அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

இருமேனி சங்கின் பெயரா? ஊரின் பெயரா?

இருமேனியை தேடினேன் … இயற்பெயர் அறிந்தேன் !   தொடர் – 12   

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

கடந்த தொடரில், இருமேனி கடலில் நடைபெற்ற சங்குத் தொழில் குறித்து பார்த்தோம். இந்த தொடரில், சங்குகளில் ஒருவகையான இருமேனி என்ற பெயர் உருவான பின்னணி குறித்து பார்ப்போம்.

4.9 சங்குகளின் வகைகளும், பெயர்களும், விலைகளும்

இந்த வார JULY 1 அங்குசம் இதழில்…

சங்குகள் பல வகைகளாகக் காணப்பட்டாலும் அறிவியல் அடிப்படையில் அவை அனைத்தும் ஓர் இனத்தைச் சார்ந்தவை (Turbrella pyrum) ஆகும். தற்போது இந்த இனத்தை ஐந்து சிறு இனமாகப் பிரித்துள்ளனர். அவை ஆங்கிலத்தில் var.acuta, var.obtusa, var.globosa, var.comoriensis மற்றும் var.fuses என்று அழைக்கிறார்கள். இந்த ஐந்து வகைகளில், பல சிறுவகைகளும் உண்டு. அது வாழும் இடத்திற்கும், கடல் தண்ணீர், கடல் மண், அலைகளின் தன்மை இன்னும் சுற்றுப்புறச் சூழ்நிலை மற்றும் தட்பவெப்பங்களின் நிலையைப் பொறுத்தது.

இருந்தபோதிலும் இந்த ஐந்து வகையான சங்குகள் எடுக்கும் இடங்களை, குணங்களை மற்றும் விலைகளைப் பொறுத்து அதற்கு வியாபாரப் பெயரும் உள்ளது. உதாரணமாக ஐந்து முக்கியமான சங்குகளை ஜாதி, பட்டி, பத்தலா, கோமோரி, அந்தமானி என்று அழைக்கின்றனர்.மேலும், இந்த ஐந்து வகைகளிலும், உள்வகைகளும் உண்டு. தரத்தையும் விலையையும் பொறுத்து அவை வகைப்படுத்தப்படுகின்றன. அவைகள் தூத்துக்குடி, இமேஸ்சாரி, ஜமாயிபட்டி, நோயகாட்பட்டி, கார்பக்கி, டுரானி (Durani) மற்றும் சுரிதி போன்ற வகைகள் முக்கியமானவை. இவைகளில் மன்னார் வளைகுடாவிலுள்ள இராமேஸ்வரம், கீழக்கரை, தூத்துக்குடி மற்றும் கட்ச் வளைகுடா சங்குகளுக்குத்தான் அதிகத் தேவையுள்ளது. அவற்றின் விலையும் அதிகம்.

திருச்சி உறையூரில் புதிய உதயம்...

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

4.10 இருமேனி பெயர் கொண்ட சங்கு எது

தற்போது ஓரளவு தெரிந்துவிட்டது எமது ஊரின் பெயர் இருமேனி எப்படி உருவாகியது என்று. அவை ஒரு வகையான சங்குவின் பெயர்தான். அவை எமது ஊரின் கடலோரத்தில் மட்டும் அதிகமாகக் கிடைக்கிறது. அந்தச் சங்கு இந்த ஆறு வகை சங்குகளில் எவை? ‘இருமேனி’ சங்கு எது?இதுதான் இந்த ஆராய்ச்சியின் மையம், இக்கட்டுரையின் குறிக்கோள், ஆராய்ச்சியின் இறுதியில் இந்தியக் கடலோரப் பகுதிகளில் கிடைக்கும் ஆறு வகையான சங்குகளில், மூன்று வகையான சங்குகள் இருமேனி கிராமத்துப் பெயருடன் தொடர்பு கொண்டிருக்கலாம் என்று கருதப்பட்டது. அவை கீழே குறிப்பிடப்பட்டுள்ளன.

பல ஆண்டுகள் ஆராய்ச்சியின் படி Turbinella pyrum var.obtusa அதாவது பொதுவான ‘பட்டி’ வகையான சங்குகள் தான் ஆதம் பாலத்திற்கு வடக்கு பகுதியான பா ஜலசந்தியில் கிடைக்கின்றன. இருமேனியும் பாக்ஜலசந்தியில் தான் உள்ளது. ஆனால் சில ஆராய்ச்சி கட்டுரைகளில் ‘பட்டி’ வகைகளில் ஒரு வகை இருமேனி மற்றும் தேவி பட்டினம் கடலில் கிடைக்கின்றன. இருமேனி கடலில் அதிகமாகக் கிடைக்கும் இந்தப் புதுப் பட்டி வகை இருமேனி சங்காக இருக்கலாம் என்பது சிலரின் கருத்து. ஆனால். இந்தப் புது ‘பட்டி’ வகை சங்கு இருமேனியில் மட்டும் அல்ல, வெகுதூரத்திலுள்ள தேவிபட்டினத்திலும் அதிகமாகக் கிடைக்கின்றன. ஆகவே இந்தச் சங்கு இருமேனியில் மட்டும் கிடைக்கவில்லை. மேலும் இந்தச் சங்கு எடுப்பது. விற்பது பல நூற்றாண்டுகளுக்கு முன்பே நடந்து கொண்டிருக்கிறது. அப்போது இருமேனி என்ற ஊரே இருந்திருக்க வாய்ப்பில்லை அதனால் ‘இருமேனி’ என்ற பெயர் உருவாவதற்கு இந்தச் சங்கு ஒரு காரணமாக இருக்க வாய்ப்பில்லை.

தொடரும்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.