அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்செந்தூர் : சம்ப்ரதாய நம்பிக்கையும் … சநாதன தண்டனையும் !

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

முருகனை கும்பிட மறுத்த அறநிலைய அமைச்சர். திருச்செந்தூரில் முகமூடியுடன் அறநிலைய அமைச்சர் சென்றார். அங்கு 4000 லஞ்சம் கொடுத்தார். லஞ்சம் வாங்கியது அர்ச்சகர் ஐயப்பன். அமைச்சருடன் சேர்த்து நான்கு பேர் சென்றுள்ளனர். தலா 1000 ரூபாய் வீதம் நால்வருக்கும் 4000 தந்தால் உடனடியாக சுவாமி தர்சனம் செய்யலாம் என்றார் அர்ச்சகர். சம்மதித்த அமைச்சர் 4000 தந்தார்.
முருகனை வணங்காத அமைச்சர் !
லஞ்சம் கொடுத்த அமைச்சர் முருகனை தர்சிக்கவில்லை. முருகனை வணங்காத அமைச்சர் அறநிலைய அமைச்சர். அதிகாரிகளுக்கு இறை நம்பிக்கை வேண்டும் என்கிற சுற்றறிக்கையும் அரசு உத்தரவும் சட்டதிருத்தமும் வந்தன. இவையெல்லாம் அமைச்சருக்குப் பொருந்தாதா ? தமிழ்கடவுளை வணங்காமல் அவமதித்து திரும்பிய அமைச்சர் ரமேஷ் மீது என்ன நடவடிக்கை ? திருச்செந்தூர் கோவிலுக்கு வருகிறவர்கள் எல்லாம் முருகனை வணங்கி வேண்டுதல் செய்கின்றனர்.

இவர்களது நம்பிக்கையை கேலி செய்யும் வகையில் அறநிலைய அமைச்சர் சந்நதிக்கு செல்லாமல் முருக வழிபாட்டை மறுத்துள்ளதாகத்தான் கருத வேண்டியுள்ளது. இவரது ஆழ்ந்த வைணவ சம்ப்ரதாய நம்பிக்கை சிவமுருக வழிபாட்டை ஏளனமாகக் கருதுகிறது.
ஆழ்ந்த வைணவ வழிபாட்டாளர்கள் சிவ மதக் கடவுள்களை வணங்க மாட்டார்கள். அவ்வகையில் அமைச்சர் ரமேஷும் தமிழ் கடவுள் முருகனை வணங்காமல் சென்றுள்ளார்.
இவருக்கு அளிக்கின்ற வழிபாட்டு உரிமை சலுகைகளை ஏன் இதர கோவில் நிர்வாகிக்கும் அறநிலைய ஊழியர்களுக்கும் அறநிலையதுறையினருக்கும் அளிக்கக் கூடாது. நாத்திகர்களுக்கும் கூட அறநிலையத்துறையில் பணிபுரிய அனுமதி தர வேண்டும். அமைச்சருக்கு ஒரு நீதியும், அலுவலருக்கு வேறொரு நீதியா?
ஒரே குற்றம் மூன்றுவித தண்டனை !
லஞ்சம் எனத் தெரிந்தே ஜி.பே மூலம் பணம் அமைச்சரின் உதவியாளரால் கொடுக்கப்பட்டது என ஒரு தகவல். எப்படிக் கொடுக்கப்பட்டது என்பதல்ல பிரச்சனை. லஞ்சம் கொடுத்தது அறநிலையத்துறை அமைச்சர் ரமேஷ் .(தென்கலைஐயங்கார் ). லஞ்சம் பெற்றவர் ஐயப்பன்( ஐயர்.) ஐயருக்கு உடந்தையாக இரு காவலர்கள் , இரு நாவிதர்கள். ஆக ஆறுபேர் இந்த குற்ற சம்பவத்தில் ஈடுபட்டுள்ளனர். லஞ்சம் தொடர்பானன குற்றத்தில் , லஞ்சம் கொடுப்பதும் குற்றம். லஞ்சம் பெறுவதும் குற்றம். இங்கு குற்ற செயல் நிறைவேறிவிட்டது.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

HARINI JEWELLERS TRICHY

ஜெயராமன்
ஜெயராமன்

சாமியைத் தர்சிக்க லஞ்சம் கொடுத்தது அமைச்சர். லஞ்சம் பெற்ற குழுவிற்கு வேறு வேறு அளவு தண்டனை. லஞ்சம் கொடுப்பதும் குற்றம் என்பதால், லஞ்சம் கொடுத்த அமைச்சருக்கு என்ன தண்டனை?
அமைச்சருக்கு விதிவிலக்கு உண்டா ? குற்றம் செய்தவர்களில் மூன்று வித தண்டனை. இதுதான் சநாதன அரசு. பிராமணன் கொலை செய்தால் சிரசின் மீது ஷேவிங். மற்ற சாதிக்காரன் கொலை செய்தால் சிரசே ஷேவிங். இப்படித்தான் தண்டனையில் வேறுபாடு காட்டியது சநாதனம். அதை நினைவுபடுத்துகிறது இன்றைய லஞ்சப் பிரச்சனைக்கான தண்டனை. ஐயருக்கு பூஜை செய்ய தடை. காவலருக்கு பணி நீக்கம் . மருத்துவருக்கு தற்காலிக நீக்கம்.
இது என்னங்க ஐயா அறம். வாங்கியது லஞ்சம் இதில் ஐயருக்கு பூஜை செய்ய மட்டும் தடை. இதே போல் காவலர்களுக்கும் காவல் பார்க்க தடையும் , நாவிதருக்கு முடி இறக்க தடையும் விதித்திருந்தால் சரியான நடவடிக்கையாகக் கருதலாம். இந்த தண்டனை லஞ்சம் வாங்கியவர்களுக்கானது. லஞ்சம் கொடுத்த அமைச்சரை என்ன தண்டனைக்குள் அடக்குவது ?

யாவரும் கேளீர் 2026 மே மாத இதழ்

—  ஜெயராமன், இணை ஆணையர் ஓய்வு.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.