அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

திருச்சி மத்திய சிறையா? பர்மா பஜாரா?

அங்குசம் வார இதழின் உறுதுணையாளர்கள்...

திருச்சி மத்திய சிறையில் சுமார் 500-க்கும் மேற்பட்ட விசாரணை மற்றும் தண்டனை கைதிகள் தங்க வைக்கப்பட்டிருக்கிறார்கள். இலங்கை அகதிகள் மற்றும் வெளிநாட்டு விசாரணை கைதிகளுக்கான சிறப்பு முகாமும் இதே வளாகத்தில்தான் அமைந்திருக்கிறது.

இந்நிலையில் சிறையில் அடிக்கடி கைதிகளிடம் கஞ்சா மற்றும் செல்போன் புழக்கம் இருக்கிறதா, என்பதை கண்காணிக்க அவ்வப்போது திடீரென்று அதிரடி சோதனைகள் நடத்துவது வழக்கம்.

இந்த வார JUNE 3 அங்குசம் இதழில்…

2026 June 11 - 17 Angusam Book

கமிஷனர் காமினி
கமிஷனர் காமினி

இந்நிலையில், மார்ச்-29 அன்று திருச்சி மாநகர போலீஸ் கமிஷனர் காமினி உத்தரவின் பேரில், மாநகர போலீஸ் துணை கமிஷனர் தலைமையில் 50-க்கும் மேற்பட்ட போலீசார்  திருச்சி மத்திய சிறையில் அதிரடி சோதனை நடத்தினர். இந்த சோதனையில் வெளிநாட்டு விசாரணை கைதிகள் தங்கி உள்ள அறையில் செல்போன் மற்றும் போதை பொருட்கள் சிக்கியது. இதனை போலீசார் கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவத்தை தொடர்ந்து திருச்சி மத்திய சிறையில் மார்ச்-30 அன்று விடியற்காலை முதல் தொடர்ந்து 5 மணி நேரம் போலீசார் அதிரடி சோதனை நடத்தினார்கள்.  சிறையில் உள்ள விசாரணை,  மற்றும் ஆயுள் தண்டனை கைதிகள் உள்ள அறைகள், கழிவறைகள் சுற்று சுவர்கள் பகுதி, வறண்ட பகுதிகளில் செல்போன், கஞ்சா உள்ளிட்ட புகையிலை, போதைப் பொருட்கள் இருக்கிறதா? என்று போலீசார் அதிரடி சோதனை நடத்தினர்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.