அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

‘பிளாஸ்டிக் இல்லா பகுதி’யாக அறிவிக்கப்பட்ட பெரிய கோவில் வளாகம்!

0

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் வளாகத்தை ‘பிளாஸ்டிக் இல்லா பகுதி’  (Plastic Free Zone) என மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது.

தஞ்சை மாவட்டத்தில் பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்கவும், ‘பிளாஸ்டிக் இல்லா மாவட்டம்’ என்ற நிலையை எட்டவும் மாவட்ட நிர்வாகம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

இந்த வார August 12 அங்குசம் இதழில்…

அந்த வகையில், உலகப் பிரசித்தி பெற்ற தஞ்சை பெரிய கோவில் வளாகம் ‘பிளாஸ்டிக் இல்லாத பகுதி’ என அறிவிக்கும் நிகழ்ச்சி இன்று நடைபெற்றது. இதில் மாவட்ட ஆட்சியர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் கலந்து கொண்டு, பெரிய கோவில் வளாகத்தை ‘பிளாஸ்டிக் இல்லா பகுதி’ என முறைப்படி அறிவித்தார்.


அதோடு, மாணவ-மாணவிகளுக்கு சாக்குகள் வழங்கி அதில் பெரிய கோவில் பகுதியில் காணப்படும் பிளாஸ்டிக் குப்பைகளை சேகரித்து பாதுகாப்பான இடத்தில் அப்புறப்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

மேலும், “பிளாஸ்டிக் பொருள்களைப் பயன்படுத்தக் கூடாது. தமிழ்நாடு அரசு அறிவித்துள்ள மீண்டும் மஞ்சப்பை துணிப் பைகளை மட்டுமே பயன்படுத்த வேண்டும். கடைகளுக்குச் சென்று பொருள்கள் வாங்கும்போது, துணியிலான பைகளை கொண்டு செல்ல வேண்டும்,” எனக் கூறி மாணவ, மாணவிகள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

அதன் பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர், “புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோவில் வளாகம் தற்போது பிளாஸ்டிக் இல்லா பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளதாகவும், தஞ்சை சரபோஜி மார்க்கெட்டில் மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் தொடங்கி வைக்கப்பட்டுள்ளது போல, தஞ்சை பெரிய கோவிலிலும் உரிய அனுமதி பெற்று மஞ்சப்பை வழங்கும் தானியங்கி இயந்திரம் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாகவும் கூறினார்.

பிளாஸ்டிக் பயன்படுத்தும் பெரிய கடைகளுக்கு முதல்  கட்டமாக ரூ.25,000 அபராதம் விதிக்கப்படும். அதேபோல, துணிக்கடை போன்றவற்றிற்கு ரூ. 10,000 மற்றும் சிறிய கடைகளுக்கு ரூ.1000 என முதல் கட்டமாக அபராதம் விதிக்கப்படும். மீண்டும் பிளாஸ்டிக் பயன்படுத்தினால் இரட்டிப்பு அபராதம் விதிக்கப்படும் என்றார் கலெக்டர்.

பிளாஸ்டிக் பயன்பாட்டைத் தடுக்க அரசு எடுத்துவரும் நடவடிக்கைகளுக்கு அனைவரும் ஒத்துழைக்க வேண்டும் என அவர் கேட்டுக் கொண்டார்.

இந்நிகழ்ச்சியில், தஞ்சை மாநகராட்சி ஆணையர் சரவணக்குமார், வட்டாட்சியர் சக்திவேல், மாநகர் நல அலுவலர் சுபாஷ் காந்தி, போக்குவரத்து காவல் ஆய்வாளர் ரவிச்சந்திரன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Leave A Reply

Your email address will not be published.