அரசியல் என்பது ரெண்டரை மணி நேர சினிமா இல்லை!
TVK க்கு ஆலோசனை தர்றவங்க இந்த முறை தோத்துட்டாங்க/தப்பு பண்ணிட்டாங்க…
உதயநிதியை கைது பண்ணது நிச்சயம் TVK க்கு பின்னடைவு…
கைது செய்ய வேண்டியவங்க list TVK கிட்ட நிறையவே இருக்கு….
சேகர்பாபு.. எவ வேலு… செந்தில் பாலாஜி.. துரை முருகன்.. செல்வப்பெருந்தகை.. அருண் IPS.. விசாகன் IAS போன்றோரை கைது செய்தல்…
ஜெகதீஸ்வரி… சரத் போன்றோரை அமைச்சரவையை விட்டு நீக்குதல் என Score செய்ய நிறைய விஷயங்கள் tvk கையில இருக்கு….
அரசியல்ல பொறுமை தான் முக்கியம்.. சினிமா பாணியில எல்லாம் அவசரம் அவசரமா பண்ணிட கூடாது. அரசியல் என்பது ரெண்டரை மணி நேரமா சினிமா இல்ல.
இந்த 3 மாசத்துல tvk க்கு எதிரா எதிர்க்கட்சிகள் பேசிய எந்த வார்த்தையும் மக்கள் கிட்ட எந்த மாற்றத்தையும் ஏற்படுத்தல என்பதே tvk க்கு சாதகமான சூழல். அதை tvk உணர்ந்து இருக்கும்னு தெரியுது.
அதுக்கு காரணம்… Tvk க்கு எல்லா மக்களும் ஆதரவு…. எதிர்க்கட்சிகளுக்கு மக்கள் எதிர்ப்பு இருக்குன்னு அர்த்தம் கிடையாது… தமிழக மக்களின் பண்பட்ட அரசியல் நிலைப்பாடே காரணம்….
கரூர் சம்பவம், திரிஷா விவகாரம் எல்லாம் விஜய்க்கு எந்த வித டேமேஜ் உருவாக்கல…
இங்க அவனவன் ஒழுக்கம் என்னன்னு இங்க எல்லாருக்குமே தெரியும்.. ஒண்ணுமே இல்லாத நாமளே இப்படி இருக்கோமே.. நம்ம வீட்டு ஆம்பளைங்களே இப்படி இருக்காங்களே… விஜய் மாதிரி ஒரு பெரிய நடிகன்.. அழகான நடிகன் இது கூடவா இருக்காது போங்கடா ன்னு left hand ல deal பண்ணாங்க தமிழக மக்கள். போதாக்குறைக்கு திமுக, அதிமுக முன்னாள் முதல்வர்களின் தனிப்பட்ட வாழ்க்கையை பார்த்தவர்கள் தான் தமிழக மக்கள்.
கரூர் கூட அதே தான்… அதில் விஜய் உடைய தனிப்பட்ட.. நேரடியான தவறு எதுவும் இருப்பதாய் தமிழக மக்கள் நினைக்கல. எதிர்க்கட்சியினர் தான் அதில் குளிர் காய நினைச்சாங்க. ஆனா அவங்களுக்கு வெற்றி கிடைக்கல.
இதெல்லாம் விஜய்(TVK) மீதான பாசம் அல்ல. தமிழக மக்களின் பண்பட்ட அரசியல் நிலைப்பாடு….
திமுக மீது மக்களுக்கு ஏதேனும் அதிருப்தி, கோபம் இருக்குன்னா… அதுக்கு காரணம் பல முன்னாள் அமைச்சர்களும்… அரசு அதிகாரிகளும் தான்.. அவர்கள் செயலில் தொடர்பு இருக்கோ இல்லையோ.. ஸ்டாலின், உதயநிதி மீதெல்லாம் மக்களுக்கு கோபமோ, அதிருப்தியோ இல்லை.
இன்னைக்கும் ஸ்டாலினை பார்க்கும்போது TVK க்கு ஓட்டு போட்ட சிலரே வருத்தப்படுவது பார்க்க முடியுது..
கலைஞர் மாதிரி ஒருவருக்கு பிறந்து… தன் இளவயது முதல் இவ்வளவு தன்மையுடன் இருக்கும் ஸ்டாலின் குணமும்… அதே தன்மையுடன் இருக்கும் உதயநிதி குணமும் நிச்சயம் வேறு ஒருவருக்கு இருக்க வாய்ப்பே இல்லை. அதை மக்கள் உணர்ந்தே இருக்கின்றனர்.
தமிழக மக்கள் பொறுத்தவரை எதார்த்தவாதிகள்… அவர்கள் எல்லாவற்றையும் தன்னுடன் ஒப்பிட்டு பார்ப்பவர்கள். நான் அங்க இருந்தா என்ன பண்ணுவேன். இவன் என்ன பண்ணியிருக்கான். இவன் பண்ணது சரியா… இவன் பண்ணது தண்டனை வேணுமா… சரி இது சாதாரண விஷயம் தானே.. இதெல்லாம் ஒரு விஷயமா… என சரியாக எடைபோட்டு பார்ப்பவர்கள்…

நேற்று உதய் பேசியது கூட கிண்டல் தொனியே தவிர… திட்டமிட்டோ… கோபமாகவோ எதுவும் பேசிவிடவில்லை. இந்த பேச்சு மக்களிடத்தில் எந்த அதிர்வையும் ஏற்படுத்தாது. ஏற்கனவே கூறியது போல் மக்கள் இதை தங்களோடு பொருத்திப்பார்பார்கள்… நாம இதை பேச மாட்டோமா.. இதெல்லாம் ஒரு ஆபாசா பேச்சா என….
ஒருவேளை நீதிமான்கள் பார்வையில் அது தவறானதாகவே இருக்கட்டும்…
அதற்கு போராட்டம் என TVK அறிவித்தது TVK க்கு பலம் சேர்க்கும் யோசனை தான். ஆனால் கைது என்பது புத்திக்கெட்ட யோசனை….
மொத்ததில் இந்த கைது நடவடிக்கை ஒரு அவசரகுடுக்கை… இதில் TVK க்கு தான் பின்னடைவு. 3 மாதத்தில் DMK க்கு சார்பா நடந்த ஒரே விஷயம்….
நான் தனிப்பட்ட முறையில் இந்த கைதை கண்டிக்கிறேன்.
— தோழர் ஜே.கே







Comments are closed, but trackbacks and pingbacks are open.