டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் போது.. மரணம் அடைந்த பிரபல நடிகர் மாரிமுத்து !
மாரிமுத்து தமிழ்நாட்டின், தேனி மாவட்டத்தின் பசுமலை கிராமத்தைச் சேர்ந்தவர். திரைப்பட இயக்குநராக விரும்பிய மாரிமுத்து 1990 ஆம் ஆண்டு, தனது வீட்டை விட்டு சென்னைக்கு ஓடிவந்தார். துவக்கத்தில் உணவகங்களில் பணியாளராக வேலை செய்தார். பின்னர் ராஜ்கிரணிடம் உதவி இயக்குநராக இணைந்து அவரது படங்களான அரண்மனைக்கிளி (1993), எல்லாமே என் ராசாதான் (1995) படங்களில் பணிபுரிந்தார். பாடலாசிரியர் வைரமுத்துவுடன் இலக்கியம் வழியாக அறிமுகமானார்.
மாரிமுத்து பின்னர் மணிரத்னம், வசந்த், சீமான், எஸ். ஜே. சூர்யா உள்ளிட்ட திரைப்பட படைப்பாளிகளிடம் உதவி இயக்குநராக பணிபுரிந்தார். சிலம்பராசனின் அணியில் மன்மதன் (2004) படத்தில் இணை இயக்குநராக பணியாற்றினார். ஜி.மரிமுத்து கண்ணும் கண்ணும் (2008) படத்தில் இயக்குநராக அறிமுகமானார். பிரசன்னா, உதயதாரா ஆகியோர் நடித்த நடித்த காதல் படம் இது ஆகும். இந்த படம் வணிக ரீதியாக சிறப்பான வெற்றியை ஈட்டவில்லை, ஆனால் விமர்சன ரீதியான பாராட்டையும் பெற்றது.
பிஹைண்ட்வுட்ஸ்.காம் எழுதிய விமர்சனத்தில் “ஜி. மரிமுத்து, கதை, திரைக்கதை, உரையாடல், இயக்கம் ஆகியவற்றுடன் அறிமுகமானது படமான இதில் அண்மைய காலத்தில் மிகவும் தூய்மையான, மிகவும் நேர்மையான, அன்பான காதல் கதைகளில் ஒன்றை வழங்கியுள்ளார்”. [2] அதேபோல், சிஃபி.காம் எழுதிய விமர்சனத்தில், “தமிழ் திரைத்துறையில் துணிச்சலான புதிய இயக்குனர்களில் ஒருவராக மரிமுத்து வந்துள்ளார். இவர் வணிக வடிவத்திற்குள் தனது வித்தியாசமான காதல் கதையை வழங்க முயற்சிக்கின்றார்”. மரிமுத்து பின்னர் மலையாள திரைப்படமான சப்பா குரிஷு (2011) படத்தின் கதையைக் கொண்டு புலிவால் (2014) படத்தை உருவாக்கினார்.
2010 களில், இவர் நடிப்புத் தொழிலில் கவனம் செலுத்தி, தமிழ் படங்களில் துணை வேடங்களில் நடித்தார். மிஷ்கின் இவரை யுத்தம் செய் (2011) படத்தில் நடிகராக அறிமுகம் செய்தார். அதில் அவர் ஊழல் நிறைந்த காவல் அதிகாரியாக நடித்தார். படத்தின் வெற்றிக்குப் பிறகு ஆரோகனம் (2012), நிமிர்ந்து நில் (2014), கொம்பன் (2015) உள்ளிட்ட படங்களில் நடித்தார். பெரும்பாலும் காவல் அதிகாரியாக நடித்தார். விஷாலின் மருது (2016) படத்தில் இவரது நடிப்பானது இவரை கத்தி சண்டை (2016) படத்தில் ஒப்பந்தம் செய்ய தூண்டுதலானது.
பெரிய நடிகராக இயக்குநகராக வலம் வர ஆசைப்பட்ட மாரிமுத்து டிவி தொடர்களில்… நடிக்க காரணம்… எதிர்நீச்சல் சீரியலில் நடிக்க காரணம் அவரே…. சொன்ன காரணம்…
”சின்னத்திரையில் நடிக்க ராதிகா என்னிடம் சொல்லிக்கொண்டே இருந்தார். நான் சினிமா நல்லப்படியா போய்கிட்டு இருக்குன்னு சொல்லி சமாளிச்சிட்டேன். திடீர்ன்னு ஒருநாள் திருச்செல்வம் போன் பண்ணி பேசினார். அதற்கு முன்னால் நான் அவருடன் பேசியது கிடையாது. ஆனால் அவர் கோலங்கள் உள்ளிட்ட சில சீரியல்களை இயக்கியுள்ளார் என்பது தெரியும். என்னிடம் பேசிய திருச்செல்வம், இந்த மாதிரி சின்னத்திரையில் நீங்க எண்ட்ரீ கொடுக்க முடியுமா என கேட்டார்.
பெரிய கேரக்டர் என்றால் ஓகே என நான் சொன்னேன். உடனே எதிர்நீச்சல் சீரியலில் கதையை ஒரு 3 மணி நேரம் என்னிடம் சொன்னார். கிட்டதட்ட 1500 எபிசோட்கள் தயாரிப்பு தரப்பிடமிருந்து கேட்டிருப்பதாக கூறினார். ஆதி குணசேகரன் என்ற அந்த கேரக்டரில் நான் நடித்தேன். கிட்டதட்ட 4, 5 வருடங்கள் இந்த சீரியல் போகும். மாசத்துல 12 முதல் 15 நாட்கள் தேதி கொடுக்க முடியுமா என கேட்டார்.
நான் உடனே 3 நிபந்தனைகளை வைத்தேன். “நான் வசனங்களை பார்த்து படிக்க மாட்டேன், அப்படியே பேசமாட்டேன், சினிமாவில் வாங்கும் சம்பளத்தை விட கொஞ்சம் அதிகம் வேண்டும்” என திருச்செல்வத்திடம் சொன்னேன். அவரும் சரி என சொன்னார். முழுமூச்சாக சின்னத்திரையில் நடித்து வருகிறேன். இதுவரை ஒளிபரப்பான 313 எபிசோடில் 250க்கும் மேற்பட்ட எபிசோடில் நடித்துள்ளேன். இந்த சீரியலில் நடித்தப் பிறகு எங்கு போனாலும் கூட்டம். என்னை பாராட்டுகிறார்கள்” என மாரிமுத்து அந்த நேர்காணலில் தெரிவித்துள்ளார்.
இந்த டிவி சீரியலுக்காக டப்பிங் பேசிக் கொண்டிருக்கும் போது, பாதி பேசிக்கொண்டு இருக்கும் போதே…. தீடிர் என வெளியே சென்றவர்… அப்படியே வண்டியை எடுத்துக்கொண்டு சூர்யா மருத்துமனைக்கு சென்று இருக்கிறார்.. அப்போது அங்கே. திடீர் மாரடைப்பால் காலமானார் என்கிற தகவல் வெளியாகி உள்ளது… இவருடைய மறைவுக்கு ரசிகர்கள் மற்றும் பிரபலங்கள் தங்களுடைய இரங்கலை தெரிவித்து வருகிறார்கள்.