அங்குசம் பார்வையில் ‘டாக்ஸிக்’

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

தயாரிப்பு: கேவிஎன் புரொடக்சன்ஸ் வெங்கட் நாராயணா, டைரக்டர்: கீது மோகன்தாஸ், ஆர்டிஸ்ட்: யஷ், நயன் தாரா, கியாரா அத்வானி, ஹூமா குரோஷி, ருக்மிணி வசந்த், தாரா சுதாரியா, ஒளிப்பதிவு: ராஜீவ் சுக்லா, இசை: ரவி பஸ்ரூர், விஷால் மிஸ்ரா, தனிஷ்க் பாக்கி, எடிட்டிங்: உஜ்வல் குல்கர்னி, ஸ்டண்ட்: ஜே.ஜே.பெர்ரி, அன்பறிவ், கெச்சா கெம்பாக்டே, பிஆர்ஓ: யுவராஜ்

'டாக்ஸிக்' ஆர்டிஸ்ட் லிஸ்டல் இருக்கும் நயன் தாரா, ஹீரோ யஷ்ஷுக்கு அக்கா. கியாரா அத்வானி ஒரு ஜோடி, ருக்மிணி வசந்த் ஒரு ஜோடி. ஹூமா குரோஷியும் அப்புறம் நாம்பது அம்பது பேரு வில்லன்கள். இந்தியா சுதந்திரம் வாங்குன 1947. வெள்ளைக்காரன் போனாலும் அங்கே போர்ச்சுக்கீசியர்கள் தான் டாமினேட் பண்ணுகிறார்கள். ஒரு சர்க்கஸ் கம்பெனிய குண்டு வச்சு குளோஸ் பண்ணுகிறது ஒரு கும்பல்…அதுல கியாரா அத்வானி குளோஸ். குண்டு வச்சது யாருன்னு மட்டும் கேட்காதீங்க. இந்த ஃப்ளாஷ் பேக்ல தான் படத்தை ஓப்பன் பண்றாய்ங்க.

இந்த வார அங்குசம் வார இதழில்…

அதுக்கப்புறம் படத்துல எதிர்ல வர்ற அம்புடுப் பேரையும் யஷ் குண்டு வச்சு கொல்றாரு, மிஷின் கன்னால கண்டமேனிக்கு சுட்டுக் கொல்றாரு…. அரிவாள், கத்தியால் வெட்டிக் கொல்றாரு….கியாரா அத்வானிய காருக்குள் வச்சு கசக்கி பிழியுறாரு…..பெட்ரூம்ல போட்டு புரட்டி எடுக்குறாரு….. சுவத்தோரம் சாச்சு வச்சு…..”யோவ்…நிறுத்துய் யா…. கதைய சொல்லுய்யா” ன்னு டென்ஷனாகாதீக மக்களே…. படத்தின் டைரக்டர் கீது மோகன்தாஸுக்கும் நடிச்ச ஹீரோ யஷ் உட்பட அம்புட்டுப் பேருக்கும் கதை தெரியாதப்ப நமக்கு மட்டும் தெரியவா போகுது?

'டாக்ஸிக்' யஷ், நயன், கியாரா அத்வானி, ஹூமா குரோஷி, ருக்மிணி வசந்த்னு எல்லோரும் எல்லா சீனில் செமத்தியா சரக்கடிக்கிறார்கள், தம் அடிக்கிறார்கள்…. கூட்டம் கூட்டமாக சேர்ந்து வேறு குடிக்கிறார்கள், செத்து மடிகின்றார்கள். அதுலயும் இந்த யஷ் பய குடிக்கிற குடிக்கு குடல் வெந்து இடைவேளையுடன் செத்துப் போயிருக்கணும்.  ஆனால் க்ளைமாக்ஸ் வரை உயிருடன் இருந்து படம் பார்க்குறவனை சாவடிக்கிறான்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

எட்டு வருசத்துக்கு முன்னால ‘கே.ஜி.எஃப்’ ங்கிற ஒரு கேவலமான படம் தெரியாத்தனமா ஓடித் தொலைச்சிருச்சு. அதுலயிருந்து இந்த யஷ்ஷோட அக்கப்போருக்கு அளவே இல்லாம போச்சு. நான் எடுக்குறது தான் சினிமா, நடிக்கிறது தான் நடிப்புன்னு திமிர்ல படம் எடுத்து நம்மையெல்லாம் கேணப்பயலுகளா நினைக்கும் இவனையெல்லாம் அடிச்சு விரட்டணும்.

‘யோக்கியர்’ ஜோசப் விஜய்யால் தமிழ்நாடு அரசு டெல்லி பிரதிநிதியாக நியமிக்கப்பட்டிருக்கும் வெங்கட் நாராயணா தான் இந்த கேடுகெட்ட சினிமாவைத் தயாரித்திருப்பவர். பெருக்கெடுத்து ஓடும் கருப்புப் பணத்தை என்ன பண்றதுன்னு தெரியாம கொழுப்பெடுத்துப் போய் இந்த மாதிரி சாக்கடைப் படம் எடுத்து நம்மளை சாகடிக்கிறான். ‘டாக்ஸிக்’ னா ரத்தத்தில் கலந்த விஷம்னு அர்த்தம். யஷ், டைரக்டர் கீது மோகன்தாஸ் ரத்தத்திலும் விஷம் கலந்துவிட்டது. இது சினிமாவில் முழுவதும் கலந்துவிடும் அபாயத்தை உடனே தடுக்க வேண்டும். 3 மணி நேரம் 20 நிமிடம் ஓடும் படத்தில் 15 நிமிடம் தான் வசனம், அதையும் ஹஸ்கி வாய்ஸில் பேசி கடுப்பேற்றுகிறார்கள். புகை பிடித்தல் உயிருக்கு கேடு. இந்த ‘டாக்ஸிக்’ பார்த்தால் மன நலத்திற்கு கேடு.

அங்குசம் பார்வையில் ‘டாக்ஸிக்’ 2/100

—  ஆண்டவர்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.