உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பசுமை சான்றிதழ் பெற்ற திருச்சி காவேரி மருத்துவமனை !
சுற்றுச்சூழலுக்கு உகந்த மற்றும் நிலைத்தன்மை கொண்ட மருத்துவ கட்டமைப்பை உருவாக்குவதில் தனது அர்ப்பணிப்பை வெளிப்படுத்தும் வகையில், காவேரி மருத்துவமனைக்கு Green Business Certification Inc. (GBCI) நிறுவனத்தால் LEED Certified Silver சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.
இந்த சான்றிதழை GBCI நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியா மற்றும் மத்திய கிழக்கு சந்தைகளுக்கான மேலாண்மை இயக்குநர் கோபால்கிருஷ்ணன் வழங்க, காவேரி மருத்துவமனையின் இணை நிறுவனர் மற்றும் நிர்வாக இயக்குநர் டாக்டர். D. செங்குட்டுவன் பெற்றுக்கொண்டார்.
இந்த சாதனை, பசுமை கட்டிடத் தர நிலைகள் மற்றும் சுற்றுச்சூழல் நலனுக்கான மருத்துவ நடைமுறைகள் மீது காவேரி மருத்துவமனை காட்டும் அர்ப்பணிப்பை வலியுறுத்துகிறது. புதுப்பிக்கத்தக்க ஆற்றல் உற்பத்தி, திறமையான நீர்மேலாண்மை, மற்றும் சுற்றுச்சூழலுக்கு உகந்த மருத்துவ செயல்பாடுகள் போன்ற முயற்சிகள் மூலம், காவேரி மருத்துவமனை தனது உலகத் தரமான சிகிச்சை சேவையை வழங்கும் நோக்கத்தை சுற்றுச்சூழலை பாதுகாக்கும் வகையில் முன்னெடுத்து வருகிறது.
இந்த முக்கியமான தருணத்தைப் பற்றி கருத்து தெரிவித்த டாக்டர். D. செங்குட்டுவன் , “காவேரியில், நாங்கள் நோயாளி பராமரிப்பைத் தாண்டி, சுற்றுச் சூழலையும் பாதுகாக்கும் பொறுப்பை ஏற்கிறோம். மருத்துவ சேவையில் சுற்றுச்சூழலுக்கு உகந்த நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலம், எங்கள் ஆற்றல் சேமிப்பு, நீர் மறுசுழற்சி மற்றும் புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டில் மேற்கொண்ட முயற்சிகளுக்கான அங்கீகாரமாக இந்த LEED வெள்ளி சான்றிதழ் கிடைத்துள்ளது.”
இந்த சான்றிதழ் மூலம், காவேரி மருத்துவமனை உலகளவில் அங்கீகரிக்கப்பட்ட பசுமை சான்றிதழ் பெற்ற நிறுவனங்களின் பட்டியலில் இணைந்து, இந்தியாவில் நிலைத்தன்மை கொண்ட மருத்துவ சேவையில் முன்னணி இடத்தைப் பெற்றுள்ளது.
— அங்குசம் செய்திப்பிரிவு.