டாப்-5 இல் இந்தியா – DRDO விஞ்ஞானி தில்லி பாபு பெருமிதம் !
சிவகாசியில் தனியார் கல்லூரியில் இந்தியாவின் முதல் இளைஞர் விண்வெளி அறிவியல் மாநாடு நடைபெற்றது. விருதுநகர் மாவட்டம் சிவகாசி ஸ்ரீ காளீஸ்வரி கல்லூரியில் தேசிய இளைஞர் வானியல் விண்வெளி அறிவியல் மாநாட்டை தமிழ்நாடு அஸ்ட்ரானமிக் சயின்ஸ் சொசைட்டி மற்றும் தமிழ்நாடு வானியல் அமைப்புகளின் கூட்டமைப்பு சார்பில் இந்த நிகழ்ச்சி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
மாநாட்டில், தமிழ்நாடு முழுவதும் இருந்து 600-க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள் 170 குழுக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டு புதுமையான வானியல் மற்றும் விண்வெளி தொடர்பான திட்டங்கள் தொடர்பாகவும் தொலைநோக்கி அறிவியல் செயல்முறை காட்சிகள் மூலம் மாணவ மாணவியர்களுக்கு விளக்கம் அளிக்கப்பட்டது.

நிகழ்ச்சியில் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பேசிய பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி அமைப்பு (DRDO) விஞ்ஞானி டாக்டர் தில்லி பாபு வாழ்க்கையில் சவால்கள் வரும் போராட்டம் வரும் இந்த தேசம் அற்புதமான தேசம் நான் ஒரு பைசா கூட லஞ்சம் கொடுக்காமல் விஞ்ஞானியாக இருக்கிறேன்.
இந்திய நாடு வளர்ந்து கொண்டிருக்கிறது நம் நாட்டில் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் கல்வி துறையில் சாதிப்பதற்கான பிரகாசமான எதிர்காலம் உள்ளது.
ஐக்கிய நாடு சபையில் 193நாடுகள் உள்ளது, வெறும் 7 நாடுகளில் மட்டும்தான் நவீன போர் விமானங்களை உருவாக்கும் தொழில்நுட்பம் இருக்கிறது. அதில் நம்முடைய இந்தியாவும் ஒன்று. அதேபோல் உலகத்தில் 6 நாடுகளில் மட்டும்தான் அணுசக்தியினால் இயங்கும் நீர் மூழ்கி கப்பல் உள்ளது. அந்தப் பட்டியலில் நம்முடைய இந்தியாவும் உள்ளது.
உலகில் 5 நாடுகளில் தான் நவீன ஏவுகணை தொழில்நுட்பம் இருக்கிறது அதிலும் இந்தியா உள்ளது. உலகத்தில் 4 நாடுகள்தான் நிலவில் செயற்கைக்கோள் சாப்ட் லேண்டிங் செய்து சாதனை படைத்துள்ளது அதிலும் நமது இந்தியா 3 வது இடத்தில் உள்ளது.
உலகத்தில் 2 நாடுகள் தான் மிக வேகமாக பறக்கக்கூடிய அதிநவீன ஏவுகணைகளை உருவாக்கி அதை ராணுவத்தில் சேர்த்திருக்க கூடிய நாடுகளில் இரண்டே நாடுகள் தான் உள்ளது.
ஒரு நாடு ரஷ்யா இன்னொரு நாடு நம்முடைய இந்தியா அந்த ஏவுகணையின் பெயர் பிரமோஸ் ஏவுகணை இப்படிப்பட்ட சிறப்புகள் வாய்ந்த இந்த தேசத்தில் இருக்கக்கூடிய மாணவ மாணவியர்கள் நீங்கள் உங்களுடைய யோசனைகளை தொடர்ந்து செயல்படுத்தி களமாடி பல்வேறு துறைகளில் வெற்றி பெற்று சாதனை படைக்க என்னுடைய வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.
–– மாரீஸ்வரன்