அங்குசம் வாட்ஸ் ஆப் சேனலில் இணையுங்கள்...

மு.க.ஸ்டாலின் மீண்டும் முதலமைச்சராக வேண்டும் ஏன் ?

திருச்சியில் அடகு நகையை விற்க

* 2021 ல் ஆட்சிக்கு வந்ததும் பெட்ரோல் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தார்

* ஆட்சிக்கு வந்ததும் ஆவின் பால் விலையை லிட்டருக்கு 3 ரூபாய் குறைத்தார்

இந்த வார JANUARY - 28 அங்குசம் இதழில்…2026 ANGUSAM WEEKLY BOOK

* கொரோனா நிவாரணத் தொகையாக 4000 ரூபாய் கொடுத்தார்

* கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளின் பெயரில் ஐந்து லட்சம் ரூபாய் வங்கி வைப்பு நிதி         வைத்தார்

2026 யாவரும் கேளீர் ஏப்ரல் மாத இதழ்

* கொரோனாவால் பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கு உடனடியாக மூன்று லட்சம் ரூபாய் வழங்கினார்

* கொரோனாவில் பெற்றோரை இழந்த குழந்தைகளை பராமரிக்க அவர்களின் உறவினர்களுக்கு 3,000 ரூபாய் ஒவ்வொரு மாதமும் வழங்கினார்

* ஸ்டாலின் பதவி ஏற்கும் போது 0 . 07 ஆக இருந்த தமிழ்நாட்டின் பொருளாதாரத்தை 11.19 விழுக்காடாக உயர்த்தினார்

* 87 மாணவர்களை நான் முதல்வன் திட்டத்தின் மூலம் ஐஏஎஸ் , ஐ பி எஸ் ஆக்கினார்

* 1 கோடியே 31 லட்சம் பெண்களுக்கு மகளிர் உரிமைத் தொகையாக மாதம் 1000 ரூபாய்  தந்தார்

* சென்னையில் கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு பன்னோக்கு மருத்துவமனை திறந்தார்

* மதுரையில் தமிழர்களின் பெருமையை உலகறியச்  செய்ய கீழடி அருங்காட்சியகம் அமைத்துத்  தந்தார்

*  நெல்லையில் இரும்பின் காலம் தமிழ்நாட்டில் இருந்துதான் தொடங்கியது என்பதனை  உலகறிய செய்ய பொருநை அருங்காட்சியகத்தை திறந்தார்

* மதுரையில் பிரம்மாண்டமாக உலகத்தரத்தில் கலைஞர் நூற்றாண்டு நூலகத்தை திறந்து உள்ளார். நெல்லையிலும் ,கோவையிலும் பிரம்மாண்டமாக நூலகங்கள் திறக்கப்பட உள்ளன

*  சென்னையில் பிரம்மாண்டமான அதிநவீன கிளாம்பாக்கம் பேருந்து நிலையத்தின் பணிகளை முடித்து வைத்து திறந்து வைத்தார்

* திருச்சியில் உலகத்  தரத்தில் அதிநவீன பிரம்மாண்டமான குளிரூட்டப்பட்ட பேருந்து நிலையத்தை கட்டி முடித்து திறந்து வைத்தார்

* பொங்கல் பரிசுத் தொகையாக ரூபாய் 3000 தந்தார்

* மகளிர் உரிமைத் தொகையை நிறுத்துவதற்கு சதி செய்தபோது மகளிர் உரிமைத் தொகையோடு கோடைக்கால சிறப்பு நிதி  2000 ரூபாய் சேர்த்து 5000 ரூபாய்  கொடுத்தார்

* கோவையில் தமிழ்நாட்டின் மிக நீளமான10.1 கி.மீ தூரத்திற்கு  ஜிடி நாயுடு உயர் மட்ட மேம்பாலத்தை திறந்து வைத்தார்

* சென்னையில் மெட்ரோ இரண்டாம் கட்டப்  பணிகளை நிறைவு செய்து மக்களின் பயன்பாட்டிற்கு ஓரிரு மாதங்களில் கொண்டு வர உள்ளார்

* 32 அரசு கலைக்கல்லூரிகளை திறந்து உயர்க்  கல்வியை மேம்படுத்தினார்

* காலை உணவு திட்டத்தை தொடங்கி வைத்து தொடக்கக்  கல்வியில் இடைநிற்றலே இல்லாத மாநிலம் என்று நிலையை உருவாக்கினார்

* குஜராத்தை பின்னுக்குத் தள்ளி ஜவுளி ஏற்றுமதியில் தமிழ்நாட்டை இந்தியாவின் முதல் மாநிலமாக மாற்றினார்

* தூத்துக்குடி , சென்னை உள்ளிட்ட இடங்களில் பன்னாட்டு கார் தொழிற்சாலைகளை தொடங்கி பல்லாயிரக்கணக்கான  பட்டதாரி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை  உருவாக்கி தந்தார்

*  சமூக நீதியின் அடையாளமாக பெண்களுக்கு உள்ளாட்சியில் 50% தந்து 11 பெண்களை மேயர்களாக பதவி ஏற்க வைத்து சமூக நீதியை காத்தார்

* இரண்டு லட்சம் விவசாயிகளுக்கு புதிதாக இலவச மின் இணைப்புகளை கொடுத்தார்

* எழுவர் விடுதலையை சாத்தியமாக்கி காட்டினார்

* இஸ்லாமிய சிறைவாசிகளின் விடுதலையை சட்ட விதிமுறைகளுக்கு உட்பட்டு செய்து காட்டினார்

2026 - அங்குசம் தேர்தல் களம் - வீடியோ பார்க்க

* 5000 கோவில்களுக்கு திருக்குட முழுக்கு நடத்தி ஆன்மீகவாதிகளை மகிழ்ச்சியில் ஆழ்த்தினார்

* சென்னை விமான நிலையம் அருகே ஹஜ் பயணம் மேற்கொள்ளும் இஸ்லாமிய பயணிகள் தங்குவதற்காக ஹஜ் இல்லம்  கட்டி வருகிறார்

* ஆண்டாண்டு காலமாக முடக்கப்படும் மகளிர் வாழ்வு மேம்பட  மகளிர் விடியல் பயணம் திட்டத்தை தந்தார்

* மாற்றுத்திறனாளிகளுக்கும் அதிகாரம் கிடைக்கும் வண்ணம் உள்ளாட்சிகளில் அவர்களுக்கு நியமன பதவி தருவதற்கு ஆணை பிறப்பித்தார்

* நம்மை காக்கும் 48 என்ற திட்டத்தின் மூலம் விபத்துக்கான அவசர சிகிச்சைக்கான தனியார் மருத்துவமனையின் செலவை அரசே ஏற்கும் என அறிவித்து பல்லாயிரக்கணக்கான உயிர்களை காப்பாற்றித் தந்தார்

* அதிகார மமதையில்  ஆட்டம் போட்ட ஆளுநர்களின் ஆணவத்திற்கு சட்டத்தின் துணைகொண்டு முற்றுப்புள்ளி வைத்தார்

* அரசு ஊழியர்களின் பல்லாண்டு கால  கோரிக்கையான ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்தி அவர்களின் வயிற்றில் பாலை வார்த்தார்

* புரட்சியாளர் அம்பேத்கர் பிறந்த நாளை சமத்துவ நாளாக அறிவித்து அரசு அலுவலகங்களில் உறுதிமொழி ஏற்கும்படி செய்தார்

* தந்தை பெரியாரின் பிறந்த நாளை “சமூக நீதி நாளாக” அறிவித்து பெரியார் புகழுக்கு மேலும் புகழ் சேர்த்தார்

* பெருந்தலைவர் காமராஜர் பிறந்த நாளை “கல்வி வளர்ச்சி நாளாக” அறிவித்து  அரசு அலுவலகங்கள் அனைத்திலும் உறுதிமொழி ஏற்று கொண்டாடும் விதமாக ஆணை பிறப்பித்தார்

*  செக்கிழுத்த செம்மல் வ உ சி அவர்களின் நினைவு தினத்தை “தியாகத்திருநாளாக” அறிவித்து அவரின் தியாகத்தை போற்றினார்

* வன்னியர்களுக்கான இட ஒதுக்கீட்டிற்காக போராடியதால் அதிமுக ஆட்சியில் சுட்டுப்  படுகொலை செய்யப்பட்ட 21 சமூக நீதிப் போராளிகளின்

தியாகத்தை போற்றும் வகையில் சமூக நீதிப் போராளிகளுக்கு மணிமண்டபம் கட்டி திறந்து வைத்தார்

* தமிழ் புதல்வன்,  புதுமைப்பெண் உள்ளிட்ட திட்டங்களின் கீழ் மாணவ , மாணவியர்கள் உயர்கல்வி பயில்வதற்கு 1000 ரூபாய் கல்வி உரிமைத் தொகை வழங்கியதன் மூலம் உயர்கல்வி சேர்க்கையில் தமிழ்நாட்டு மாணவர்களின் எண்ணிக்கையை  உயர்த்தி சாதனை படைத்தார்

* மக்களைத்  தேடி மருத்துவம் திட்டத்தின் மூலம் மருத்துவமனைக்கு நேரில் வர இயலாத முதியவர்கள், மாற்றுத்திறனாளிகள் ,  மலைவாழ் பழங்குடியின மக்கள் உள்ளிட்டோரின்வீடுகளுக்கே  தேடிச்சென்று மருத்துவ சேவையை  தந்து அவர்களின் வாழ்வு மேம்பட வழி வகை செய்தார்

* மதுரையில் சர்வதேச தரத்தில் ஜல்லிக்கட்டு மைதானம் கட்டி திறந்து வைத்தார்

* பெரியாரின் நெஞ்சில் தைத்த முள்ளாக இருந்த அனைத்துச்  சாதியினரும் அர்ச்சகர்கள் என்பதை சட்டமாக்கி சாதனை படைத்தார்

* மாணவர்கள் தங்கிப் பயிலும் விடுதிகள் சாதியின் பெயரால் அடையாளப்படுத்தப்படுவதை மாற்றுவதற்கு அவற்றிற்கு “சமூக நீதி விடுதிகள்” என்று பெயரிட்டு சாதனை படைத்தார்

* ஹிந்தி மற்றும் சமஸ்கிருதத்தை திணிக்க முயற்சி செய்த ஒன்றிய பாசிச பாஜக அரசின் சதியை முறியடித்து தமிழை காத்து தந்தார்

* தொகுதி மறு சீரமைப்பு என்ற பெயரில் தென்னிந்தியாவின் உரிமைகளை பறிக்க நினைத்த  பாசிச பாஜகவின் சதியை வீரத்துடன் போரிட்டு, முறியடித்து எல்லைச்சாமியாக தென்னிந்தியாவை காத்து நிற்கிறார்

* குமரிமுனையில் வள்ளுவர் சிலைக்கு உலகத்  தரத்தில் கண்ணாடி பாலத்தை அமைத்து தந்தார்

* சென்னையில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு புதிய உயர்மட்ட மேம்பாலங்களை அமைத்துத் தந்தார்

* 24 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள கர்ப்ப வாய் புற்றுநோய் தடுப்பூசியை பெண்களுக்கு இலவசமாக தந்தார்

* நமது தொப்புள் கொடி உறவுகளான இலங்கை மக்கள் வசிக்கும் ” அகதிகள் முகாம் ” என்பதை

“இலங்கை தமிழர் மறுவாழ்வு முகாம் ”  எனப்  பெயர் மாற்றம் செய்தார்.

இன்னும் நீளும் இந்த பட்டியல்.  மனசாட்சியைத் தொட்டுச்சொல்லுங்கள் இதைவிட சிறந்த ஆட்சியை எடப்பாடி பழனிசாமியோ விஜயோ தருவார்கள் என்றா நம்புகிறீர்கள்.

-தி. செந்தில் வேல்.

திருச்சியில் நவீன மாடூலர் கிச்சன் -உங்கள் வீட்டிலும் | National Modular Kitchen #business #trending

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

வாட்ச்ஆப் குழுவில் இணைந்து கொள்ள இந்த லிங்கை பயன்படுத்தவுவம்

Comments are closed, but trackbacks and pingbacks are open.