அங்குசம் பார்வையில் ‘டிரோன்ஸ்’

இந்த வார அங்குசம் இதழ் படிக்க..

தயாரிப்பு: ஜி.எம்.மோர்கன், டைரக்டர்: ராகவ் மிர்தாத், ஆர்டிஸ்ட்: டிராவிட் செல்வம், சித்தி இத்னானி, அஞ்சலி நாயர், சினிமாவாலா சதீஷ், தேவதர்ஷினி குரைஷி, ஆர்.ஜே.தீபக், கிரியேட்டிவ் தயாரிப்பாளர்: சினிமாவாலா சதீஷ், ஒளிப்பதிவு: ஜெயந்த் சேது, இசை: எஸ்.ஆர்.ஹரி,  எடிட்டிங்: சதீஷ் சூர்யா,ஆர்ட் டைரக்டர்: கிஷோர்,   பிஆர்ஓ: சதீஷ் ( எய்ம்).

சிட்டிக்குள்ள சுத்திக்கிட்டிருக்கும் டான்ஸிங் சைக்கோ கொலைகாரனைத் தேடி களத்தில் இறங்குகிறார் இன்ஸ்பெக்டர் சினிமாவாலா சதீஷ். இன்னொரு பக்கம் காலேஜில் சஸ்பெண்டான டிராவிட் செல்வம், அஞ்சலி நாயர், ஆர்.ஜே.தீபக் மூவரும் வீட்டுக்குப் போக முடியாமல், ‘பிளாக்ஹோல்’ என்ற சயிஸ்ஸ் லேப் வீட்டுக்குள் இருக்கும் குரைஷியின் உதவியைத் தேடிப் போகிறார்கள். உள்ளே போன அவர்களால் வெளியே வரமுடியவில்லை. இந்த நிலையில் தான்  அழகு தேவதை சித்தி இத்னானி, அதே வீட்டுக்குள் இருப்பதை ஒரு டிரோன் மூலமா கண்டு பிடித்து தனது காதலைச் சொல்கிறார் டிராவிட் செல்வம். அதன் பிறகு தான் அழகு தேவதையும் அவர் தான், சூன்யக்காரியும் அவர் தான் என்ற உண்மை தெரிந்து அதிர்ச்சியாகும் டிராவிட் செல்வமும் அஞ்சலியும் தீபக்கும் அங்கிருந்து தப்ப முயற்சிக்கிறார்கள். அவர்கள் தப்பினார்களா? சூனியக்கார கிழவியிடம் சிக்கினார்களா? என்பதற்கு க்ளைமாக்ஸில் நச்சுன்னு சீன் வைத்து இந்த டிரோன்ஸ் பயணம் முடிகிறது.

திருச்சியிலிருந்து முதல் இன்டர்நேஷனல் ரோட்டரி இயக்குநர்…

‘டிரோன்ஸ்’ சின்னச்சின்ன கேரக்டர்களில் தலைகாட்டிக்கிட்டிருந்த டிராவிட் செல்வம், இதில் ஹீரோவாக அறிமுகமாகியிருக்கார். சாஃப்ட் ஹீரோவுக்கான வேலையை கரெக்டா செஞ்சு பாஸும் ஆகிவிட்டார். சூனியக்கார கிழவியாகவும் [தேவதர்ஷினி] அழகு தேவதையாகவும் திடீர் திடீரென மாறும் சித்தி இத்னானியிடம் மாட்டிக் கொண்டு தவிக்கும் சீனில் டிராவிட்டுக்கு சபாஷ் போடலாம். இவரது நண்பி கருப்பட்டியாக அஞ்சலி நாயரும் ஓகே. க்ளைமாக்ஸில் அஞ்சலி பேசும் வெள்ளைத் தோல், கருப்புத் தோல் காதல் குறித்துப் பேசும் வசனம் பளீர் ரகம்.

அளவான சதைப்பிடிப்புடன்,  கன்னக்குழி அழகி சித்தி இத்னானி வெள்ளை உடை அழகு தேவதையாக மனதை கொள்ளையடிக்கிறார். இதுவும் போக ரோபோவாகவும் அட்ராக்ட் பண்ணுகிறார். சூனியக்காரக் கிழவியாக சீனியர் நடிகை தேவதர்ஷினி தான் டிரோன்ஸின் சார்ஜிங் பேட்டரி.

அங்குசம் குழுமத்துடன் இணைந்து பணியாற்ற வாய்ப்பு.

'Drones'தீபக்கும் குரைஷியும் காமெடி ஏரியாவில், டயலாக் டெலிவரியில்  ஓரளவு நம்பிக்கை தருகிறார்கள். இன்ஸ்பெக்டராக வரும் சினிமாவாலா சதீஷ் புரபோஸ் பண்ணும் பெண்களெல்லாம் செத்துப் போவது, அதிலும் பூங்காவில் ஒரு பெண் சிலையே தலைவெடித்துச் சிதறுவது, தேவதர்ஷினி ஏன் அப்படி ஆனார் என்பதற்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முந்தைய ஃப்ளாஷ்பேக், அதைத் தொடர்ந்து வரும் ஆண்கள் கூட்டம், பிளாக்ஹோல் வீட்டின் உள்புறம், இதெல்லாமே டைரக்டர் ராகவ் மிதார்த்தின் அபாரமான ஸ்கிரீன் சென்ஸுக்கு விட்னெஸ். சிவப்புத் தோலுடன் இருந்தால் தேவதை, கருப்புத் தோலுடன் இருந்தால் சாத்தான் என காலம்காலமாக நம்ப வைக்கப்பட்டிப்பதை க்ளைமாக்ஸில் உடைத்தெரிந்திருப்பதற்காகவே  ராகவ் மிதார்த்தை மனசாரப் பாராட்டலாம். இதையே மெயின் மேட்டராக வைத்து ஃபுல் படத்தையும் கொண்டு போயிருந்தால் படம் அதிரிபுதிரியாக ஹிட் அடித்திருக்கும். ஆனால் டைம் டிராவல், மேஜிக் ஹவுஸ், சூனியகாரக் கிழவி, டான்ஸிங் சைக்கோ கொலைகாரன்னு எல்லா ஐயிட்டங்களையும் போட்டு அவியல் பண்ணலாம்னு நினைச்சிருக்காரு. அது பாதி அவிஞ்சு, மீதியில் உப்பு, உரைப்பு கம்மியாகிருச்சு. பிளாக்ஹோல் வீடு, அதற்குள் இருக்கும் வித்தியாசமான மினியேச்சர்கள் இதையெல்லாம் திரையில் கொண்டு வந்த ஆர்ட் டைரக்டர் கிஷோரை கண்டிப்பா பாராட்டியே ஆகவேண்டும்.

ராகவ் மிதார்த்தின் கற்பனைத் திறன் நல்ல வளத்துடன், முற்போக்குத்தனத்துடன் தான் இருக்கிறது.

அங்குசம் பார்வையில் ‘டிரோன்ஸ்’ 52/100

—    ஆண்டவர்  

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

Comments are closed, but trackbacks and pingbacks are open.