தாயின் நினைவில்…… மகனின் சமூகச் சேவை – மறக்கமுடியாத நிகழ்வு ! பினாமிகளின் பணம் அல்ல….

0

தமிழ்நாட்டு மக்களால் மக்கள் திலகம் எனப் போற்றப்பட்ட எம்.ஜி.இராமச்சந்திரன் அவர்கள் அடிமைப்பெண் என்ற திரைப்படத்தில் “தாயில்லாமல் நானில்லை, தானே எவரும் பிறந்ததில்லை, எனக்கொரு தாய் இருக்கின்றாள், என்றும் என்னைக் காத்திடுவாள்” என்னும் பாடல் காட்சியில் நடித்திருப்பார். உலகின் அதிஉன்னத வார்த்தை மட்டுமல்ல; உலகத்தின் அத்தனை உயிர்களும் நேசிக்கும் உன்னத உயிர் தாய்…. அம்மா என்பதுதான். அதனால்தான் மனிதர்கள் தாங்கள் பேசும் முதல்மொழியைத் தாய்மொழி என்று அழைத்து வருகின்றனர்.

குடும்பத்தினருடன் தாயின் நினைவுபடம்
குடும்பத்தினருடன் தாயின் நினைவுபடம்

 

திருச்சியிலும் தன்னை ஈன்றெடுத்த தாய் மரகதவள்ளி மறைந்த நிலையிலும், அவரின் நினைவுநாளில் தன் வருமானத்தின் ஒரு பகுதியை விளிம்பு நிலை மக்களுக்கும், கல்வி நிறுவனங்களுக்கும் கொடையாகத் தொகைகளை வழங்கி, பெற்றதாய்க்குப் பெருமை சேர்த்து வந்து கொண்டிருப்பவர்தான் எக்ஸல் குழுமத்தின் தலைவர் எம்.முருகானந்தம். இந்த 2023ஆம் ஆண்டு எம்.முருகானந்தம் எக்ஸல் குழுமத்தின் தலைவர் திருச்சி பழைய சங்கம் ஓட்டல் (தற்போது Courtyard by Marriott) அரங்கில் தாய் மரகதவள்ளி அவர்களின் நினைவு நாளில் (07.03.2023) எக்ஸல் விருது வழங்கும் விழா மற்றும் சமூகத்தின் விளிம்பு நிலை மக்களுக்கு உதவும் விழா என்ற நிகழ்வுகள் நடைபெற்றன. விழா அரங்கில் சுமார் 3000 பேர் கூடியிருந்தது நிகழ்வுக்குப் பெருமையும் சிறப்பும் சேர்த்தது.

விழாவில் இண்டர்நேஷனல் ரோட்டரி சங்கத்தின் முன்னாள், இன்னாள் ஆளுநர்கள், தலைவர்கள், எக்ஸல் குழுமத்தின் குடும்ப உறுப்பினர்கள், பொதுமக்கள், ஊடகவியலாளர்கள் என அரங்கம் நிரம்பி வழிந்தது. மறைந்த மரகதவள்ளி அம்மாள் அவர்களின் திருவுருபடத்தை, முருகானந்ததின் தந்தை மருதையன் திறந்து வைத்து மலர்அஞ்சலி செலுத்தினார். தொடர்ந்து முருகானந்தம், அவர் துணைவியார் சுமதி, பிள்ளைகள் மகள் பிரியதர்ஷினி, மகன் பிரவீன் கார்த்திக் இருவரும் மலர் அஞ்சலி செலுத்தினர்.

எக்ஸல் விருது வழங்கும் விழாவிற்குச் சிறப்பு விருந்தினர்களாக VNC குழுமம் சார்ந்த மேலாண்மை பங்குதாரர் .சி.பாஸ்கரன், பாப்புலர் அறக்கட்டளையின் மேலாண்மை இயக்குநர் ஏ.எஸ்.வெங்கடேஷ், நேச்சுரல் சலூன் இணை நிறுவனர் மற்றும் முதன்மை செயல் அலுவலர் சி.கே.குமாரவேல் கலந்துகொண்டனர்.

பினாமிகளின் பணம் அல்ல….

விழாவில் பேசிய எக்ஸல் குழுமத்தின் தலைவர் திரு. எம்.முருகானந்தம்,“தாய் நினைவுகளுடன் அவர் காட்டிய வழியில் நான் நடந்துகொண்டு வாழ்ந்துகொண்டிருக்கிறேன் என்பதன் அடையாளம்தான் இந்த விழா. ஒவ்வொரு ஆண்டும் என் தாயின் நினைவுநாளில் பலருக்கும் நான் பல உதவிகளைச் செய்துவருகிறேன். இந்த ஆண்டு, இந்த அரங்கில் பெரிய அளவில் இந்நிகழ்ச்சியை நடத்துவதற்குக் காரணம், உலகில் தீர்க்கப்பட முடியாத நோயாக உள்ள புற்றுநோயிலிருந்து மக்களைக் காப்பாற்றி அவர்கள் நல்வாழ்வு வாழ புற்றுநோய் சிகிச்சைக்காக 60 கோடி மதிப்பில் ஒரு மருத்துவமனையைத் தொடங்க இருக்கிறேன். அதில் 75 படுக்கைகள் வசதிகள் அமைக்கப்படும். அதற்கான பூமிபூஜை நேற்று சூரியூரில் நடைபெற்றது.  இந்தப் பணம் பினாமிகளின் பணம் அல்ல. என் சொந்தப் பணம். உலகின் பல்வேறு நாடுகளில் உள்ள மருத்துவமனைகளோடும், மருத்துவர்களோடும் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்து, மருத்துவமனையை இன்னும் 2 ஆண்டுகளில் கட்டிமுடித்து, மக்கள் பயன்பாட்டுக்குக் கொண்டுவரத் திட்டமிட்டிருக்கிறேன்” என்று விழாவின் நோக்கத்தை வெளிப்படுத்தினார்.

எக்ஸல் குழுமத்தின் தலைவர் எம்.முருகானந்தம்
எக்ஸல் குழுமத்தின் தலைவர் எம்.முருகானந்தம்

 

தொடர்ந்து, மூளை வளர்ச்சி குன்றிய குழந்தைகளைக் காத்துத் திருச்சியில் செயல்பட்டுவரும் The Spastics Societyயின் இயக்குநர் திரு.சி.சந்தானகுமார் அவர்களிடம் அமைப்பின் வளர்ச்சிக்கு ரூபாய் இலட்சத்திற்கான காசோலையை எக்ஸல் குழுமத்தின் தலைவர் எம்.முருகானந்தம் வழங்கினார். இந் நிகழ்வுக்கு முன்னாள் மாவட்ட ரோட்டரி ஆளுநர்கள் ஏ.புருஷோத்தமன் மற்றும் ஏ.எல்.சொக்கலிங்கம் முன்னிலை வகித்தனர்.

அடுத்துப் பெண்களின் உழைக்கும் ஆளுமைத் திறனை வளர்க்கும் விதத்தில் நிகழ்வில் 10 பெண்களுக்குத் தையல் இயந்திரங்கள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வுக்கு மாவட்ட முன்னாள் ரோட்டரி ஆளுநர் டாக்டர் மாணிக்கம் இராஜசேகரன், பெல் சிட்டி ரோட்டரி தலைவர் ஜே.அருண்பிரகாஷ், பெல் சிட்டி ரோட்டரி செயலர் ஆர்.மதன்குமார் பெல் சிட்டி ரோட்டரியின் மேனாள் தலைவர் விஆர்.கல்யாணகுமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

 

விழாவில் இரு புத்தகங்களின் வெளியீடும் நடைபெற்றது. கவிஞர் வி.எஸ்.பாஸ்கரன் எழுதிய கவிதை நூல் அங்குசம் வெளியிடப்பட்டது. இந் நூலை மாவட்ட மேனாள் ரோட்டரி ஆளுநர் பி.தாமோதரன் வெளியிட, மாவட்ட மேனாள் ரோட்டரி ஆளுநர் ஜி.கோபால் முதல்படியைப் பெற்றுக்கொண்டார். தொடர்ந்து, மதுரையைச் சார்ந்த சரளா கண்ணன் உருவாக்கிய மகரந்தம் என்னும் கவிதை நூல் வெளியிடப்பட்டது. இந் நூலின் முதல் படியை மாவட்ட மேனாள் ரோட்டரி ஆளுநர் எஸ்.இராஜேந்திரன் வெளியிட, மாவட்ட மேனாள் ரோட்டரி ஆளுநர் எஸ்.கோபால் பெற்றுக்கொண்டார். இந் நிகழ்வுக்கு மாவட்ட முன்னாள் ரோட்டரி ஆளுநர் ஆர்விஎன் கண்ணன் முன்னிலை வகித்தார்.

எக்ஸல் குழுமத்தின் சார்பில் விளையாட்டு மேம்பாட்டுக்கான அறக்கட்டளை நிறுவுவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் திருச்சி தேசியக் கல்லூரியோடு ஏற்படுத்திக் கொள்ளப்பட்டது. அந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் தேசியக் கல்லூரியின் செயலாளர் கே.இரகுநாதன் கல்லூரியின் துணை முதல்வர் முனைவர் டி.பிரசன்னா பாலாஜி மற்றும் எக்ஸல் குழுமத்தின் தலைவர்  எம்.முருகானந்தம் ஆகியோர் கையெழுத்திட்டனர்.

இந்த நிகழ்வில் தேசியக் கல்லூரியின் துணைமுதல்வர் பேசும்போது,“விளையாட்டுத் துறையில் மாற்றுத்திறனாளி மாணவர்கள் புறக்கணிக்கப்படும் அவலம் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றது. இந் நிலையை மாற்ற விளையாட்டு துறையில் மாற்றுத்திறனாளி மாணவர்களையும் இணைத்தது தேசியக் கல்லூரி மட்டும்தான். தொடக்கத்தில் இரு மாணவர்கள் மட்டுமே சேர்ந்தனர். தற்போது 18 மாணவர்கள் விளையாட்டுப் பிரிவில் இணைந்துள்ளனர். எக்ஸல் நிறுவனத்தின் விளையாட்டு மேம்பாட்டுக்கான இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் மூலம் விளையாட்டுத் துறையில் வருங்காலத்தில் திருச்சி மாணவர்கள் உறுதியாக இடம்பெற்றுச் சாதனை புரிவார்கள்” என்று குறிப்பிட்டார். புரிந்துணர்வு ஒப்பந்தத்தினை மாவட்ட மேனாள் ரோட்டரி ஆளுநர் சாம் பாபு வெளியிடத் ஆர்எஸ்கே இரகுராம் பெற்றுக்கொண்டார்.

 

சமூக மேம்பாட்டிற்கான தொடர்ந்து பணியாற்றி வரும் பல்வேறு துறை சார்ந்தவர்களுக்குப் பவுல் ஹரிஸ் பெயரில் மதிப்பு மிகு விருதுகள் வழங்கப்பட்டன. திருச்சி கி.ஆ.பெ.விசுவநாதன் மருத்துவக் கல்லூரி மேனாள் முதல்வர் டாக்டர் ஆர்.யோகநாதன், பாரதிதாசன் பல்கலைக்கழகத்தின் மேனாள் பதிவாளர் முனைவர் இ.இராம்கணேஷ், திருச்சி ஸ்பேட்டிக் சொசைட்டி இயக்குநர் சி.சாந்தகுமார், இந்திரா கிளினிக் டாக்டர் யசோதா கண்ணன், திருச்சி எஸ்ஆர்எம் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் எஸ்.ரேவதி ஆகியோர் இந்த விருதினைப் பெற்றுக்கொண்டனர். இந்நிகழ்வுக்கு மாவட்ட மேனாள் ரோட்டரி ஆளுநர்கள் ஐ.ஜெரால்டு மற்றும் ஜெ.கார்த்திக் ஆகியோர் முன்னிலை ஏற்றிருந்தனர்.

சமூகப் பணியில் முன்னுதாரணமாக விளங்கி வருபவர்களுக்கும் பவுல் ஹரிஸ் விருதுகள் வழங்கப்பட்டன. திருச்சி உறையூரில் 2ரூபாய்க்குத் தோசை வழங்கி ஏழைமக்களின் பசிப்பிணி தீர்க்கும் சின்னத்தம்பி மற்றும் மனைவி வள்ளியம்மாளுக்கும், பிணம் எரிக்கும் தொழிலை அச்சமின்றிப் பல ஆண்டுகாலம் செய்துவரும் பொன்மலைப்பட்டியைச் சார்ந்த  ஆரோக்கியமேரி அவர்களுக்கும், மாலை நேரத்தில் மாதம் ஒரு ரூபாய் பெற்றுக்கொண்டு மாணவர்களுக்கு டியூசன் வகுப்பு எடுத்து மாணவர் நலனில் அக்கறையோடு செயல்பட்டு வரும் திருச்சி ஆசிரியர் திருமதி கோமதி அவர்களுக்கும், பளுதூக்கும் போட்டியில் பங்கெடுத்துச் சாதனைகள் புரிந்த பெல் சிட்டியைச் சார்ந்த பி.சி.ரைமன் அவர்களுக்கும், திருச்சி தேசியத் தொழில்நுட்பக் கழகத்தின் கட்டிடக் கலைத் துறை சார்ந்த ஓய்வு பெற்ற இணைப்பேராசிரியர் மாணிக்கவாசகம் பொன்னுசாமி அவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வுக்கு மாவட்ட ரோட்டரி ஆளுநர்கள் திருமதி ஆனந்தஜோதி மற்றும் ஆர்.இராஜா கோவிந்தசாமி ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

விழாவில், எக்ஸல் ரோட்டரி திருச்சி புற்றுநோய் மருத்துவமனையின் மாதிரி வரைபடத்தினை விஎன்சி குழுமத்தின் சி.பாஸ்கரன் வெளியிட்டார். புற்றுநோய் மருத்துவமனையின் பூமிபூஜை நிகழ்வின் வீடியோவைப் பாப்புலர் பவுண்டேஷன் மேலாண்மை இயக்குநர் ஏ.எஸ். வெங்கடேஷ் வெளியிட்டார். மேடையில் அமைக்கப்பட்டிருந்த எல்இடி அகன்ற திரையில் ஒளிபரப்பப்பட்டது. நேச்சுரல் சலூன் முதன்மை செயல் அலுவலர் சி.கே.குமாரவேல் புற்றுநோய் மருத்துவமனை குறித்த விளக்கக் கையேட்டை வெளியிட, மாவட்ட ரோட்டரி ஆளுநர் (2022-23) ஐ.ஜெரால்டு பெற்றுக்கொண்டார். இந் நிகழ்வுக்கு ஒருங்கிணைப்பாளர் முருகானந்தம் முன்னிலை வகித்தார். எக்ஸல் புற்றுநோய் மருத்துவமனைக்கான பணிக்குழுவில், மாவட்ட ரோட்டரி ஆளுநர்கள் ஆர்.ஆனந்தஜோதி, ஆர்.இராஜா கோவிந்தசாமி, டாக்டர் ஏகநாதன், ஒய்.குமணன், ஆர்எஸ்கே. இராகுராம், பிஎன்ஆர். சுரேஷ், பிபி.அப்ரோஸ், ஜி.பிரிசியல், எம்.பிரியதர்ஷிணி, பொறியாளர் சி.கருணாகரன் ஆகியோர் இடம்பெற்றிருப்பதாக விழாவில் அறிவிக்கப்பட்டது.

எக்ஸல் குழுமத்தின் தலைவர் முருகானந்தம் – சுமதி இவர்களின் திருமண இணையேற்பின் 25 ஆண்டுகாலம் நிறைவையொட்டி, மணவாழ்வின் வெள்ளிவிழா நிகழ்வு நடைபெற்றது. இவ்விழாவில், ரோட்டரி சங்கம் சார்ந்த திரு.ஆர்.வஜ்ரவேல், பிஎன்ஆர். சுரேஷ், எஸ்.ஆர். செந்தில்குமார், திரு.கான் அப்துல் கபார்கான் ஆகியோர் வெள்ளிவிழா காணும் நாயகன் நாயகியை வாழ்த்தி உரையாற்றினர்.

தொடர்ந்து, எக்ஸல் குழுமம் சார்பில் பல்வேறு துறைகளில் சாதனைகள் புரிந்தவர்களுக்கு வாழ்நாள் சாதனை விருதுகள் வழங்கப்பட்டன. திருச்சி பெல் சிட்டி ஐ.சாமுவேல் கிறித்துதாஸ், மதுரை பி.வி. பார்த்தசாரதி, புதுக்கோட்டை கவிஞர் தங்கம் மூர்த்தி, புதுக்கோட்டை ஓய்வு பெற்ற மருத்துவத் துறை இயக்குநர் டாக்டர் டி.சாமிநாதன், புதுக்கோட்டை பிஎஸ்கே கல்வி நிறுவனங்களின் தலைவர் திரு.பி.கருப்பையா ஆகியோர் வாழ்நாள் சாதனையாளர்கள் விருதைப் பெற்றுக்கொண்டனர்.

இந்த ஆண்டு தொழில்துறையில் சாதனைகள் புரிந்தவர்களுக்கு எக்ஸல் விருதுகள் வழங்கப்பட்டன. வைத்தீஸ்வரன் மருத்துவமனை தலைவர் டாக்டர் எஸ்.இராமதாஸ், கிஆபெ.புற்றுநோய் மையத்தின் இயக்குநர் டாக்டர் கேஎன்.சீனிவாசன், திருச்சி ஸ்ரீ ஊடகத் துறை சார்ந்த மேலாண்மை இயக்குநர் எஸ்.ஆறுமுகம், திருச்சி தேசியக் கல்லூரியின் துணைமுதல்வர் முனைவர் டி.பிரசன்ன பாலாஜி, திருச்சி ஜமால் முகமது கல்லூரி ஆய்வு ஆலோசகர் முனைவர் டி.குணசீலன் ஆகியோருக்கு இவ் விருதுகள் வழங்கப்பட்டன. இந் நிகழ்வுக்கு மாவட்ட மேனாள் ரோட்டரி ஆளுநர்கள் பி.கோபாலகிருஷ்ணன் மற்றும் வி.குணசேகரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

ரோட்டரி சங்கம் சார்ந்தவர்களுக்கான சமூகப் பணிகளில் முன்மாதிரியாக விளங்குபவர்களுக்கும் விருதுகள் வழங்கப்பட்டன. இவ் விருதினைப் புதுக்கோட்டையைச் சார்ந்த ஏஎல்.சொக்கலிங்கம், மதுரை லால்ஜிவோரா, திருச்சி எம்.எஸ்.இராமமூர்த்தி, திண்டுக்கல் பிஎன்ஆர்.சுரேஷ், ஆர்.வஜ்ரவேல், எம்.அபுதாகிர் ஆகியோருக்கு வழங்கப்பட்டது. இந் நிகழ்வுக்கு மாவட்ட மேனாள் ஆளுநர்கள் ஒய்.குமணன் மற்றும் ஆர்விஎன் கண்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

தொடர்ந்து, எக்ஸல் குழுமத்தின் சார்பில் சமூகப் பணிகளில் ஈடுபட்டு வருவோருக்கும் விருதுகள் வழங்கப்பட்டன.  ஆர்.சேவியர், கரூர் என்எஸ்என். ஜெயபாலன், திருச்சி ஜெ.சங்கரன், புதுக்கோட்டை ஜெய்பார்த்திபன், திருச்சி பி.இரமேஷ் ஆகியோர் விருதுகளைப் பெற்றுக்கொண்டனர். இவ் விழாவிற்கு மாவட்ட முன்னாள் ரோட்டரி ஆளுநர்கள் திரு.இரத்தினவேல் தங்கராஜ் போஸ் மற்றும் இராஜதுரை ஜி.மைக்கேல் ஆகியோர் முன்னிலை ஏற்றிருந்தனர்.

எக்ஸல் ஐகான் விருதுகள், மதுரை நிக்கோலஸ் பிரான்ஸிஸ், மதுரை இராம்கோபால், திருச்சி NR IAS நிறுவனத்தின் ஆர்.விஜயாலன், திண்டுக்கல் பிஏபி.நாதன், ஓவியக்கலை ஆசிரியர் மானுவேல் ஒய்.பான்ஜிராஜ் ஆகியோருக்கு வழங்கப்பட்டன. இந் நிகழ்ச்சிக்கு மாவட்ட மேனாள் ஆளுநர்கள் டாக்டர் ஏ.ஜமீர்பாஷா மற்றும் ஆர்.ஜெயக்கண் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

மாலை 6.00 மணிக்குத் தொடங்கிய எக்ஸல் குழுமத்தின் மரகதவள்ளி அம்மாள் நினைவு நாளும் எக்ஸல் குழுமத்தின் விருது வழங்கும் வண்ணமயமான நிகழ்வுகள் இரவு 9.00 மணிக்கு நிறைவுபெற்றது. விழாவில் நடன நிகழ்வுகளும் நடைபெற்றன. விழாவுக்கு வருகை தந்திருந்த அனைவருக்கும் இரவு விருந்து உபசரிப்பும் நடைபெற்றது.

தாயின் நினைவுகளை மனதிற்குள் அசைபோட்டுக் கொண்டு இல்லாமல், சமூகத்தின் வளர்ச்சிக்கும் நலத்திற்கும் அர்ப்பணிப்போடு உழைத்துக்கொண்டிருக்கும் சான்றோர் பெருமக்களையும், எளிய மக்களையும் தேடிக் கண்டுணர்ந்து, விருதுகள் வழங்கிய இந் நிகழ்வு திருச்சி வரலாற்றில் ஒரு மைல்கல் என்பதே பொருத்தமுடையதாகும். எக்ஸல் குழுமத்தின் தலைவர் எம்.முருகானந்தம் இந்தச் சமூகப்பணிகளைத் தொடர்ந்து முன்னெடுத்து, “மாற்றம் நம்மிடமிருந்து தொடங்கட்டும்…. மாறு…. மாற்று….” என்ற முழக்கத்தை முன்வைத்த எம்.முருகானந்தத்தின் பெயர் வரலாற்றின் பக்கங்களில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட்டிருக்கும் என்பது வெறும் புகழ்ச்சியில்லை. உண்மையே.

இக் கட்டுரையின் தொடக்கத்தில் குறிப்பிடப்பட்ட, மக்கள்திலகம் எம்.ஜி.ஆர். நடித்த அடிமைப்பெண் பாடல் காட்சியில் ஒலித்த “தாயில்லாமல் நானில்லை……” என்ற பாடல் விழாவுக்கு வந்திருந்த அனைவர் மனத்திலும் மனத்திரையிலும் தொடர்ந்து ஒலித்துக்கொண்டே இருக்கும்.

– ஆதவன்

படங்கள் – சந்திரமோகன் 

Leave A Reply

Your email address will not be published.