கண் நீர் அழுத்த விழிப்புணர்வு வாரம் ! திருச்சி தி ஐ ஃபவுண்டஷன் கண் மருத்துவமனையில் இலவச பரிசோதனை !
விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு ஒரு வாரம் (10.03.2024 முதல் 16.03.2024) மருத்துவமனையில் நோயாளிகளுடன் வருபவர்களுக்கு கண் நீர் அழுத்த பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது.
உலக கண் நீர் அழுத்த விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, 13.03.2024 புதன் கிழமை அன்று திருச்சி தி ஐ ஃபவுண்டஷன் கண் மருத்துவமனையில் கண் நீர் அழுத்த விழிப்புணர்வு மனித சங்கிலி நடைபெற்றது.
இந்த மனித சங்கிலிக்கு தலைமை மருத்துவர் Dr. அர்ச்சனா தெரசா தலைமை வகித்தார். பொது மேலாளர் உலகநாதன் முன்னிலையில் நடைபெற்ற இந்த விழிப்புணர்வு மனித சங்கிலியில் மருத்துவமனையின் மருத்துவர்கள் மற்றும் அனைத்து ஊழியர்கள் கலந்து கொண்டனர். ஊழியர்கள் தங்கள் கரங்களில் விழிப்புணர்வு பதாகைளை ஏந்தி நின்றனர்.
மன அழுத்தம் உடல் நலத்தைப் பாதிக்கும்.
கண் நீர் அழுத்தம் கண் பார்வையை பாதிக்கும் !
கண் நீர் அழுத்த விழிப்புணர்வு வாசகங்களை ஊழியர்கள் கூறி பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தினர். மேலும் இந்த விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு ஒரு வாரம் (10.03.2024 முதல் 16.03.2024) மருத்துவமனையில் நோயாளிகளுடன் வருபவர்களுக்கு கண் நீர் அழுத்த பரிசோதனை இலவசமாக செய்யப்படுகிறது. கண் நீர் அழுத்த சிறப்பு மருத்துவர் Dr. அர்ச்சனா கண் நீர் அழுத்த நோய் பற்றிய விழிப்புணர்வை மக்களுக்கு எடுத்து கூறினார் முடிவில் திருமதி.ஜெகதீீஸ்வரி நன்றி உரை வழங்கினார்.
– இரா.சந்திரமோகன்.