நிலையில் தீபதூண் தொடர்பான வழக்கு நிலுவையில் உள்ளது. மலையில் மத்திய தொல்லியல் துறை கட்டுப்பாட்டில் கொண்டு வரவேண்டும். மலையை சுற்றியுள்ள ஆக்கிரமப்புகளை அகற்ற வேண்டும் மலையில் பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என கேகே.ரமேஷ் என்பவர் கடந்த ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் வழக்கு தொடர்ந்து இருந்தார்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

2026 June 11 - 17 Angusam Book

இந்த வழக்கு தொடர்பாக விசாரணை மேற்கொள்ளப்பட்ட நிலையில் கடந்த மாதம் இந்த வழக்கு நீதி பதிகள் சுவாமிநாதன் ஸ்ரீமதி முன்னிலையில் கடந்த மாதம் விசாரணை நடைபெற்றது. திருப்பரங்குன்றம் மலை முழுவதையும் மத்திய தொல்லியல் துறை  ஆய்வு செய்ய வேண்டும்.  முழு ஆய்வு நடத்தி அதன் அறிக்கையை மே மாதம் இறுதிக்குள் நீதி மன்றத்தில் சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதனை தொடர்ந்து இன்று திருப்பரங்குன்றம் மலையை அளவீடு செய்வதற்காக மத்திய தொல்லியல் துறை பொறியாளர் உமேஷ் திருமங்கலம் கோட்டாட்சியர் சிவ ஜோதி வருவாய் துறையினர் நில அளவை பிரிவு அதிகாரிகள் திருப்பரங்குன்றம் காவல் துறை பாதுகாப்புடன் திருப்பரங்குன்றம் மலைக்குச் செல்லும் பழனியாண்டவர் கோவில் தெரு ,கோட்டை தெரு, கோடாங்கி தோப்பு மற்றும் மலையை சுற்றி அளவீடும் பணியினை தொடங்கி உள்ளனர். இன்று முதல் 7 நாட்களுக்கு இந்த அளவீடு பணிகள் நடைபெறும் எனவும் DGPS என்ற நவீன அளவீடு கருவி மூலம்அளவீடு செய்யும் பணி நடைபெற்று வருகிறது.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.