மதுரையில் தலைமைச் செயலகம் ? பரந்தூருக்கு பதில் திருச்சி ?

தங்கம் முழுமையான மதிப்பை பெறும் திருச்சி Livya Shree Gold Bankers

யார் ஆட்சிக்கு வந்தாலும் சென்னையை தவிர மற்ற நகரங்கள் எதுவுமே அவர்கள் கண்ணுக்கு தெரியாது. இப்ப பரந்தூர் புதிய விமான நிலையம் ரத்தாகி நிர்வாகம் இன்னொரு இடத்தை தேடுகிறார்கள். உடனே பரந்தூர் விவசாய நிலமாக மாறிவிடுமா என கேட்காதீர்கள். அது அவ்ளோதான். முதலை வாய்க்குள்ள போன கதை தான். வேற மாதிரி சுத்திவிடுவாங்களெ தவிர நிலம் யார் கைக்கும் வராது. அது ஒரு பக்கம் இருக்கட்டும்.

ஏன் திருச்சி விமான நிலையத்தை மேம்படுத்தி அல்லது புதிய முனையம் உருவாக்கி பயன்பாட்டுக்கு கொண்டு வரக்கூடாது. பறக்கும் நேரமென பார்த்தால் 15 – 30 நிமிடங்கள் அதிகமாக வரப்போகிறது. ஏற்கனவே திருச்சி – சென்னை எட்டுவழிச்சாலை திட்டம் அனுமதிக்கும் நிலையில் இருக்கிறது. திருச்சி இரண்டாம் தலைநகராக அறிவிக்கும் தகுதியுள்ள நகரம் தான். அல்ரெடி கொஞ்சம் நல்ல ஹோட்டல்கள் இருக்கிறது. விமான நிலையம் வருகிறது என்றால் பூரா பேறும் இடத்தை வாங்கி கட்டிருவாங்க.  எந்த பக்கமும் நகரில் இருந்து வெளியேறும் வசதியும், தேவையான தொழில் வளமும் உள்ள நகரம் தான்.

இந்த வார அங்குசம் வார இதழில்…

ஏற்கனவே, சென்னை என்பது செங்கல்பட்டு தாண்டியதும் தொடங்கிவிட்டது. இன்னும் உள்ளே பிதுங்கி வழிய விடாமல் கொஞ்சம் நகரலாம். சென்னைக்கு விமானநிலையம் முழு பயன்பாட்டுக்கு வந்த பிறகு தான் சென்னை கொஞ்சம் மேம்பட்டது. அதே போல் திருச்சியில் சில போதாக்குறைகள் இருந்தாலும் விமானநிலைய பணிகள் தொடங்கினாலே அவையெல்லாம் சரிசெய்யப்பட்டுவிடும்.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

சினிமா கனவில் சென்னையை முற்றுகையிட்ட காலம் போய் இப்ப எல்லாரும் சென்னை நோக்கி நகரும் சூழலில் சென்னையை தவிர்த்து வேறு நகரங்களில் கவனம் செலுத்தலாம்.

கொசுறு  புதிய சட்டமன்றத்தை மதுரையில் கட்டுங்கள்…  எப்டியும் எம் எல் ஏக்கள் சென்னைக்கு வர பஞ்சப்படி பயணப்படி டிரைவர்படி நாள்ப்படினு ஏகப்பட்ட படிப்பணம் எங்கள்ட்ட இருந்துதான் வாங்கி கொடுக்கிறிங்க. அப்ப அத எங்க கட்டுனா என்ன ?

—   பா. சரவணகாந்த்

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.