அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – 2026 – அங்குசம் நடத்திய களநிலவரம் – வெற்றி வாய்ப்பு யாருக்கு….?

திருச்சியில் அடகு நகையை விற்க

2026 சட்டமன்றத் தேர்தலுக்கு அதிமுக – பாஜக இடையே கூட்டணி ஏற்பட்டு 2025 ஏப்ரல் 11ஆம் நாள் அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்டது. இதனைத் தொடர்ந்து, அங்குசம் சட்டமன்றத் தேர்தலில் களநிலவரம் யாருக்கு வாய்ப்பாக உள்ளது என்பதைத் தரவுகளின் அடிப்படையில் ஆராயத் தொடங்கியது.

2021 சட்டசபை தேர்தல்

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

முதலில் 2021ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் 234 தொகுதிகளிலும் ஒவ்வொரு கட்சியும் (திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி, நாம் தமிழர், மக்கள் நீதி மையம், அம்மா மக்கள் முன்னேற்றக் கழகம்) வாங்கிய வாக்கு விவரங்கள் சேகரிக்கப்பட்டு, அவை பட்டியலிடப்பட்டன.

2024 மக்களவை தேர்தல்

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

2024 மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு தொகுதியிலும் உள்ள 6 சட்டமன்றத் தொகுதிகளில் ஒவ்வொரு கட்சியும் வாங்கிய வாக்கு விவரங்கள் சேகரிக்கப்பட்டுப் பட்டியலிடப்பட்டன.பின்னர், சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி, அதிமுக கூட்டணி கட்சிகள் எவ்வளவு வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றன என்பதும் பிற கட்சிகள் வாங்கிய வாக்கு விவரங்களும் பட்டியலிடப்பட்டன.

திமுக கூட்டணியை விட பாமக முன்னணி

தொடர்ந்து 2024 மக்களவைத் தேர்தலில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதியிலும் கட்சிகள் பெற்ற வாக்கு விவரங்கள் பட்டியலிடப்பட்டன. இதன் மூலம் மக்களவை தேர்தலில் தர்மபுரி தொகுதியில் வெற்றி பெற்ற திமுகவை எதிர்த்துப் போட்டியிட்ட பாட்டாளி மக்கள் கட்சி தர்மபுரி, பென்னகரம், பாப்பிரெட்டிபட்டி ஆகிய 3 தொகுதிகளில் திமுக கூட்டணியைவிட அதிக வாக்கு பெற்றிருந்தது. அதிமுக வாங்கிய வாக்கு விவரங்கள், நாம் தமிழர் வாங்கிய வாக்கு விவரங்களும் பட்டியலிடப்பட்டன.

2021 சட்டமன்றத் தேர்தலில் திமுக வெற்றி பெற்ற தொகுதியில், மக்களவைத் தேர்தலில் திமுக முன்னணி பெற்றுள்ளதா? அதிமு, பாஜக முன்னணி பெற்றுள்ளதா? அல்லது திமுக குறைவாகப் பெற்றுள்ளதா? அதிமுக, பாஜக குறைவாகப் பெற்றுள்ளதா? என்பது கவனமாக ஆராயப்பட்டது. தொடர்ந்து 2026 சட்டமன்றத் தேர்தலுக்கான களநிலவரத்தை முடிவு செய்ய, 2021 சட்டமன்றத் தொகுதியில் திமுக கூட்டணி வேட்பாளர் வாங்கிய வாக்கு, மக்களவையில் அதே தொகுதியில் அதிமுக கூட்டணி வாங்கிய வாக்குகளும் பாஜக கூட்டணி கட்சிகள் பெற்ற வாக்குகளும் இணைத்துக் கொள்ளப்பட்டன. அப்படி இணைத்துப் பார்த்தபோது திமுக கூட்டணிக்கு விழுப்புரம், சேலம், கோவை, தர்மபுரி, கிருஷ்ணகிரி, திருப்பூர் மாவட்டங்களில் சட்டமன்றத் தேர்தலைவிடப் பல தொகுதிகளில் வாக்குகள் குறைவாக இருந்தது தெரியவந்தது.

முதன்முறையாக திமுக, தேமுதிக கூட்டணி - பிரேமலதா விஜயகாந்த் கூறியது என்ன? - BBC News தமிழ்திமுகவில் தேமுதிக இணைப்பு

2021 சட்டமன்றத் தொகுதியில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம்+மக்களவை தேர்தலில் சட்டமன்றத் தொகுதியில் கட்சிகள் பெற்ற வாக்கு சதவீதம் களநிலவரத்திற்குக் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டது. மேலும் திமுக கூட்டணியில் தற்போது 2.5% உள்ள தேமுதிக கூட்டணியில் இணைந்துள்ளது. பல சிறிய கட்சிகளும் கூட்டணியில் இணைந்துள்ளன. திமுக கூட்டணியிலிருந்து விலகிய தமிழர் வாழ்வுரிமை கட்சியின் வாக்கு சதவீதமும் கணக்கில் கொள்ளப்பட்டது. ஏறத்தாழத் திமுக கூட்டணி 44% – 48% வாக்குகளைப் பெறலாம் என்பதும். அதிமுக, பாஜக கூட்டணிக் கட்சிகள் 32% – 36% வாக்குகளைப் பெறலாம் என்பது கண்டறியப்பட்டது.

வாக்கு வங்கி இல்லாத விஜய்

நாம் தமிழர் தற்போதைய 8% வாக்கு வங்கியில் சிறு சேதாரம் ஏற்பட வாய்ப்புள்ளது. வாக்கு வாங்கி எதுவும் இல்லாத தமிழக வெற்றிக் கழகம் களநிலவரத்தில் இணைத்துக்கொள்ளப்படவில்லை. தேசிய அளவில் பல்வேறு கருத்துக்கணிப்பு வாயிலாகத் தவெக 6% வாக்குகளைப் பெற வாய்ப்புள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

 விஜய்
விஜய்

20 சதவீத வாக்குகளை பிரிக்கும் சிறு கட்சிகள்

திமுக கூட்டணி+அதிமுக கூட்டணி கட்சிகள் சுமார் 80% வாக்குகளைப் பெறும். எஞ்சியுள்ள 20% வாக்குகளை நாம் தமிழர், தமிழக வெற்றிக் கழகம், தமிழக வாழ்வுரிமை கட்சி, சசிகலா தொடங்கிய அனைத்திந்தியப் புரட்சித்தலைவர் மக்கள் முன்னேற்றக் கழகம், மருத்துவர் இராமதாசு தொடங்கிய அய்யா பாசறை மக்கள் கட்சி, புதிய தமிழகம் மற்றும் சுயேட்சைகள் பிரித்துக்கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

திமுக ஆதரவு நிலை

களநிலவரத்தில் எதிர்க்கட்சிகள் கூறுவதுபோல் திமுக ஆட்சி மீது மக்களுக்கு எதிர்ப்பு மனநிலை இருப்பதாக அறியமுடியவில்லை, திமுக நிறைவேற்றிய பல்வேறு நலத்திட்டங்களின் வழியாகவும், தற்போது அறிவித்துள்ள தேர்தல் வாக்குறுதிகளின் வழியாகவும் பெண்களின் அமோக ஆதரவு அலையைத் திமுக பெற்றுள்ளது என்பது கண்டறியப்பட்டது. திமுக மற்றும் கூட்டணிக் கட்சி தலைவர்களின் தொடர் தேர்தல் பிரச்சாரம் திமுகவுக்கு வலிமை சேர்த்துள்ளது.

எடப்பாடி பழனிசாமி ஸ்டெர்லைட் துப்பாக்கிச் சூடு குறித்து சொன்னது தவறான தகவல்" - ஆணையம் அறிக்கை - BBC News தமிழ்அவதூறு பரப்பும் அதிமுக

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

அதிமுக தரப்பில் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி கடுமையாகப் பிரச்சாரம் செய்துவருகிறார். திமுகவின் தவறுகளையும், தன் ஆட்சிக் காலத்தின் சாதனைகளையும் பட்டியலிட்டு வாக்கு சேகரிக்க வேண்டிய நிலையில், திமுக தலைவர் ஸ்டாலின் மீதும், மறைந்த திமுக தலைவர் கருணாநிதி மீது அவதூறு பரப்பும் வகையில் பேசுவது வாக்குகள் கை நழுவிப் போகவும் வாய்ப்பு உள்ளன. அதிமுகவுக்கான ஆதரவு அலையைக் காணமுடியவில்லை.

சசிகலாவும் காரணம்தான்

சசிகலா தொடங்கியுள்ள புதிய கட்சியால் தென்மாவட்டங்களில் அதிமுக கூட்டணி கட்சிகள் கணிசமான சேதாரத்தைச் சந்திக்கும். வடக்கு மாவட்டங்களில் மருத்துவர் இராமதாசின் கட்சியால் அதிமுக கூட்டணிக்குக் கணிசமான சேதாரம் ஏற்பட வாய்ப்புகள் உள்ளன. சமகாலத்தில் ஏற்பட்ட கூட்டணிகளால் கட்சிகளுக்கு ஏற்படும் இலாபமும், நட்டமும் கணக்கில் கொள்ளப்பட்டே களநிலவரம் வெளியிடப்பட்டுள்ளது.

சசிகலா - ராமதாஸ் இடையே கூட்டணி முறிவு...?! - ஒரே ஒரு சின்ன சொதப்பலால் சிதைந்த தேர்தல் வியூகம்...! - TamilWireகளநிலவரத்தில் சொல்லப்பட்ட யாருக்கு வாய்ப்பு என்பதில் இறுதிக்கட்டத்தில் சிறிதளவு மாற்றம் ஏற்படவும் வாய்ப்புகள் உள்ளன என்பது மறுக்கமுடியாத உண்மையாகும்.

கருத்துக் கணிப்புக்கும், களநிலவரத்திற்கும் உள்ள வித்யாசம்

குறிப்பாகத் தவெக தலைவர் சென்னை பெரம்பூர், திருச்சி கிழக்கு இரு தொகுதிகளில் போட்டியிடுகின்றார். ஒரு கருத்துக்கணிப்பு இரு தொகுதியிலும் வெல்லுவார் என்றும், இரு தொகுதியிலும் தோல்வி அடைவார் என்றும், ஏதாவது ஒன்றில் வெற்றி பெறுவர் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. களநிலவரத்தில் வாக்கு வாங்கி இல்லாத தவெக களநிலவரத்தில் இணைத்துக்கொள்ளப்படவில்லை என்பதுதான் கருத்துக்கணிப்புக்கும், களநிலவரத்திற்கும் இடையே உள்ள வேறுபாடு என்பதை அனைவரும் அறிந்துகொள்ளவேண்டும்.

இனி, தமிழகத்தில் உள்ள 234 தொகுதிகள் வாரியாக யாருக்கு வெற்றி வாய்ப்பு உள்ளது என்பதை அறிந்துகொள்ளலாம்.

234 தொகுதிகளின் வெற்றி வாய்ப்பு களநிலவரம்

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் – 2026
தேர்தல் கள நிலவரம் – வாய்ப்பு தொகுதி விவரங்கள்
சென்னை மண்டலம் (42)
001. கும்மிடிப்பூண்டி (திமுக)
002. பொன்னேரி (தனி) (திமுக)
003. திருத்தணி (தேமுதிக)
004. திருவள்ளூர் (திமுக)
005. பூந்தமல்லி (தனி) (திமுக)
006. ஆவடி (திமுக)
007. மதுரவாயல் (திமுக)
008. அம்பத்தூர் (திமுக)
009. மாதவரம் (திமுக)
010. திருவெற்றியூர் (சிபிஎம்)
011. ஆர்.கே.நகர் (திமுக)
012. பெரம்பூர் (திமுக)
013. கொளத்தூர் (திமுக)
014. வில்லிவாக்கம் (திமுக)
015. திரு.வி.க.நகர் (தனி) (திமுக)
016. எழும்பூர் (தனி) (திமுக)
017. இராயபுரம் (திமுக)
018. துறைமுகம் (திமுக)
019. சேப்பாக்கம் (திமுக)
020. ஆயிரம் விளக்கு (திமுக)
021. அண்ணா நகர் (திமுக)
022. விருகம்பாக்கம் (திமுக)
023. சைதாப்பேட்டை (திமுக)
024. தியாகராய நகர் (அதிமுக)
025. மயிலாப்பூர் (திமுக)
026. வேளச்சேரி (காங்கிரஸ்)
027. சோழிங்கநல்லூர் (திமுக)
028. ஆலந்தூர் (திமுக)
029. ஸ்ரீபெரும்புதூர் (தனி) (காங்கிரஸ்)
030. பல்லாவரம் (தேமுதிக)
031. தாம்பரம் (திமுக)
032. செங்கல்பட்டு (திமுக)
033. திருப்போரூர் (விசிக)
034. செய்யூர் (தனி) (விசிக)
035. மதுராந்தகம் (தனி) (அதிமுக)
036. உத்திரமேரூர் (திமுக)
037. காஞ்சிபுரம் (திமுக)
038. அரக்கோணம் (தனி) (விசிக)
039. சோளிங்கர் (பாமக)
040. காட்பாடி (திமுக)
041. இராணிப்பேட்டை (திமுக)
042. ஆற்காடு (திமுக)

வடக்கு மண்டலம் (49)

043. வேலூர் (திமுக)044. அணைக்கட்டு (திமுக)
045. கே.வி.குப்பம் (தனி) (திமுக)
046. குடியாத்தம் (தனி) (தேமுதிக)
047. வாணியம்படி (இயூமுலீ)
048. ஆம்பூர் (திமுக)
049. ஜோலார்பேட்டை (திமுக)
050. திருப்பத்தூர் (திமுக)
051. ஊத்தங்கரை (தனி) (திமுக)
052. பர்கூர் (திமுக)
053. கிருஷ்ணகிரி (காங்கிரஸ்)
054. வேப்பனஹள்ளி (திமுக)
055. ஓசூர் (அதிமுக)
056. தளி (பாஜக)
057. பாலக்கோடு (அதிமுக)
058. பென்னாகரம் (பாமக)
059. தர்மபுரி (பாமக)
060. பாப்பிரெட்டிப்பட்டி (அதிமுக)
061. அரூர் (தனி) (திமுக)
062. செங்கம் (தனி) (திமுக)
063. திருவண்ணாமலை (திமுக)
064. கீழ்பென்னாத்தூர் (திமுக)
065. கலசப்பாக்கம் (திமுக)
066. போளூர் (தேமுதிக)
067. ஆரணி (அதிமுக)
068. செய்யாறு (அதிமுக)
069. வந்தவாசி (தனி) (திமுக)
070. செஞ்சி (திமுக)
071. மைலம் (அதிமுக)
072. திண்டிவனம் (அதிமுக)
073. வானூர் (தனி) (அதிமுக)
074. விழுப்புரம் (அதிமுக)
075. விக்கிரவாண்டி (பாமக)
076. திருக்கோயிலூர் (அதிமுக)
077. உளுந்தூர்பேட்டை (அதிமுக)
078. ரிஷிவந்தியம் (திமுக)
079. சங்கராபுரம் (திமுக)
080. கள்ளக்குறிச்சி (தனி) (அதிமுக)
081. கெங்கவல்லி (தனி) (அதிமுக)
082. ஆத்தூர் (தனி) (காங்கிரஸ்)
083. ஏற்காடு (பழங்குடி) (அதிமுக)
084. ஓமலூர் (அதிமுக)
085. மேட்டூர் (அதிமுக)
086. எடப்பாடி (அதிமுக)
087. சங்ககிரி (அதிமுக)
088. சேலம் மேற்கு (திமுக)
089. சேலம் வடக்கு (பாமக)
090. சேலம் தெற்கு (திமுக)
091. வீரபாண்டி (திமுக)

கொங்கு மண்டலம் (44)

092. இராசிபுரம் (தனி) (திமுக)
093. சேந்தமங்கலம் (பழங்குடி) (திமுக)
094. நாமக்கல் (அதிமுக)1
095. பரமத்தி வேலூர் (அதிமுக)
096. திருச்செங்கோடு (அதிமுக)
097. குமாரபாளையம் (அதிமுக)
098. ஈரோடு கிழக்கு (காங்கிரஸ்)
099. ஈரோடு மேற்கு (திமுக)
100. மொடக்குறிச்சி (மதிமுக)
101. தாராபுரம் (தனி) (திமுக)
102. காங்கேயம் (திமுக)
103. பெருந்துறை (அதிமுக)
104. பாவனி (அதிமுக)
105. அந்தியூர் (அதிமுக)
106. கோபிசெட்டிபாளையம் (திமுக)
107. பவானிசாகர் (தனி) (சிபிஐ)
108. உதகமண்டலம் (காங்கிரஸ்)
109. கூடலூர் (தனி) (திமுக)
110. குன்னூர் (திமுக)
111. மேட்டுப்பாளையம் (அதிமுக)
112. அவினாசி (தனி) (திமுக)
113. திருப்பூர் வடக்கு (அதிமுக)
114. திருப்பூர் தெற்கு (திமுக)
115. பல்லடம் (அதிமுக)
116. சூலூர் (அதிமுக)
117. கவுண்டம்பாளையம் (அதிமுக)
118. கோவை வடக்கு (பாஜக)
119. தொண்டாமுத்தூர் (அதிமுக)
120. கோவை தெற்கு (திமுக)
121. சிங்கநல்லூர் (அதிமுக)
122. கிணத்துக்கடவு (திமுக)
123. பொள்ளாசி (அதிமுக)
124. வால்பாறை (தனி) (திமுக)
125. உடுமலைப்பேட்டை (திமுக)
126. மடத்துக்குளம் (திமுக)
127. பழனி (சிபிஎம்)
128. ஒட்டன்சத்திரம் (திமுக)
129. ஆத்தூர் (திமுக)
130. நிலக்கோட்டை (தனி) (திமுக)
131. நத்தம் (திமுக)
132. திண்டுக்கல் (திமுக)
133. வேடசந்தூர் (திமுக)
134. அரவக்குறிச்சி (திமுக)
135. கரூர் (திமுக)

மத்திய மண்டலம் (52)

136. கிருஷ்ணராயபுரம் (தனி) (திமுக)
137. குளித்தலை (திமுக)
138. மணப்பாறை (மமக)
139. ஸ்ரீரங்கம் (திமுக)
140. திருச்சி மேற்கு (திமுக)
141. திருச்சி கிழக்கு (திமுக)
142. திருவெறும்பூர் (திமுக)
143. இலால்குடி (திமுக)
144. மண்ணச்சநல்லூர் (திமுக)
145. முசிறி (திமுக)
146. துறையூர் (தனி) (காங்கிரஸ்)
147. பெரம்பலூர் (தனி) (திமுக)
148. குன்னம் (திமுக)
149. அரியலூர் (அதிமுக)
150. ஜெயங்கொண்டம் (பாமக)
151. திட்டக்குடி (தனி) (திமுக)
152. விருத்தாச்சலம் (தேமுதிக)
153. நெய்வேலி (அதிமுக)
154. பண்ருட்டி (விசிக)
155. கடலூர் (காங்கிரஸ்)
156. குறிஞ்சிப்பாடி (திமுக)
157. புவனகிரி (அதிமுக)
158. சிதம்பரம் (மநேஜக -திமுக)
159. காட்டுமன்னார்கோயில் (தனி) (விசிக)
160. சீர்காழி (தனி) (மதிமுக)
161. மயிலாடுதுறை (காங்கிரஸ்)
162. பூம்புகார் (திமுக)
163. நாகப்பட்டினம் (மமக)
164. கீழ்வேளூர் (தனி) (சிபிஎம்)
165. வேதாரண்யம் (அதிமுக
166. திருத்துறைப்பூண்டி (தனி) (சிபிஐ)
167. மன்னார்குடி (திமுக)
168. திருவாரூர் (திமுக)
169. நன்னிலம் (எஸ்பிஐடி – திமுக)
170. திருவிடைமருதூர் (தனி) (திமுக)
171. கும்பகோணம் (திமுக)
172. பாபநாசம் (இயூமுலீ)
173. திருவையாறு (திமுக)
174. தஞ்சாவூர் (திமுக)
175. ஒரத்தநாடு (திமுக)
176. பட்டுக்கோட்டை (திமுக)
177. பேராவூரணி (திமுக)
178. கந்தவர்கோட்டை (தனி) (சிபிஎம்)
179. விராலிமலை (அதிமுக)
180. புதுக்கோட்டை (திமுக)
181. திருமயம் (திமுக)
182. ஆலங்குடி (திமுக)
183. அறந்தாங்கி (காங்கிரஸ்)
184. காரைக்குடி (காங்கிரஸ்)
185. திருப்பத்தூர் (திமுக)
186. சிவகங்கை (அதிமுக)
187. மானாமதுரை (தனி) (திமுக)

தெற்கு மண்டலம் (47)

188. மேலூர் (அதிமுக)
189. மதுரை கிழக்கு (திமுக)
190. சோழவந்தான் (தனி) (திமுக)
191. மதுரை வடக்கு (திமுக)
192. மதுரை தெற்கு (பாஜக)
193. மதுரை மத்திய (திமுக)
194. மதுரை மேற்கு (அதிமுக)
195. திருப்பரங்குன்றம் (அதிமுக)
196. திருமங்கலம் (அதிமுக)
197. உசிலம்பட்டி (திமுக)
198. ஆண்டிப்பட்டி (திமுக)
199. பெரியகுளம் (தனி) (விசிக)
200. போடிநாயக்கனூர் (திமுக)
201. கம்பம் (திமுக)
202. இராஜபாளையம் (தமமுக–ஜான்)
203. ஸ்ரீவில்லிப்புத்தூர் (சிபிஐ)
204. சாத்தூர் (பாஜக)
205. சிவகாசி (திமுக)
206. விருதுநகர் (திமுக)
207. அருப்புகோட்டை (திமுக)
208. திருச்சுழி (திமுக)
209. பரமக்குடி (தனி) (திமுக)
210. திருவாடனை ( முகுபுப – திமுக)
211. இராமநாதபுரம் (திமுக)
212. முதுகுளத்தூர் (திமுக)
213. விளாத்திகுளம் (திமுக)
214. தூத்துக்குடி (திமுக)
215. திருச்செந்தூர் (திமுக)
216. ஸ்ரீவைகுண்டம் (காங்கிரஸ்)
217. ஒட்டப்பிடாரம் (தனி) (திமுக)
218. கோவில்பட்டி (திமுக)
219. சங்கரன்கோவில் (திமுக)
220. வாசுதேவநல்லூர் (தனி) (திமுக)
221. கடையநல்லூர் (மதிமுக)
222. தென்காசி (திமுக)
223. ஆலங்குளம் (திமுக)
224. திருநெல்வேலி (திமுக)
225. அம்பாசமுத்திரம் (காங்)
226. பாளையங்கோட்டை (திமுக)
227. நாங்குநேரி (காங்கிரஸ்)
228. இராதாபுரம் (திமுக)
229. கன்னியாகுமரி (திமுக)
230. நாகர்கோவில் (திமுக)
231. குளச்சல் (காங்கிரஸ்)
232. பத்மநாபபுரம் (சிபிஎம்)
233. விளவங்கோடு (காங்கிரஸ்)
234. கிள்ளியூர் (காங்கிரஸ்)

2026 தேர்தல் கள நிலவரம்

சென்னை மண்டலம் 40 = திமுக கூட்டணி 40 + அதிமுக கூட்டணி 2
வடக்கு மண்டலம் 49 = திமுக கூட்டணி 28 + அதிமுக கூட்டணி 21
கொங்கு மண்டலம் 44 = திமுக கூட்டணி 28 + அதிமுக கூட்டணி 16
மத்திய மண்டலம் 52 = திமுக கூட்டணி 45 + அதிமுக கூட்டணி 7
தெற்கு மண்டலம் 47 = திமுக கூட்டணி 40 + அதிமுக கூட்டணி 7
மொத்தம் = 234 திமுக கூட்டணி = 182 அதிமுக கூட்டணி 52

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.