”மதுரை” மாவட்டத்தில் கஞ்சா பதுக்கல் கும்பல் கைது!
மதுரையில் இருசக்கர வாகனங்கள் அதிகமாக திருடு போய்க் கொண்டிருக்கிறது அதை தடுப்பதற்காக மதுரை காவல் ஆணையர் லோகநாதன் உத்தரவின் பேரில் விளக்குத்துன் காவல் உதவி ஆணையர் சூரக்குமார் தலைமையில் காவல் ஆய்வாளர்கள் மகேஷ் குமார் மற்றும் சங்கர் கண்ணன் ஆகியோர் கீழமாசி வீதி பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபோது,
இருசக்கர வாகனத்தில் வந்த வடமாநில ராஜஸ்தானை சேர்ந்த காந்தி லால் என்ற இளைஞர் காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணனை கண்டதும் இரு சக்கர வாகனத்தில் ஓட அவரை விரட்டி பிடித்து அவரது வாகனத்தில் வைத்திருந்த மூடையை சோதனை செய்தபோது தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பொருள் குட்கா, கூல்லிப் பார்சலை தனது இரு சக்கர வாகனத்தில் வைத்திருந்ததை கண்டறிந்த காவல் ஆய்வாளர் சங்கர் கண்ணன் அவரைப் பிடித்து விசாரணை செய்ததில்,
தான் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவன் ரயில் மூலம் தனது நண்பர் கடை பழைய சொக்கநாதர் கோவில் தெருவில் உள்ளது அங்கு 21 பண்டல் சாக்கு மூட்டை 206 கிலோ குட்கா பதுக்கி வைத்துள்ளதை கூறவும் அதை கண்டறிந்து போலீசார் அங்கு நேரில் சென்று பதிக்க வைத்திருந்த மூட்டையையும் காந்தி லாலையும் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
…. ஷாகுல்.
படங்கள்: ஆனந்தன்