அமெரிக்காவில் ‘கேம் சேஞ்சர்’ ப்ரீ ரிலீஸ் ஈவெண்ட்!
ஷங்கர் இயக்கத்தில், ராம் சரண் இரட்டை வேடங்களில் நடித்துள்ள, ‘கேம் சேஞ்சர்’ படம், 2025 ஜனவரி 10-ஆம் தேதி உலகம் முழுவதும் ரிலீஸ் ஆகிறது. இப்படத்தினை ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன்ஸ் மற்றும் ஜீ ஸ்டுடியோஸ் ஆகிய நிறுவனங்களின் சார்பில் தில் ராஜு மற்றும் சிரிஷ் தயாரித்துள்ளனர்.
கேம் சேஞ்சர் படத்தின் தமிழ் பதிப்பினை, எஸ்விசி ஆதித்யராம் மூவீஸ் வழங்குகிறது. சென்னையில் சிறு அறிமுக நிகழ்ச்சி, உ.பி.தலை நகர் லக்னோவில் பிரம்மாண்ட நிகழ்ச்சி நடந்தது.
இதைத் தொடர்ந்து இந்திய சினிமாவில் முதன்முறையாக, கேம் சேஞ்சர் படக்குழு, அமெரிக்காவின் கார்லண்ட்டில் 2024 டிசம்பர் 21-ஆம் தேதி பிரம்மாண்டமான முன் வெளியீட்டு நிகழ்வை நடத்துகிறது.
கரிஸ்மா ட்ரீம்ஸின் ராஜேஷ் கல்லேபள்ளியால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்த கொண்டாட்டம், தெலுங்கு மற்றும் இந்திய சினிமாவில் முக்கிய நிகழ்ச்சியாக கருதப்படுகிறது.
அமெரிக்காவின் டல்லாஸில் வசிக்கும் ராஜேஷ் கல்லேபள்ளி, தொழில் முனைவோர் மற்றும் தகவல் தொழில்நுட்ப ஆலோசனை, உணவகச் சங்கிலிகள், ரியல் எஸ்டேட், திரைப்படத் தயாரிப்பு மற்றும் விநியோகம் போன்ற பல்வேறு துறைகளில் களம் இறங்கியுள்ளார். இம்மாதிரி நிகழ்வை மிகப் பெரிய அளவில் நடத்துவதில் சிறந்தவர்.
ராம் சரண் மீதான அபிமானத்தால் ராஜேஷ் கல்லேபள்ளி இந்த மிகப்பெரிய பணியை மேற்கொண்டுள்ளார். இது குறித்து ராஜேஷ் பேசும் போது “இந்தியப் படமொன்றுக்கு அமெரிக்காவில் முதன்முறையாக இந்த அளவிலான ப்ரீ-ரிலீஸ் நிகழ்வை நடத்துவது பெருமையாக உள்ளது. இந்த வாய்ப்பினை வழங்கிய ராம் சரண், இயக்குநர் ஷங்கர், தயாரிப்பாளர் தில் ராஜு மற்றும் ஷிரிஷ் ஆகியோருக்கு நன்றி”. என்கிறார்.
தொடர் செய்திகளுக்கு அங்குசம் இதழ் வாட்ஸ்ஆப் சேனலில் இணைய இங்கே கிளிக் செய்யவும்.
படத்தின் கதையை கார்த்திக் சுப்புராஜ் எழுதியுள்ளார். எஸ்.எஸ்.தமனின் இசை, சாய் மாதவ் புர்ராவின் வசனங்கள் மற்றும் நட்சத்திரத் தொழில்நுட்பக் கலைஞர்களின் உழைப்பில், படம் மிக அற்புதமான சினிமா அனுபவமாக இருக்கும் என்கிறார்கள்.
— மதுரை மாறன்.