சாத்தூர் அருகே பள்ளிக்குழந்தைகள் முன்பு அசிங்கமாக நடந்து கொண்ட மர்ம நபர் !
சாத்தூர் அருகே பள்ளிக்குழந்தைகள் முன்பு அசிங்கமாக நடந்து கொண்ட மர்ம நபர் !
விருதுநகர் மாவட்டம் சாத்தூர் தாலுகா மேட்டமலை கிராமத்திற்கு உட்பட்ட அரசு நடுநிலைப்பள்ளி செயல்பட்டு வருகிறது, 500க்கும் மேற்பட்ட மாணவ மாணவிகள், இந்தப் பள்ளியில் பயின்று வருகிறார்கள், இந்தப் பள்ளி வளாகத்தின் முன்பு இரவு நேரங்களில் சமூகவிரோதிகள் மது அருந்துவது மற்றும், கஞ்சா புகைப்பது போன்ற சட்டவிரோதமான செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்,
இதற்கும் ஒரு படி மேலே சென்று (50) வயது மதிக்கத்தக்க மர்ம நபர் ஒருவர் தனது இருசக்கர வாகனத்தில் வந்து பள்ளியின் முன்பு நின்று பள்ளிச் சிறுமிகளை ஆசிரியர்களை பார்த்து சுய இன்பம் செய்து அநாகரிகமாக நடந்து கொண்டுள்ளார்.


இதை பார்த்த மாணவ மாணவியர்கள் ஆசிரியர் இடம் தெரிவிக்கவே ஆசிரியர்கள் அந்த மர்ம நபரை பிடிக்க கூச்சலிட்டு அருகில் இருப்பவர்களை அழைப்பதற்குள், அந்த அடையாளம் தெரியாத மர்ம நபர் இருசக்கர வாகனத்தை வேகமாக எடுத்து ஓட்டம் பிடித்துள்ளார்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராவில் பதிவாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது, இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது இரவு நேரங்களில் சமூக விரோதிகள் மது அருந்துவது மற்றும் கஞ்சா புகைப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டு வருகிறார்கள்,
மேலும் அடையாளம் தெரியாத மர்ம நபர் பட்டப்பகலிலே இது போன்ற சம்பவத்தில் ஈடுபட்டு பள்ளிக்குச் செல்லும் எங்கள் குழந்தைகளுக்கு என்ன நடக்குமோ என்ற அச்சம் உள்ளதாகவும்,இந்த சம்பவம் எங்களுக்கு மிகுந்த மன வேதனை அளிப்பதாகவும், மேலும் உடனடியாக இந்த செயலில் ஈடுபட்ட மர்ம நபரை காவல்துறையினர் கைது செய்ய வேண்டுமென அந்தப் பகுதி பொதுமக்கள் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து சாத்தூர் நகர் காவல் துறையினர் அந்த மர்ம நபரை தேடி வருகின்றனர். இச்சையின் உச்சத்திற்கு சென்று, பொது இடத்தில் ஒன்றுமே அறியாத பிஞ்சுகளின் முன்னிலையில் ஒரு பள்ளி வளாகத்தின் முன்பு இது போன்ற செயலில் ஈடுபடுவது அந்த நபருக்குள் இருக்கும் மிருகத்தனத்தை வெளிக்காட்டுகிறது.
– மாரீஸ்வரன்
