‘இம்மார்டல்’ சக்சஸ் மீட்டில் இன்ப அதிர்ச்சி கொடுத்த தயாரிப்பாளர்!
அருண்குமார் தனசேகரன் தயாரிப்பில், ஜிவி பிரகாஷ் மற்றும் கயாது லோஹர் நடிப்பில், அறிமுக இயக்குநர் மாரியப்பன் சின்னா இயக்கத்தில் கடந்த 04- ஆம் தேதி ரிலீஸ் ஆன ‘இம்மார்டல்’ படம் ஹிட்டானது. இதற்கான சக்சஸ் மீட் செப்டம்பர் 09- ஆம் தேதி மாலை நடந்தது.
அப்போது ஹீரோ ஜிவி பிரகாஷ், விநியோகஸ்தர் சக்திவேலன் முதலானவர்களுக்கு தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரன் உயர்தர கைக்கடிகாரம் ஒன்றையும் ஜிவி பிரகாஷுக்கு யமஹா ஆர்எக்எஸ் 100 பைக் ஒன்றையும் பரிசளித்து இன்ப அதிர்ச்சி கொடுத்தார்.
நிகழ்ச்சியில் பேசியவர்கள்…
அருண்குமார் தனசேகரன்
“எங்கள் முயற்சிக்கு ரசிகர்கள் மற்றும் பத்திரிகை நண்பர்கள் அளித்த ஆதரவும், படத்தைப் பற்றிய சரியான விமர்சனங்களும் மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது.
இந்தப் படத்திற்கு முழு ஒத்துழைப்பு வழங்கிய நடிகர் ஜிவி பிரகாஷுக்கு எனது நன்றி. படத்தின் படப்பிடிப்பு தொடங்கி, வெளியீடு மற்றும் புரமோஷன் பணிகள் வரை ஜிவி பிரகாஷ் அளித்த ஆதரவு மிகச் சிறப்பாக இருந்தது.
ஒளிப்பதிவாளர் அருண் ராதாகிருஷ்ணன்,
எடிட்டர் ராஜேஷ் , நடிகர்கள் டி எம் கார்த்திக், குமார் நடராஜன், நடிகை மிருதுளா ஆகியோர் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர்.
சக்திவேலன்
“இதுவரை ஜி.வி.பிரகாஷின் ஏழு படங்களை வினியோகம் செய்திருக்கிறேன்; அந்த ஏழு படங்களுமே எனக்கு வெற்றிப் படங்கள்தான். அவரது கேரியரில் அதிக வசூல் செய்த ஐந்து படங்களில் நான்கு படங்கள் என்னுடைய வெளியீடுகள் என்பதும் பெருமை”
இசையமைப்பாளர் சாம் சி.எஸ்.
“படம் நிச்சயம் வெற்றிப்படமாகும் என்ற நம்பிக்கை ஆரம்பம் முதலே எனக்கு இருந்தது. அது ஓவர் கான்ஃபிடென்ஸ் இல்லை. படத்தைப் பார்த்தபோதே ரசிகர்களின் ரசனைக்கு ஏற்ற வகையில் இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் என்ற நம்பிக்கையில்தான் தொடர்ந்து பேசி வந்தேன். அந்த நம்பிக்கை தற்போது வெற்றியாக மாறியிருப்பது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது”.
இயக்குநர் மாரியப்பன் சின்னா
“ஒரு அறிமுக இயக்குநராக எனக்கு கிடைத்த இந்த ஆதரவு மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது”
ஜி.வி பிரகாஷ்
“படம் வெளியான முதல் நாளிலிருந்தே கிடைத்த வரவேற்பு எனக்கு மிகுந்த மகிழ்ச்சியை கொடுத்தது. இப்படம் டிரெண்டிங்கில் வருவதைப் பார்த்தபோது தயாரிப்பாளர் அருண்குமார் தனசேகரனின் மகிழ்ச்சியை நேரில் பார்க்க முடிந்தது”.
— ஆண்டவர்






Comments are closed, but trackbacks and pingbacks are open.