குடும்ப பெண்களை குறிவைத்து  வீடியோ – 27 வயது ஜெகஜால கில்லாடியின்  வில்லங்க பக்கங்கள் !

ஒருவரால் அசாருக்கு காரியம் ஆக வேண்டுமா? சம்பந்தபட்டவர்களுக்கு அசாருதீனே தன் வலையில் வீழ்த்தப்பட்ட பெண் ஒருவரையே..

0

குடும்ப பெண்களை குறிவைத்து  வீடியோ – ஜெகஜால கில்லாடி 

உறையூர் அசாருதீன்
உறையூர் அசாருதீன்

வெளிமாநில பெண்களை வைத்து விபச்சார தொழிலில் ஈடுபட்டதாக திருச்சி உறையூரைச் சேர்ந்த 27 வயதான அசாருதீன் என்பவரை விபச்சார தடுப்புப்பிரிவு போலீசாரால் கைது செய்திருந்தனர். அவரைப் பற்றிய திடுக்கிடும் உண்மைகளும் வெளிச்சத்துக்கு வந்திருக்கின்றன.

அசாருதீனால் பாதிக்கப்பட்ட பெண்கள் தரப்பிலிருந்து பிரத்யேகமாக கிடைத்த தகவலின் அடிப்படையிலிருந்து அங்குசம் புலனாய்வுக்குழு நடத்திய கள விசாரணையில் கிடைத்திருக்கும் தகவல்கள் பகீரூட்டுகின்றன.

முகம்மது அசாருதீன் விபச்சார தொழிலையெல்லாம் நடத்தவில்லை. அதுக்கும் மேலே வேற லெவல் பிசினஸ் என்கிறார்கள். தொடக்கத்தில், திருச்சி சத்திரம் பேருந்துநிலையத்திலுள்ள பெரியசாமி  டவர்ஸில் செல்போன் கடை ஒன்றில் வேலை பார்த்து வந்த அசாருதீன், அங்கு தொழிலை கற்றுக்கொண்டு உறையூரில் தனியே ஷோரூமை திறந்திருக்கிறார்.

- Advertisement -

- Advertisement -

பாதி விலையில் பிராண்டட் டி.வி

தனிச்சிறப்பாக, பிராண்டட் டி.வி. விற்பணையில் இறங்கியிருக்கிறார். சோனி, சாம்சங், வீடியோகான் என எந்த பிராண்ட் டி.வி. கேட்டாலும் ஷோரும் விலையில் பாதி விலைக்கு இவரிடம் கிடைக்கும். பெயருக்கு அசெம்பள்டு டி.வி.யை பார்வைக்கு வைத்துவிட்டு வாடிக்கையாளர்கள் கேட்பதற்கேற்ப, அந்த பிராண்ட்க்குரிய சாப்ட்வேரை இன்ஸ்டால் செய்து ”பிராண்ட்” டி.வி.யாக உருமாற்றித் தருவதில் அசாருதீன் கில்லாடி என்கிறார்கள்.

மார்க்கெட்டில் நாற்பதாயிரத்துக்கு விற்பணையாகும் டி.வி. இவரிடம் வெறும் 12 ஆயிரத்துக்கு வாங்கிவிடலாமாம். திருச்சி ஏர்போர்ட்டில் சுங்க இலாகா அதிகாரிகளால் ’கணக்கில் காட்டப்படாமல்’ கைப்பற்றப்படும் டி.வி. உள்ளிட்ட மின்னணு சாதனங்களையும் வாங்கி – விற்பதில் வல்லவர் அசாருதீன் என்கிறார்கள்.

ஒருமுறை வாடிக்கையாளராக அறிமுகமாகும் அசாருதீனைவிட்டு, அடுத்து வேறொரு கடையைத் தேடி சென்றுவிடாத அளவுக்கு அவர்களின் மனதில் நிலையான இடம் பிடிப்பதில் அவருக்கு நிகர் எவருமில்லை என்கிறார்கள். வாடிக்கையாளர்களைத் தக்கவைப்பதற்காக, ஐயாயிரம் பெறுமானமுள்ள பொருளை நட்டப்பட்டு நாலாயிரத்துக்குக்கூட கொடுத்துவிடுவாராம்.

பெண் வீழ்த்த பயன்படுத்தும் யுத்தி 

இந்த வியாபார யுக்தியைத்தான், தனது கேடான நோக்கத்திற்கு உபயோகப்படுத்தி வழக்கில் சிக்கியிருக்கிறார், அசாருதீன். வாடிக்கையாளர்களாக அறிமுகமாகும்  இளம்பெண்கள், திருமணமான பெண்களுடன் நட்பு ரீதியில் பழகி, அவர்களின் நம்பிக்கைக்குரியவனாக முதலில் மாறிவிடுவாராம். அந்த நம்பிக்கையிலிருந்து பழகும் பெண்களை மயக்கி தனது ஆசை வலையில் வீழ்த்துவது அடுத்த நகர்வு. அவ்வாறு, ஆசை வலையில் வீழ்ந்த பெண்களை வீடியோவாக பதிவு செய்துவைத்துக்கொள்வாராம்.  இதுவரை எல்லா கிரிமினல்களும் செய்யக்கூடிய வழக்கமான ஒன்றுதான். இதற்கு அடுத்துதான், இருக்கிறது அசாருதீனுக்கே உரிய தனிச்சிறப்பான கிரிமினல் புத்தி.

எடுத்த வீடியோவை காட்டி சம்பந்தபட்ட பெண்ணை மிரட்டி தன்வயப்படுத்தி வைப்பது முதல்படி. தான் யாரை வீழ்த்த வேண்டும் அல்லது தன்வயப்படுத்த வேண்டும் என அசாருதீன் நினைக்கிறாரோ, அந்த நபருக்கு இரையாக தன் கைவசமுள்ள பெண்களை அனுப்பி வைப்பது.

4 bismi svs

கஸ்டம்ஸ் அதிகாரியை கரெக்ட் பண்ணுவது இப்படி தான் ! 

அதாவது, கஸ்டம்ஸ் அதிகாரி ஒருவரால் அசாருக்கு காரியம் ஆக வேண்டுமா? அசாருக்கு இடைஞ்சலாக இருக்கும் ஒருவரை ஆஃப் செய்ய வேண்டுமா? அதற்கேற்றவாறு, சம்பந்தபட்டவர்களுக்கு அசாருதீனே தன் வலையில் வீழ்த்தப்பட்ட பெண் ஒருவரை அனுப்பி வைப்பார். கூடவே, சம்பந்தபட்ட பெண்ணின் கணவருக்கும் இந்த தகவலை போட்டுக் கொடுப்பார். ஒரே கல்லில் இரண்டு மாங்காய்.

கையும் களவுமாக சிக்கியதால் கணவரின் ஆதரவை இழந்து, முழுக்க அசாருதீன் கட்டுப்பாட்டுக்குள் சம்பந்தப்பட்ட பெண் வந்து விடுவதோடு, இரையைக் காட்டி இலக்கு வைக்கப்பட்ட அந்த நபரும் அசாருதீன் வசம் ஆகியிருப்பார். அசாருதீனுக்கே உரிய தனிச்சிறப்பான இந்த கிரிமினல் மூளையும், பக்கா பிளானும் தான் இதுவரை எந்த ஒரு வழக்கிலும் சிக்காமல் தனது வேலையை தொடர கை கொடுத்திருக்கிறது.

இதுபோல, பல பெண்களின் வாழ்க்கையை நாசமாக்கியிருக்கிறார் இந்த அசாருதீன் என்கிறார்கள். கைப்பேசியிலிருந்து கைப்பற்றப்பட்ட வீடியோக்களை பார்த்து போலீசாரே ஒரு கணம் கலங்கிப் போய்விட்டார்களாம். போலீசார் தரப்பில் பாதிக்கப்பட்ட பெண்கள் சிலரிடம் விசாரணை நடத்தியிருக்கிறார்கள்.

இதோட விட்ருங்க ப்ளீஸ்

ஏற்கெனவே, இவனால வாழ்க்கையை இழந்து நிற்கிறோம். இதற்கு மேலும் அசிங்கப்பட விரும்பவில்லை. இதோட விட்ருங்க ப்ளீஸ்னு போலீசாரிடம் கையெடுத்துக் கும்பிடாத குறையாக மன்றாடியதாக சொல்கிறார்கள்.

இதே போன்று பாண்டிச்சேரியில் ஒரு பெண்ணிடம் பழகி அவருடைய வீடியோ எடுத்து அதை வைத்து பல இலட்சங்கள் கேட்டு இவன் மிரட்டி வாங்கியிருக்கிறானாம். இந்த மாதிரியான விவகாரத்திற்காகவே  இவனை தேடியும் பல கும்பல்  பல வழிகளில் தேடிக்கொண்டு இருக்கிறது என்கிறார்கள் அவனை பத்தி தெரிந்தவர்கள்…

இதுபோல, கஸ்டம்ஸ் அதிகாரி உள்ளிட்டு பலரையும் கைக்குள் போட்டுக்கொண்டு தில்லைநகரில் ஒரு ஷோரூம், மணப்பாறையில் ஒரு ஷோரூம். வீடு பக்கத்தில் ஒரு குடோன். 3 கார்கள். ஆடம்பர பைக்குகள் என வெறும் 27 வயதான அசாருதீன் பலகோடி ரூபாயை சம்பாதித்து செட்டில் ஆகிவிட்டார் என்கிறார்கள்.

பாதிக்கப்பட்டவர்களே யாரும் முன்வராத நிலையில் நாங்க மட்டும் என்ன நடவடிக்கையை எடுக்கிறதுனு ஒப்புக்கு ஒரு கேச போட்டு ஜெயில்ல தள்ளுனதோட கடமை முடிஞ்சிருச்சினு போலீசாரும் ஒதுங்கிட்டதாக சொல்கிறார்கள்.

விபச்சார தடுப்புப்பிரிவு போலீசார்தான் வழக்கை கையாளுவதாக  உறையூர் இன்ஸ்பெக்டர் சொல்ல, விபச்சார தடுப்புப்பிரிவு போலீசாரை அணுகினோம். “எங்களுக்கு கிடைத்த தகவலின் அடிப்படையிலிருந்து எஃப்.ஐ.ஆர். பதிவு செய்து கைது நடவடிக்கையை மேற்கொண்டோம்.

பாதிக்கப்பட்டவர்கள் யாரும் இதுவரை எந்த புகாரும் தரவில்லை. வழக்கு விசாரணையில் இருக்கிறது. விசாரணையில் இருக்கும் வழக்கில் நாங்கள் எந்த ஒரு தகவலையும் சொல்ல முடியாது.” என பட்டும்படாமல் பதிலளிக்கின்றனர்.

5 national kavi
Leave A Reply

Your email address will not be published.